@U2Brutus_off ஆதவ் திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் உன்னை போல வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ..
என்பது உனக்கே தெரியும் இருப்பினும் வயிற்று பிழைப்பிற்காக எதையாவது கிளப்பி விடுவது ...த்தூதூதூ
தோழர் @aloor_ShaNavas பேசியது போல் பொய் செய்தி பதிவதும், விசிகவை விட்டு விலகுகிறார் என வதந்தி பரப்புவதும் கண்டிக்கத்தக்கது.
அவர் விசிக வின் முதன்மை செயலாளராக தற்போதைய அரசியல் முடிவு ஆலோசனைகளில் கலந்து கொண்டு அவற்றை மனதார ஏற்று , தொடர்ந்து பயணிக்கிறார்.
"அனைவரும் புத்தாண்டு கொண்டாடிக்கொண்டிருந்த போது 5000 பேரைத் திரட்டி புதுக்கோட்டையில் வேங்கைவயல் கொடூரத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவன் திருமாவளவன். அதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்!
பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பக்கம் நின்று முதல் குரல்கொடுப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் தான்"
ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற்றக் கோரி பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரையில்...
@airportmoorthy லூசு...பு...ட மேடை போட்டு கொடுத்து தலைவரை இழிவுபடுத்தும் வகையில் பேச வைத்து ராசித்த போது இது உனக்கு தெரியாதா , ஏர்போர்ட் திருடன் வைத்திருக்கும் இயக்கமும் விசிக வும் ஒன்றா..த்துதுது
திருமா பயிலகத்தில் போட்டித் தேர்வுத் தொடர் தொடங்குகிறது!
~~~~~~~~~~
சென்னை அசோக்நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் அமைந்துள்ள திருமா பயிலகத்தில் TNPSC தேர்வுக்கு தேர்வுத்தொடர் வரும் ஞாயிறு (18-5-2025) காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது.
மொத்தம் 10 தேர்வுகள் கொண்ட இந்த தேர்வுத் தொடரில் அந்தந்த பாடத்திட்டதிற்கு ஏற்ப துறை சார் வல்லுனர்களை கொண்டு கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொது அறிவுக்கான 100 கேள்விகள் மற்றும் தமிழ் பாடத்துக்கான 100 கேள்விகள் என ஒவ்வொரு தேர்வும் 200 கேள்விகளை கொண்டது. பொது அறிவுக்கான 100 கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
இப்போட்டித் தேர்வுத் தொடரில் முதல் நான்கு இடங்களை பெறும் போட்டியாளர்களுக்கு முறையே 1.ரூ.20,000
2.ரூ.15,000
3.ரூ.10,000 மற்றும்
4.ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.போட்டித் தேர்வில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இந்த தொடரில் பங்கேற்று பயனுற வேண்டுகிறேன். மேலும், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 19 கிளைகளிலும் இத்தேர்வுத் தொடர் நடைபெறும்.
இவண்
தொல்.திருமாவளவன்
காப்பாளர்
திருமா பயிலகம்.
மேலும் விவரங்களுக்கு
தொடர்புக்கு:
சென்னை:
8610392275
அங்கனூர்:
9843660449
ஜெயங்கொண்டம்:
9952860844
சிதம்பரம்
96557 46475
திருப்போரூர்
7092521698
கும்பகோணம்
7904832410
திருவாரூர்:
8825995117
திருச்செந்தூர்:
8675590803
கள்ளக்குறிச்சி:
9843702449
நாகப்பட்டினம்
9787825382
நெடுங்குளம்
7639091631
புதுகோட்டை
9443903727
குறிஞ்சிப்பாடி
9042991182
மதுராந்தகம்
9566227765
திண்டிவனம்
9043751262
வடலூர்
9942389886
திருச்சி
8508082300
தஞ்சாவூர்
9600792241
மணப்பாறை
9942559977
மின்னஞ்சல் :
[email protected]
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான தல்லாகுளம் பாலு அவர்கள் விபத்தில் காலமானார். இன்று அவரது திருஉடலுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினேன்!
@airportmoorthy உன் தகுதிக்கு ஏத்தாப்புல் பொண்ணு தேடுற வேலையில தொடங்கிட்ட (புரோக்கர்) , உன் தகுதிக்கே இவரைப் பத்தி எல்லாம் நீ பேசலாமா ..?? பொறுக்கி நாயே
வதந்தி பரப்பும் தொலைக்காட்சி சேனல்கள்
ஒன்றிய அரசுக்கு விசிக கடிதம்
~~~~~~~~~~~
போர் குறித்து பொய்ச் செய்திகளைப் பரப்பும் ஊடகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; உண்மைச் செய்திகளை வெளியிடும் @thewire_in முதலான ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும்.
இன்று விசிக சார்பில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு @AshwiniVaishnaw அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளேன்.
To
Shri Ashwini Vaishnaw,
Minister of Information and Broadcasting,
Government of India.
Subject: Media Irresponsibility and Arbitrary Blocking – Reg.
Respected Shri Ashwini Vaishnaw ,
On behalf of the Viduthalai Chiruthaigal Katchi (VCK), I wish to register our deep concern regarding the broadcast of provocative and patently false news by several Indian television news channels in the aftermath of Operation Sindoor.
Last night, numerous national news channels aired continuous, sensationalist programming falsely claiming that the Indian Navy had bombed and destroyed Karachi Port, that the Indian Army had entered Pakistan, and even that India had captured Islamabad. Other channels spread unverified reports of suicide terror attacks in Rajouri.
These broadcasts were not merely inaccurate—they were incendiary, deliberately misleading, and clearly designed to provoke conflict and stoke tensions, risking escalation of hostilities at a highly sensitive time.
Instead of issuing a clear and public denial of these dangerous fabrications, the Government of India chose instead to direct Internet Service Providers across the country to block access to various platforms and content, thereby suppressing legitimate voices while leaving the purveyors of misinformation unchecked.
According to a statement issued by X’s Global Government Affairs team, the Indian government has demanded that over 8,000 accounts be blocked in India. These orders, reportedly issued under threat of severe penalties including imprisonment of local employees, include accounts belonging to international news organizations and prominent users. In many cases, no specific violations or legal justifications have been provided. X has stated:
“To comply with the orders, we will withhold the specified accounts in India alone. We have begun that process. However, we disagree with the Indian government’s demands. Blocking entire accounts is not only unnecessary; it amounts to censorship of existing and future content, and is contrary to the fundamental right of free speech.”
Furthermore, The Wire, a widely respected news portal, has announced that access to https://t.co/RNCZ8Kfqah has been blocked across India. As per their press release, ISPs have cited an order from the Ministry of Electronics and Information Technology under the IT Act, 2000 as the basis for this action.
This arbitrary invocation of IT Rules to silence responsible media and social media platforms is a blatant infringement on the fundamental rights guaranteed by the Constitution of India.
The Viduthalai Chiruthaigal Katchi has always upheld a firm and principled stance against terrorism—guided by constitutional values, democratic norms, and secular ideals. However, we unequivocally reject attempts to turn a national tragedy, such as the recent incident in Pahalgam, into a spectacle of communal division and hatred.
We urge the Ministry to take prompt and resolute action against media channels and platforms that disseminate falsehoods and incite communal tension. At the same time, it is imperative to restore access to platforms that act responsibly and contribute to preserving national unity and democratic discourse.
We trust that this urgent and pressing matter—concerning national integrity during challenging times—will receive your immediate and thoughtful attention.
Kind Regards
Dr Thol.Thirumavalavan MP
Founder - President
Viduthalai Ciruthaigal Katchi ( VCK)
#வடகாடு_சாதிவெறியாட்டம்:
------------------------------------
புலன் விசாரணைக்கு முன்னரே காவல்துறை ஒரு முன்முடிவை எடுத்து அறிவிப்பது சரியா?
ஒரு சார்பான இப்போக்கை காவல்துறை கைவிட வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், திருவோணம் அருகேயுள்ள வடகாடு என்னுமிடத்தில் நேற்று (மே-05) நள்ளிரவில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் ஆதிக்க சாதிவெறிக் கும்பல் கொடூர ஆயுதங்களுடன் நுழைந்து கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதில் ஆறு பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடகாடு அருகேயுள்ள ஆலங்குடி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீண்டும் மருத்துவமனைக்குள்ளே நுழைந்து அச்சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்புக் கருதி அவர்களைப் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். மேலும், அக்கும்பல் ஆதிதிராவிடரின் குடியிருப்பில் தீவைத்துள்ளது. மக்கள் போராடி அணைத்ததால்
ஒரு வீட்டுடன் அது பரவாமல் தடுக்கப்பட்டுவிட்டது. அத்துடன், அக்கும்பல் இருசக்கர வண்டிகளையும் நான்கு சக்கர வண்டிகளையும் அடித்து நொறுக்கி வெறியாட்டம் நடத்தியுள்ளது.
வடகாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முத்துமாரியம்மன் கோயிலின் தோரோட்டத் திருவிழாவில் பங்கேற்கச் சென்ற ஆதிதிராவிடர்களைச் சாதிப்பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதுடன், தேர்வடத்தைத் தொடவிடாமல் தடுத்து தாக்கியுள்ளனர். அதே நேரத்தில் திட்டமிட்டு ஆதிதிராவிடர் குடியிருப்பிற்குள் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளது.
இதற்கு ஏற்கனவே அக்கிராமத்தில் இருதரப்புக்கும் இடையில் நடந்த அய்யனார் கோயில் தகராறு மற்றும் அது தொடர்பான வழக்கும்தாம் பின்னணி காரணமாக உள்ளன என்பது தெரியவருகிறது.
ஆதிதிராவிடர்களால் கட்டப்பட்டுள்ள "அடைக்கலம் தந்த அய்யனார்" கோயிலிலும்; அதனருகேயுள்ள மூன்று ஏக்கர் பரப்பளவுள்ள காலியிடத்திலும்; முத்தரையர் சமூகத்தினருக்கும் உரிமை உண்டு என கோரி அவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அது தொடர்பாக ஆதிதிராவிடர்கள் நீதிமன்றத்தை நாடி வழக்காடி அக்கோயில் தங்களுக்கு மட்டுமே உரியது எனத் தீர்ப்பையும் பெற்றுள்ளனர்.
ஆனாலும், காவல்துறையினர் வழக்கம்போல சட்டம்- ஒழுங்கைக் காரணம் காட்டி, அந்தக் கோயிலை இன்னும் பூட்டியே வைத்துள்ளனர். காலியிடத்தை ஆதிதிராவிடர்களும் பயன்படுத்தக் கூடாதென தடுத்து வைத்துள்ளனர். இந்த முரண்பாடும் பகையும் ஏற்கனவே அந்த ஊரில் நிலவும் சூழலில் தான், இந்த தேரோட்டத் திருவிழாவுக்குச் சென்ற ஆதிதிராவிடர்களை வடம் பிடிக்கக் கூடாதென வம்புக்கிழுத்து அவர்தம் குடியிருப்புக்குள் வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். எனவே, இது சாதிவெறித் தாக்குதல் தான் என்பதில் எந்த அய்யமுமில்லை.
ஆனால், காவல்துறையினர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது. புலனாய்வுத் தொடங்குவதற்கு முன்னரே, ஒரு "முன்முடிவை" எடுத்து தனிநபர்களுக்கிடையிலான பிரச்சினைகள் தான் இந்த சாதிவெறியாட்டத்திற்குக் காரணம் என்று அறுதியிட்டுக் கூறுவது எவ்வகையில் சரியென அமையும்? இது வழக்கின் விசாரணையைப் பாதிக்காதா? இது வதந்தி பரப்புவதைத் தடுக்கும் முயற்சி் என்பதைவிட, நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டைப்போடும் சதி என்றே கருத வேண்டியுள்ளது. இத்தகைய போக்கை காவல்துறை கைவிட வேண்டுமெனவும் விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்டுமே கொண்ட சிறுபான்மையினராக அங்கே ஆதிதிராவிடர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட பெரும்பான்னமை ஆதிக்க சாதியினராகவுள்ள முத்தரையர்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு ஆதிதிராவிடர்களை எப்போதும் அச்சத்திலேயே ஒடுக்கி வைத்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் இந்த சாதி வெறியாட்டம் அரங்கேறியுள்ளது.
இந்த வன்கொடுமைகளில் வெளியூர்களைச் சார்ந்த சாதிவெறியர்களும் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
இந்நிலையில், ஒரு சிலரை மட்டுமே காவல்துறை கைதுசெய்துள்ளது. என்றாலும், ஆதிதிராவிடர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ள வெளியூர் ஆட்கள் உட்பட அனைவரையும் கைது செய்து சிறைப்படுத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
வடகாட்டிலுள்ள ஆதிதிராவிடர்களுக்குரிய அய்யனார் கோவிலைத் திறந்துவிட வேண்னுமெனவும், அதனருகேயுள்ள காலியிடத்தை ஆதிதிராவிடர் சமூகத்தினரே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமெனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவண் :
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.