தமிழ் சினிமாவும் காதலும்!
தமிழ் சினிமாவில் முழுக்க காதல் படமாகவும், அதேபோல் படத்துல இருக்க எல்லா பாட்டும் ஹிட் ஆன ஆல்பம் ஆகவும் பலமுறை பார்த்தாலும் சலிக்காத படங்கள் பற்றி பார்ப்போம்👇
ஒரு பாடலுக்கு நல்ல இசையும், பாடகரும் சிறப்பா அமைஞ்சாலே வெற்றி தான். அதிலும் எடுக்கப்பட்ட விதம் இன்னும் கூடுதல் வெற்றி. “சார்லி” படத்திலிருந்து, மால்குடி சுபா வாய்ஸ்ல “அகலே” பாடல். இதில் ஆலாப்புழா படகு பயணம் அழகாக காட்டப்பட்டுள்ளது. அதைவிட அழகு பார்வதியின் மூக்குத்தி.
கமல்ஹாசனும் சர்ச்சையும் !
கமல்ஹாசன் தனது தைரியமான கதைத் தேர்வுகள், சமூக மற்றும் அரசியல் விமர்சனங்கள், மதம், சாதி, அல்லது பிற உணர்ச்சிகரமான தலைப்புகளைத் தொடுவதால் பல படங்கள் விவாதங்களை உருவாக்கியுள்ளன. தமிழ் சினிமாவில் சர்ச்சைகளை ஏற்படுத்திய சில முக்கியமான படங்களைப் பற்றி பார்க்கலாம் .👇
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு பிண்ணனி பாடகர் மலேசியா வாசுதேவன். அவரின் பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்கள் இங்கே பார்க்கலாம். #HBDMalaysiaVasudevan
காதலை பல இயக்குநர்கள் சிறப்பாக எடுத்தாலும், மலையாள இயக்குநர் வினீத் சீனிவாசனுக்குனி இடம் உண்டு. அவரின் படங்களில் இசையும் அந்த கதையின் நேட்டிவிட்டியும் கதையோடு பயணிக்க வைக்கும். அந்த வகையில் “ பொட்டுக்கு மயங்காத மலையாளி பையன் இதுவரை பிறந்ததில்லை” வசனம்.
"தீனா" படத்தில் எல்லா பாட்டும் மெஹா ஹிட்டு. இந்த பாட்டு ஹீரோவுக்கு solo பாட்டா தான் வரும். காதலியை நெனச்சு, காதலியே வராத பாட்டு. யுவன் மியூசிக் ல ஹரிஷ் ராகவேந்திரா பாடிய பாடல்.
இசைப்புயல் ARR, "எனக்கு சோகப்பாட்டு பிடிக்காது"னு பல இடங்களில் சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த பாட்டு "சக்தி ஶ்ரீ கோபாலன்" குரலில் இயல்பாகவே ஒரு சோக உணர்வு தருகிறது. குரலும் இசையும் சேர்ந்து புதிய அனுபவத்தை தருகிறது.
விஜய் டிவில "ஜீ பூம் பா" அப்படின்னு ஒரு சீரியல் போச்சு! அதுல ஒரு பையன் பென்சில் வரையறது அப்படியே நிஜமான பொருளா மாறிடுச்சு.
அந்த கான்செப்ட் தான் இந்த படத்துல எடுத்திருக்காங்க போல.
உங்களுக்கு யாருக்காவது அந்த சீரியல் பார்த்த ஞாபகம் இருக்கா மக்களே?
இந்த படத்துல தேவா மியூசிக்ல அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. இதுல "நம்ம அய்யா நல்லவருங்கோ" பாட்டுல சரத்குமாரும் விஜயகுமாரும் முதல் முறையா குரல் கொடுத்தாங்க. ஆனா எனக்கு புடிச்சது இந்த பாட்டு தான்.
”ஆனந்த தாண்டவம்” படத்துல ”G V Prakash” மியுசிக்ல வர்ற “கனா காண்கிறேன் கண்ணாலானே!” பாட்டுல, ஆரம்பத்துல வர்ற வரி ”சுபா முத்கல்”ம், அடுத்து வர்ற வரிகள் ”நித்ய ஸ்ரீ மகாதேவன்”ம் பாடியிருப்பாங்க. எதுக்காக இரண்டு பேர் வச்சி பாடுனாங்கனு தெரியல. ஆனா ஒரே குரல் மாதிரி தான் இருக்கும்.