#திமுக காரங்க அநியாயம் தாங்க முடியல..
எல்லாத்துக்கும் காரணம் #திமுக தான்..🤣🤣🤣
கடந்த 5 வருடங்களாக சரியாக #ஜூன்12ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்ட #மேட்டூர்அணை இந்த வருடம் நீர் மட்டம் குறைவால் இன்று #திறக்கப்படவில்லை ஏன் என்று கேட்டால் ..
அடப்பாவி #திமுககாரனுங்களா... டேம் ல இருந்த தண்ணீர இப்படி அநியாயமா பக்கெட்ல அள்ளிட்டு போயிட்டீங்களேடா...
டேம் ல இருந்து தண்ணிய பக்கெட்ல எடுத்துட்டு போன எல்லா #திமுக காரங்களும் என்னோட சேர்த்து. இன்னும் 2 மணி நேரத்துக்குள்ள அந்த தண்ணிய திரும்ப கொண்டு வந்து டேம் ல விடல,அப்புறம் #tvk நடிகர் அங்கிள் ன் புதிய புரட்சியை பார்ப்பீர்கள். .
#TVKVijay #தமிழ்நாடுஅரசு #விவசாயிகள் #மேட்டூர்அணை #sofamodel #metturdam
*எப்போதும் உண்மை நடக்கு பொய் பறக்கு*
சில சேனலில் தற்போது பார்க்க முடிந்த தவறான ஒரு பிரேக்கிங் இது...
நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திரும்பி சென்ற துரைமுருகன்!
உண்மையில் நடந்ததுது இது தான்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அப்போது அவருடன் இருந்த ஒருவரின் கையைப் பிடித்தபடி மெதுவாக நடந்து கலைஞர் அரங்கம் நோக்கிச் சென்றார்.
கலைஞர் அரங்க நுழைவாயில் வரை வந்த துரைமுருகன், அங்கிருந்தபடியே அரங்கிற்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தையும், நிரம்பி வழிந்த மகளிர் அணி நிர்வாகிகளின் பங்கேற்பையும் சில நிமிடங்கள் பார்வையிட்டார்.
இதையடுத்து, அரங்கிற்குள் நுழையாமல் அங்கிருந்து திரும்பிச் சென்ற துரைமுருகன், நேரடியாக தனது வாகனத்தில் ஏறி அண்ணா அறிவாலயத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
*அப்போது ஒரு நிர்வாகி ஏன் உள்ளே செல்ல வில்லை என கேட்ட போது கூட்டம் அதிகமாக இருக்கிறது மூச்சு விட சிரமமாக ஆகிவிடும் என கூறி திரும்பி செல்வதாக கூறினார்*.
#DMKWomensWing #dmk
DMK President MK Stalin says, "People who voted for TVK in Tamil Nadu are now feeling why they voted for that party. Crimes have increased under this government... The TVK President spoke about women's safety before the elections, and he said his cadres will safeguard women and girls. But now reports are emerging that their own cadres are indulging in sexual crimes. Now time has come to safeguard women from TVK cadres. TVK leader Vijay is shopping for AIADMK MLAs. He doesn't have trust in his own party cadres. Vijay is doing the same thing here that the BJP does in other states. Vijay's TVK is a xerox copy of the BJP. Even before the ink mark in their hands vanished, these MLAs resigned and joined TVK... I ask Vijay, did you go to Delhi just to escape from the Karur CBI inquiry..."
#Thalapathy #MKStalin
#TVKVijayFails
மக்கள் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து வாக்களித்துள்ளனர். சாதியைப் புறக்கணித்து அரசு அமைந்துள்ளது என்பது ஜனநாயகத்தின் முதிர்ச்சியையும், மக்களின் விழிப்புணர்வையும் பிரதிபலிப்பதாகும் என்று மதுரை உயர்நீதிமன்றம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
#TVKVijayFails
பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, ஜனநாயக மரபுகள் ஆகியவற்றில் எழும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக, மக்களின் நம்பிக்கையைப் பெறும் ஆட்சியை வழங்குவதே முக்கியம்.
வலுவான, விழிப்பான எதிர்க்கட்சி ஜனநாயகத்தின் அவசியம். மக்களின் குரல் இறுதியில் வெல்லும். #TamilNadu #Democracy #PeopleFirst
மேடைக்கு மேடை Confident சொல்ல தெரிஞ்ச முதல்வர்க்கு
உங்களுக்கு Confident இருக்கா ? முதலில் 😂😂
இல்லாம தான் Vote போட்ட மை கூட அழியறதுக்குள்ள MLA களை விலைக்கு வாங்கினார்
@mkstalin 🔥🔥🔥🔥🔥
இதான் தலைவா அடி 🔥🔥
நடு மண்டைல இரக்கிறாப்ல தலைவர்
மக்கள் நலனை முன்னிறுத்த வேண்டிய அரசு, அரசியல் கணக்குப் போட்டிகளில் சிக்கிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.
ஒரு மாத காலத்திலேயே ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. பெண்களின் பாதுகாப்பு, ஜனநாயக மரபுகள், கூட்டணி நம்பிக்கை ஆகியவற்றில் அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சியின் கடமை மக்களின் குரலை ஒலிப்பதே. மக்களின் நலனுக்காக பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாக தி.மு.க. தொடர்ந்து செயல்படும்.
#TamilNadu #DMK
தவெகவின் முதல் வெளிப்படையான ஊழல் : ஆம்னி பஸ்களை மறுபடியும் கோயம்பேடிலிருந்து, ஆப்பரேட் செய்ய அனுமதித்திருப்பது..!
விஜய் பதவி ஏற்றதுமே முதலில் சென்று 'பார்த்தவர்கள்' ஆம்னிபஸ் உரிமையாளர்கள்தான்..!
இட மாற்றத்தால் பிரைவேட் ஆம்னி பஸ்காரர்களுக்கு பிஸினஸ் பல மடங்கு உயரும்..! காரணம்: அரசாங்க பஸ்கள் உபயோகிக்க கிளாம்பாக்கம் வரை போகணும்; ஆம்னி பஸ் இங்கேயே ஏறி விடலாம் என்று 500 ரூபாய் வரை அதிகம் கொடுக்க மக்கள் ரெடி..!
என்ன விளைவு..? மறுபடியும சிட்டிக்குள் இரவு ஆனாலே மூச்சு முட்டும் கடும் டிராஃபிக் ஜாம்..!
தாம்பரம் மற்றும் அதைத் தாண்டியும் வாழும் மக்கள் சிட்டிக்குள் வந்து போக உருவாக்கிய ரோடு, இன்னர் ரிங் ரோட் எனும் ஜவஹர்லால் நேரு ரோடு..! ஆனால், அதில் இப்போது நீங்கள் பார்க்கலாம்: ஏகப்பட்ட வண்டிகள் பெட்ரோல்/டீசலை வீணாக்கி பெருமூச்சு விட்டுக் கொண்டு இந்த ஆம்னி பஸ்களின் பின்னால் கடும் டிராஃபிக்ஜாமால் நெடுநேரமாய் பெரீய்ய கியூவில் நின்று கொண்டிருப்பதை..!
ராத்திரி மணி 8 ஆகிவிட்டாலே, ரோடு தமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள் இந்த ஆம்னிபஸ் டிரைவர்கள். ஓரமால்லாம் நிறுத்த மாட்டார்கள், நடு ரோட்டில்தான்..!
இந்த ட்ராஃபிக் ஜாம் பிரச்சனைக்காகத்தானே, எக்ஸ்பிரஸ் பஸ் டெர்மினஸ், சிட்டியை விட்டுத் தள்ளி இருப்பது நல்லது என்று அதிமுக ஆரம்பித்து, திமுக கிளாம்பாக்கம் நிலையத்தைக் கட்டி முடித்தது..? அது இனி டோட்டல் வேஸ்ட்டா..?
ஆரம்பத்தில் கஷ்டமாக உண்ர்ந்தாலும் மக்கள் இப்போது கிளாம்பாக்கத்துக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதை, ஆம்னி பஸ்காரர்களின் லாபத்துக்காக மாற்றுவதா..? சென்னையில் வாழ்பவர்கள் தினம் ட்ராஃபிக் ஜாமில் அவதிப்படுவதுதான் அவர்களின் மாறாத தலையெழுத்தா..? ஒவ்வோரு நாளும் எல்லோருக்கும் வேஸ்ட்டாகும் எரிபொருள் மதிப்பு எவ்வளவு..? எல்லாம் ஆம்னி பஸ்காரர்களின் அதிக லாபத்துக்கா..?
இந்த ஊழல் இன்னும் கொஞ்ச நாளில் பெரிதாக வெடிக்கும் பாருங்கள்..!
#TVKVijayFails
முதல்வர் விஜய் வீட்டில் இருந்து செஸ் போர்ட் கொண்டு வந்தார் என்ற narrative எதற்காக set பண்றாங்க?
முதல்வருக்கு சதுரங்கம் ஆடத் தெரியும் என எதற்காக மார்தட்டிக் கொள்ளவேண்டும்? செஸ் ஆடத் தெரிந்த அறிவாளி என காட்டவா?
கடைசியில் பிரக்யானந்தா தனது வீட்டில் இருந்து தான் செஸ் போர்ட் கொண்டு வந்தேன் என உண்மையை போட்டு உடைத்துள்ளார்?
உண்மையிலேயே இவங்க என்ன சொல்ல வராங்க?செஸ் ஆடத்தெரியலைனா நாங்க அறிவாளி என ஏற்கமாட்டோமா?
அவருக்கு நடிக்கவே வராத போது நாங்க நடிகர் என ஒத்துக்கொள்ளவில்லையா?
ஏன் இந்த சில்லறைத்தனமான விளம்பரம்?
#TVKVijayFails
தேர்தலுக்கு முன் தமிழ்நாடு கடனில் மூழ்கிய மாநிலம் என்ற கதை.
தேர்தலுக்குப் பின் நிதி ஆயோக்கில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி பொருளாதார மாநிலம் என்ற பாராட்டு.
அப்படியானால் இந்த சாதனைகள் ஒரு மாதத்தில் உருவானதா? அல்லது கடந்த 5 ஆண்டுகளின் திராவிட மாடல் ஆட்சியின் பலனா?
உண்மையை மறைத்து Sticker ஒட்டலாம்; வரலாற்றை மாற்ற முடியாது.
#NitiAyog #DravidianModel
BJP’s long game with TN:
To break Dravidian movement’s grip on Tamilnadu,
Seeman - to split vote bank with Tamil nationalism (Tamils vs Non - Tamils)
Vijay - identity of mass leader for the common man (Voice of commons), capture Dalit and religious minorities, capture BJP vote bank dissatisfied with Annamalai let off from State President role (mainly Mambalam, Nanganallur and Mylapore vote bank), neutral voters looking for change
Annamalai - capture OBC vote bank, ADMK core vote bank, PMK core vote bank, neutral voters looking for change
When will people come back to the Dravidian fold? When they realise that it is the movement that united all the above, against hindutva (for want of a better word), or rather varnashrama forces.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களைப் பற்றியதாக இருந்தாலும் அவை முழுமையாகவும், பாரபட்சமின்றியும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். சம்பவத்தை மறைக்க முயன்றவர்கள் இருந்தால் அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு அரசியல் விவாதமாக அல்ல, மனிதநேய மற்றும் சட்டப் பொறுப்பாக பார்க்கப்பட வேண்டும். உண்மை வெளிவரவும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். #JusticeForWomen #TamilNadu
"திராவிடம் என்ன செய்தது?" என்று கேட்பவர்களுக்கு ஒரு எளிய பதில் உண்டு.
சுதந்திரத்திற்குப் பிறகு இன்று காணும் வளர்ச்சியடைந்த தமிழ்நாடாக நாம் இருந்தோமா? இல்லை. இன்று நாம் எங்கு நிற்கிறோம், என்ன சாதித்திருக்கிறோம் என்பதே திராவிட இயக்கத்தின் தாக்கத்திற்கு கண்முன்னே நிற்கும் சான்று.
திராவிடத்தின் மிகப்பெரிய சாதனை வெறும் நலத்திட்டங்கள் அல்ல. அதன் அடித்தளம் கல்வி. "படி, படி; அதுவே உன் வாழ்க்கையின் வெற்றிப்படி" என்ற சிந்தனையை மக்களிடம் விதைத்து, கல்வியை சமூக முன்னேற்றத்தின் கருவியாக மாற்றியது. கல்வியால் மக்கள் முன்னேறினர்; மக்களால் தமிழர்கள் முன்னேறினர்; தமிழர்களால் தமிழகம் முன்னேறியது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியால் வளர்ந்த தமிழ்நாடு உருவானது.
இந்த முன்னேற்றம் சில அரசியல்வாதிகளின் சாதனை மட்டுமல்ல; கல்வி கற்று தங்களையும் சமூகத்தையும் உயர்த்திய கோடிக்கணக்கான மக்களின் பங்களிப்பும் அதில் அடங்கியுள்ளது.
"படிக்காதவன் அரசியல்வாதி ஆவான்" என்ற பழைய நகைச்சுவை உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் பல தலைவர்கள் உயர்கல்வி கற்காதவர்களாக இருந்தபோதும், அவர்கள் செய்த நன்மைகள் ஏராளம். அவர்களை நாம் தாழ்வாகப் பார்க்கவில்லை. ஏனெனில் அவர்களுக்குக் கிடைக்காத கல்வியை அடுத்த தலைமுறைகள் பெறும் வகையில் அவர்கள் பாதை அமைத்தார்கள்.
ஆனால் இன்று சிலர், முன்னோர்கள் உருவாக்கிய அந்த அடித்தளத்தையே சிதைக்க முனைவதைப் போலத் தோன்றுகிறது. நம் மூதாதையர்கள் உழைத்து கட்டிய சமூக முன்னேற்றப் பாதையை அழிக்க முயலும் போக்குகள் கவலைக்குரியவை. தங்களை மாற்றுச் சக்தி எனக் கூறுபவர்கள், தங்களுடைய கொள்கை என்ன, கோட்பாடு என்ன, சமூகத்திற்கான நீண்டகாலத் திட்டம் என்ன என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டிய கடமை உடையவர்கள்.
நல்ல கல்வி, கடின உழைப்பு, சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் வழியே நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விலகி, வெறும் ரசிகர் உணர்வு மற்றும் திரைமோகத்தின் அடிப்படையில் அரசியலை அணுகுவது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்? எந்த அடிப்படையில் அதை நாம் ஆதரிக்க வேண்டும்?
75 ஆண்டுகளாக மக்கள் சிந்தித்து, உழைத்து, உருவாக்கிய அரசியல் விழிப்புணர்வின் பயன் என்ன, அது மீண்டும் கண்மூடிய ரசிகர் அரசியலாக மாறினால்?
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் அரசியலுக்கு வருபவர் யாராக இருந்தாலும், முதலில் தன் கொள்கையைச் சொல்ல வேண்டும். தனது இலக்கு என்ன, சமூகத்தை எந்தத் திசையில் கொண்டு செல்ல விரும்புகிறார், பொருளாதாரம், கல்வி, சமூகநீதி, மாநில உரிமைகள் குறித்து அவரது நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்.
மாற்றம் என்ற பெயரில் மாய வலை விரித்து மக்களை ஈர்ப்பவர்களிடம் நான் கேட்கிறேன்: உங்கள் தொலைநோக்குத் திட்டம் என்ன? தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்காக நீங்கள் உருவாக்க விரும்பும் எதிர்காலம் எது?