சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் (WorldSkills Shanghai 2026) இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்று, ‘Dental Prosthetics’ திறன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகம்மது சலாம் அவர்களுக்கும், பல்வேறு திறன் பிரிவுகளில் சிறப்புப் பதக்கங்களை (Medal for Excellence) வென்ற ராகுல், அர்ஜுன், சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்களில் 5 போட்டியாளர்கள் சிறப்பான சாதனைகளைப் படைத்து பெருமை சேர்த்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறன்மிக்க இளைஞர்களுடன் போட்டியிட்டு சாதனை படைத்திருப்பது, தமிழ்நாட்டு இளைஞர்களிடம் நிறைந்துள்ள மேம்பட்ட திறமைக்கும், தொழில்நுட்ப அறிவுக்கும் சிறந்த சான்றாகத் திகழ்வதுடன், திறன் சார்ந்த துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் சார்பில் உலக அரங்கில் தமிழ்நாட்டின் திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இவ்வெற்றியாளர்கள் உலக அரங்கில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்!
#CMJosephVijay
மற்றும் பலரின் துரோகப் பயணம்!
துரோகம் – 1:
"தீயசக்தி… தீயசக்தி…" என்று எம்ஜிஆர் விமர்சித்த திமுகவுடனேயே dealing வைத்துக்கொள்வது, எம்ஜிஆர் கட்டியெழுப்பிய அதிமுகவின் கொள்கைக்கும், நோக்கத்திற்கும் இழைக்கப்படும் துரோகம்!
துரோகம் – 2:
அதிமுகவை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை சட்டசபை முதல் கட்சி மேடைகள் வரை அவமதித்த திமுகவுடனேயே உறவாடுவது, அவரின் உழைப்பிற்குச் செய்யும் துரோகம்!
துரோகம் – 3:
50 ஆண்டுகளாக அரசியல் எதிரி என்று மக்களிடம் பறைசாற்றிவிட்டு, அதே பகையாளியை பங்காளியாக்கி சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதும் பதவிக்காக உண்மையான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் குரலைப் புறக்கணிப்பதும் துரோகம்!
துரோகம் – 4:
தனக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியவர்களையே முதுகில் குத்தியது, தேர்ந்தெடுத்த துரோகம்!
"நன்றிக்கு பதில் துரோகம்" என்ற புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் துரோகச்சாமியின் துரோகப் பயணம்… தொடரும்!
#குறுக்குவழிச்சாமி
அவதூறு பரப்புவது திமுகவும், அவர்களுடன் இணைந்த மற்றும் பலரும்தான். மக்கள் அவதூறு பரப்புவது இல்லை, அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், தவெகவை ஆதரிக்கிறார்கள்.
-மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.
தாராபுரம் தொகுதி இடைதேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இன்று
பேசிய நமது கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி P. சத்தியபாமா அவர்கள், எதிர்க்கட்சியினர் தன்னை அவதூறாகவும ஆபாசமாகவும் பேசுகின்றனர் என்று மனம் உடைந்து கண்ணீருடன் நின்றபோது , பாசமுள்ள சகோதரனாக அவரது தோள்களைப் பற்றி தேற்றினார். எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பாக இந்த அரசும் , இந்த அண்ணனும் இருப்பது உறுதி என்று வெற்றித் தலைவர் உணர்த்திய தருணம்.
தாராபுரம் தொகுதி மக்களே ஒரு உத்தரவாதம் கொடுங்கள்,
தமிழ்நாட்டுக்கு கேடு விளைவிக்கும் தீயசகதி திமுகவிற்கு வாக்களிக்காதீர்,
எம் ஜி ஆர் அவர்களுக்கும் ஜெயலலிதா மேடம் அவர்களுக்கும் துரோகம் செய்த மற்றும் பலருக்கும் வாக்களிக்காதீர்"
முதலீடு செய்த துபாய்க்கு போய் தொழில் தொடங்கலாமா என்ற யோசனையில் தீயசக்தி கட்சியினர் இருக்கிறார்கள்.கிளி ஜோசியம் பார்த்தாலும் சரி, குருவி சகுனம் பார்த்தாலும் சரி ,தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் வரை தீயசக்தி & மற்றும் பலர் கட்சியினர் எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்க முடியும் "
"சத்தியத்தின் பக்கம் நிற்கும் கொங்கு பகுதி மக்களே, நமது சகோதரி ,நமது வெற்றி வேட்பாளர் சத்தியபாமா அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்" - மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தேர்தல் களம், தீயசக்தி vs தீர்ந்து போன சக்தி என்ற இரு துருவ அரசியலாகவே இருந்தது.
ஒருவரை ஒருவர் கடுமையான விமர்சனங்களால் சாடியவர்கள்… ஒருவரை ஒருவர் வீழ்த்துவோம் என்று களமிறங்கியவர்கள்… இன்று, தமிழ்நாட்டு மக்கள் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் சக்தி களத்தில் வந்தவுடன், பழைய அரசியல் கணக்குகள் அனைத்தையும் உடைத்தெறிந்து பங்காளிகளாகவும் அரசியல் வியாபாரம் செய்வதில் பங்குதாரர்களாகவும் வலம் வருகின்றனர்.
மாறி மாறி வசைபாடிக் கொண்டிருந்த இரு கூட்டங்களும், இன்று ஒரே கூட்டணியாக ஒன்று சேர்ந்து, மக்கள் சக்தியான தவெகவை ஆபாசம் எனும் ஒரே கோட்டில் நின்று விமர்சித்து வருகின்றன.
இருவரும் என்ன கத்தினாலும், கதறினாலும், இனி தேர்தல் கணக்கு வெற்றித் தலைவர் எழுதப்போகும் கணக்காகத்தான் இருக்கும்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் பெறும் மூன்றாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay
#AsianGames2026
ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தடகள வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், குழு ஒருங்கிணைப்பும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும்.
எதிர்காலத்திலும் இத்தடகள வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும்போது உயிரிழந்த பெண் தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது இவ்வெற்றி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
அவர் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நாட்டின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
வெற்றியைத் தர தயாராக இருக்கும் தாராபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்
வெற்றி வேட்பாளர் திருமதி சத்யபாமா அவர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார் வெற்றித் தலைவர் அவர்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., உறுப்பினர் திரு.ஏ.ஆர்.மாஸ்கர்னஸ், உறுப்பினர் (சட்டம்) திருமதி ஏ.முத்து சாரதா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற நீதியரசர் முனைவர் இரா. ந. மஞ்சுளா, திருமதி ஆ. சுகந்தி, இ.ஆ.ப. (ஓய்வு) ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்தில், சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-Madras) இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், சிறப்புப் பணி அலுவலர் கர்னல் எஸ்.பார்த்தசாரதி, ஆலோசகர் திரு.வி.சேகர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay