முத்தண்ணன் என்பவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது , கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர்.
முத்தண்ணன் என்பவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது , கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்),
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
வருகின்ற வியாழக்கிழமை (12.03.2026) அன்று காலை 9:00 மணி அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வருகின்ற வியாழக்கிழமை (12.03.2026) அன்று காலை 9:00 மணி அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களின் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்வு இதில் சேலம் வட மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தோழர்கள் தோழிகள் அனைவரும் கலந்து கொண்டனர் #TVKVijay#TVKForTN#tvkfortn2026#tvk
சேலம் மாவட்டம் ஓமலூர் தாத்தியம் பட்டியில் சுடுகாட்டு பாலம் சரியில்லாத நிலையில் தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கிச் சென்ற பொதுமக்கள்
பாலம் சரி செய்து தரும்படி ஊராட்சி செயலாளரிடம் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்கள் மூலம் மனு கொடுக்கப்பட்டது #TVKForTN#TVK
தமிழக வெற்றி கழகம் சேலம் வடமேற்கு மாவட்டம் சார்பாக அஞ்சலி
நேற்று தஞ்சாவூர் அருகே காரும் சரக்கு வேணும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர் இறந்த 4 பேரும் ஓமலூர் அருகே மூலக்கடை புதூர் காடம் பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் வெற்றி தலைவரே வருக! வருக!!
கே.செந்தில்குமார்
மாவட்ட கழகச் செயலாளர்
சேலம் வடமேற்கு மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
வெற்றி தலைவர் அவர்களின் ஆணைப்படி கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் தலைமையில் சேலத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது
கே.செந்தில்குமார்
மாவட்ட கழகச் செயலாளர்
சேலம் வட மேற்கு மாவட்டம்
சங்ககிரி சட்டமன்றத் தொகுதி சார்பாக 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் மருத்துவ முகாம். கே.செந்தில்குமார் சேலம் வடமேற்கு மாவட்ட கழகச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம்