தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும் பெண்களின் முன்னேற்றத்திற்காக, அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ₹2000 வழங்கப்படும். இதில் இடைத்தரகர்களோ, ஊழலோ இன்றி பணம் நேரடியாக வங்கியில் செலுத்தப்படும்.
- மத்திய ராணுவ அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்கள்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நல்ல முயற்சியை திமுக-வும் காங்கிரஸ் கட்சியும் தடுத்து நிறுத்துகின்றன
- மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள்..!
தமிழகம் தலை நிமிர, விடியா திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றிட, இரட்டை இன்ஜின் அரசு அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று கொங்கு மண்டலத்திற்கு பரப்புரை மேற்கொள்ள வருகை தரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
#pmmodi | #NDA4TN | #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #கோவையின்மகள்
அருள்மிகு தியாகராஜ சுவாமியை தாங்கி வரும் ஆழித்தேரை தன்னகத்தே கொண்டுள்ள, விவசாய பூமியான திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் திரு.கோவி சந்துரு அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றேன்.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி அடிப்படையில் பார்த்தால் கடைசி இரண்டு இடங்களிலும், மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசி 5 இடங்களிலும் உள்ள மாவட்டம் திருவாரூர். கடந்த 30 ஆண்டுகளாக, திமுக சட்டமன்ற உறுப்பினரை கொண்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சிக்கான அடித்தளம் கூட அமைக்கப்படவில்லை என்பது எவ்வளவு மோசமான நிலை. இந்நிலை மாறி திருவாரூர் மாற்றம் காணவேண்டும் என்றால் திமுகவை நாம் விரட்டியடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
திருவாரூரில் உள்ள பிரச்சனையே திரு.பூண்டி கலைவாணன் அவர்கள் தான். கொலை மற்றும் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் ஒருவரை திமுக தனது வேட்பாளராக அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயல். கடந்த 5 ஆண்டுகளாக, நெல் கொள்முதல் செய்வதில் இருந்து, தேவையான கிடங்குகள் அமைப்பது வரை அனைத்திலும் விவசாயிகளை வஞ்சித்து விவசாயிகளுக்கு எதிரான தீயசக்தி திமுக துரோகம் செய்தது.
திருவாரூர் பெருமையை மீட்டெடுக்கவும், விவசாயிகள் நலன் காக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. கோவி சந்துரு அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூர் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! திருவாரூர் தொகுதி திருப்பம் காணட்டும்!
சாத்தூர் தொகுதியை அடுத்துள்ள PSR கல்லூரியில் எதோ பாரதிய ஜனதாக்கட்சி தூண்டிவிட்டு அங்கே வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை மேலும் தவறான ஒரு கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்!
நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் உறவினர் ஒருவர் நெல்லையில் இருக்கிறார்!அவர் ஒரு பிரபல தொழிலதிபர்!! அவரது வீட்டிலும் நேற்று வருமானவரி துறையினர் ரெய்ட் நடத்தி கணக்கில் வராத ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
நயினார் அவர்களின் உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்துள்ளது. இம்மாதிரி சோதனைகளுக்கும் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஏனெனில் நெல்லையில் அவரது சொந்த உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்திருக்கிறதே? இது வருமானவரித்துறையினர் வழக்கமாக நடத்தும் சோதனைதான்! இதை பாஜக தான் தூண்டிவிட்டுச் செய்வதாகச் சொல்வது தவறான அதாவது வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எத்தை தின்றால் பித்தம் தீரும் என்பவர்கள் இது மாதிரி பொய்ப் பிரச்சாரங்களைச் செய்யும் மூடர்கள் அரசியலில் அநாகரிகம் மிகுந்தவர்கள்! நேர்மையற்றவர்கள் செய்யும் இந்த கேவலமான தந்திரங்களைப் நாம் முறியடித்துத் தான் ஆக வேண்டும்!
மாநில பாஜக தலைவரின் உறவினர் வீட்டிலேயே ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதில் தலையிட்டு தன் அதிகாரத்தைக் காட்டி இருக்க முடியாதா? அது அவர் வேலை அல்ல! அவரை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்! இது மாதிரியான விஷயங்களில் அவர் தேச நலனைத் தான் விரும்புவார்!
யார் யாரோ கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டு பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வருமான வரித்துறையை ஏய்த்து வருகிறார்கள்!அவர்களைப் பொது வெளியில் அடையாளப்படுத்துவதை விட்டு விட்டு தேர்தல் நேரத்தில் வந்து இம்மாதிரியான அவதூறுகளைச் சுமத்துவது அற்பத்தனத்தின் வெளிப்பாடுதான். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய கதைதான்.!
#itraid
#satturconstuency
#bjp
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-4-2026.
திமுக ஏன் கருப்பு கொடி ஏற்றுகிறது
பெண்களுக்கு பாராளுமன்றத்தில்
33 சதவீதம் இடம் கொடுக்கப் போகிறார்களே அதற்காகவா
அதற்கு சட்டம் இயற்றப் போகிறார்களே அதற்காகவா
மக்கள் தொகை கணக்கெடுப்பை 25 ஆண்டுகள் ஒத்தி வைக்கின்ற 82 வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்களே அதற்காகவா?
தனக்குத்தானே கருப்புக் கொடி ஏற்றி கொள்கின்ற கட்சி எதையாவது பார்த்திருக்கிறீர்களா?
பெண்களுக்கு எதிரான திமுகவை புறக்கணிப்போம்
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (15.04.2026), கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கோவில்பட்டி, ராதாபுரம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய கையாலாகாத திமுக ஆட்சியின் அவலநிலைக்கு, முற்றுப்புள்ளி வைப்போம்.
பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
@BJP4TamilNadu Social Media announcement of the Incharges for 33 'Lotus' Assembly Constituencies with the approval of Our State President Thiru.@NainarBJP Avl.
BJP Candidates for Tamil Nadu Assembly Elections 2026. Best wishes to all the candidates for the resounding victory.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 பா.ஜ.க வேட்பாளர் பட்டியல். களம்காணும் வேட்பாளர்கள் அனைவரும் மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
#NDA4TN
வரும் சட்டமன்ற தேர்தலில், சமூக நீதியை பின்பற்றுபவர்களே உங்கள் வாக்கு யாருக்கு? பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களை இழிவுப்படுத்துபவர்களுக்கா? போற்றிப் புகழுபவருக்கா?
மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வழிகாட்டுதலில், சாத்தூர் தொகுதியின் வளர்ச்சிக்காக களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் மாநில தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை 'தாமரை' சின்னத்தில் செலுத்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்..!