இசையோடு தமிழையும் கலந்து இலவசமாய் தமிழ்க் கல்வி தந்த திரு.கண்ணதாசன், திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் .
இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல..
இந்தியாவின் பொக்கிஷங்கள். போற்றி..போற்றி..
வாழ்வு கடினமான தேசத்தில், இக்காலத்தில் மரணமேனும் கௌரவமாக இருக்காதா என்று ஆதங்கப்படும் நோய்மை நிலை. இப்போதும், கடந்த 8 ஆண்டுகளாகவும் ஆதரவற்று மரித்தோரை, பிரதிபலன் பாராது வழியனுப்பிவைக்கும் நற்செயல் புரிந்துவருகிறார் எங்கள் நாகராஜன். நெகிழ்ந்து வாழ்த்துகிறேன்.
கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா!
நவீன உலகம் இவ்வளவு வளர்ந்த பிறகும் குழந்தைத் தொழிலாளர் முறை பற்றிப் பேசிக்கொண்டிருப்பது தகாது. பள்ளிகளும் திறவாத சூழலில், வேலைக்குப் போகக் கட்டாயப்படுத்தப்படும் சிறாரை நினைக்கப் பதைக்கிறது. நம் நாகரிகம் மேம்படட்டும்.
உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்.
“சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை.
தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்வோம்.”
இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
Mother is not just a person anymore. In my mind she is an emotion that moves me in the right direction everytime. Every day of mine is hers too. So yet another happy mother's day.
'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம். (2/2)
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். (1/2)
பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்.
தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்க் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.