மோட்டார் விளையாட்டின் உச்சபட்சமாக இருக்கும் 'Formula One' உலக சாம்பியன்ஷிப் போட்டி, 1950 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'The Le Mans Cup - Silverstone Round' போட்டியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைக் கொண்டார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திரைத்துறை நட்சத்திரமும், மோட்டார் விளையாட்டு வீரரும் எனது அன்புக்குரிய சகோதரருமான திரு. அஜித் குமார் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் இப்பயணத்தில் பங்கேற்றோம்.
'Motor Sports' மீதான அவரின் ஆர்வமும், தமிழ்நாட்டில் இந்த விளையாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்குத் திட்டங்களும் நம்மை மிகவும் கவர்ந்தன. மோட்டார் விளையாட்டின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அதன் பிரமாண்டத்தையும் அவர் பொறுமையாகவும் அர்ப்பணிப்புடனும் நம்மிடம் விளக்கினார். முன்னாள் இந்திய ‘Formula One’ வீரர் திரு. நரேன் கார்த்திகேயன் அவர்களும் உடனிருந்தார். தொடர்ந்து, இதுசார்ந்த உலகின் முன்னணி தொழில், வணிக மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலாளர் திரு. ஜே. மேகநாத ரெட்டி அவர்களும் இப்பயணத்தில் பங்கேற்றார்.
'நம் தமிழ்நாட்டில் உலகத்தரமான உள்கட்டமைப்பை அடித்தளமாக மேற்கொண்டு சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும்' என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடாகும். இதன்பொருட்டு, தமிழ்நாட்டில் உலகத்தரமான 'Motor Sports City' விரைவில் அமையப்பெற உள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டை முதன்மையாகக் கொண்டு, இந்தியா முழுவதற்கும் சர்வதேச அளவிலான Sports Economy-ஐ உருவாக்குவதற்கான பல புதிய தேடல்கள், கற்றல்கள், புதிய பார்வைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணம், தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும். தமிழ்நாடு விளையாட்டு கட்டமைப்பிலும் விளையாட்டுப் பொருளாதாரத்திலும் தலைசிறந்து விளங்கி, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும். மேலும், தமிழக விளையாட்டுத்துறையை நவீனமயமாகவும் உலக நாடுகளுக்கு இணையாகவும் உருவாக்க வேண்டிய பல்வேறு புதிய செயல்திட்டங்களை இப்பயணத்துடன் மேற்கொண்டு வருகிறோம்.
கலைஞர் மகன் நான் ஸ்டாலின் voice கேட்டு Torch light எடுத்து TV எல்லாம் உடைச்சது எல்லாம் பொய்யா கோபால் @ikamalhaasan
எப்படியா ஆண்டவரே இவ்வளவு பண்ணிட்டு அறிவாலயம் உள்ள போன
மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறனும் இதை தான் CM என்னிடம் சொன்னார் 🔥🔥🔥
பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மதுவை பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி அடுத்த தலைமுறையிடம் பூரண மதுவிலக்கு இதுதான் எங்கள் இலக்கு 🔥 🔥
@KanimozhiDMK@TVKVijayHQ What could be more brutal than undressing a women's saree in the assembly parliament. How much people's amount DMK ministers and MLA taken as a bribe. 200% corruption DMK govt, I personally felt that. The current CM only motive is to work for people, not for family like DMK.
இந்த தாய் தொடர்ந்து இந்த மாதிரி கண்ணீரோட நிறைய வீடியோ போட்டு வராங்க என்ன பிரச்சனை தெரியல தயவுசெய்து அவங்கள சந்திச்சு அவங்களுக்கு நடந்த பிரச்சனை என்னன்னு கேட்டு அவங்களுக்கு நீதி வாங்கி கொடுங்க.. 🙏
@TVKVijayHQ@BussyAnand@imrajmohan@AadhavArjuna
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்