We cordially Invite Audiophile & Poetry Enthusiast to Join Us
To Commemorate the Birth Anniversary of the Insightful Poet Na.Muthukumar
When: 12th July Friday 3PM
Contributors: @Dhinesh_singer & @unnaval_naan
"POETRY HEALS THE WOUNDS INFLICTED BY REASON" https://t.co/iwtto0XqLK
அங்கதக் கவிதை
சிரிப்பைத் தந்து சிந்திக்க வைக்கும்,
சவுக்கடி கொடுத்துச் சரி செய்யப் பார்க்கும்,
வேடதாரியின் முகமூடி கிழிக்கும்,
விவேகம் மிகுந்த அங்கதக் கவிதை.
#நாள்20#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்
முரண் கவிதை
வெளிச்சத்தில் நிழல் தொலைக்கும் விந்தை,
இருட்டில் கண்கள் தேடும் விழிப்பு,
இனிக்கும் கண்ணீரும் கசக்கும் சிரிப்பும்,
இணைந்து வாழ்வதே முரண் கவிதை.
#நாள்20#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்
மரபுக் கவிதை
எதுகை மோனைத் தொடை கட்டி,
இசைந்த சந்தம் ஓசை கட்டி,
விதிகளின் சிறையில் கவிதை கட்டி,
வீறு கொண்டு நடை போடும் மரபுக் கவிதை.
#நாள்20#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்
விண்மீன்
கங்குல் வானில் கவிதை
பாடும் வெள்ளிப் பூக்கள்,
கருநீலப் பட்டில் கவிழ்ந்த வைரத் துகள்கள்,
திங்கள் சூடிய வானத்துத் தோரண விளக்குகள்,
எண்ணித் தீராத இறைவனின் எழில்மிகு தூரிகைகள்.
#நாள்19#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்
மேகம்
வானத்து வீதியில் ஊர் சுற்றும் நாடோடி மேகம்,
பஞ்சம் வரும்போது மட்டும் பதுங்கும் கருமி,
உழவன் விழி பார்த்துக் கண்ணீர் வடிக்காமல்,
ஏரிக்கரை 'செல்பி'களுக்கு மட்டும் நிழல் தரும் வேடதாரி.
#நாள்19#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்
ஆகாயம்
வண்ணங்கள் பூசாத நீலப் பெரும் ஓவியம் ஆகாயம்,
மண்ணின் தாகத்திற்கு மடிப்பிச்சை போடும் கொடையாளி,
எல்லைகள் இல்லாத பறவைகளின் சுதந்திரப் பாட்டை,
கண்களுக்கு எட்டாத தூரத்தில் கட்டி வைத்த கோபுரம்.
#நாள்19#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்
பரிதி
கதிர்வீச்சுக் கரம் கொண்டு இருள் மாய்க்கும் பரிதி,
கார்மேகம் கிழித்து வரும் கனல் தெறிக்கும் செஞ்சுடர்,
புவி வாழ உயிர் ஊட்டும் தழல் மாறாத் தலைவன்,
விண்ணகத்து விழி திறந்து மண் காக்கும் மார்க்கண்டன்.
#நாள்19#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்
மைதானம்
புற்கள் மண்டிய மைதானம் அன்று புழுதி ஆட்டம்,
கட்டிடம் மண்டிய காலிமனை இன்று சுவர் ஆட்டம்,
பரி ஏறி விளையாடிய வீர வரலாறு போக இன்று,
பேசும் கைபேசியில் விளையாடும் கட்டைவிரல் வீரம்.
#நாள்18#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்
பம்பரம்
சாட்டை கொண்டு சுழற்றிடும் பம்பரம் என மானுடம்,
வினைப் பயனால் மண்ணில் சுழலுவதோ இயல்பு,
ஆணி முனையில் ஆடும் ஒற்றைக் காலில்,
ஆயுள் முடியும் வரை ஆடுவதே வாழ்வின் விந்தை.
#நாள்18#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்
அடிகுழாய்
கையை உயர்த்தி வலியுடன் அழுத்திட பூமி,
தன்னைக் கரைத்துத் தந்த அமிர்தத் தாரை,
இன்று எந்திர இரைச்சலில் தாகம் அடங்கவில்லை,
அன்று அடிகுழாய் தந்த அலாதிச் சுவை எங்கே???
#நாள்18#தினம்05_கவிதைகள்#கவிதை_மாரத்தான்