வணக்கம், எங்களுடன் இனைந்து விவசாயிகளுக்கு உதவ நினைப்பவர்கள் +91-755-0055333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
If you would like to join us in volunteering/supporting our farmers, please do contact us on +91-755-0055333.
உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனர் திரு. கார்த்தி சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அவர் நேசிக்கும் திரைத்துறையிலும், சமூகப் பணியிலும் மேலும் மேலும் அளப்பரிய பங்களிப்பைச் செய்ய எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
நன்றியுடன்
உழவன் ஃபவுண்டேஷன் மற்றும் விவசாயப் பெருமக்கள்.
இந்த முகாமில், கால்நடை வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள், பல்வேறு நோய்கள், சினை பிடிப்பு போன்றவற்றிற்கு மருத்துவ குழு மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும், குடற்புழு நீக்கம் மருந்துகள் மற்றும் தாது உப்புகள் விவசாயிகள் வைத்துள்ள கால்நடைகளுக்கு ஏற்ப இலவசமாக வழங்கப்பட்டன.
Dairy Development for Rural Farmers
ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் நேற்று (08.05.2026) மணப்பாறை பகுதியில் உள்ள மட்டப்பாறைப்பட்டி கிராமத்தில், இரண்டாம் கட்டமாக இல்லம் தேடி கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
#Karthi#UzhavanFoundation
மணப்பாறை தாலுகா, வெள்ளாளப்பட்டி கிராமத்தில்
14.04.2026 அன்று
உழவன் பவுண்டேஷன், குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும்
பாரியூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து,
உழவர்களின் கால்நடைகளுக்கான அனைத்து சேவைகளும்
ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில்
"உழவன் ஊரக அங்காடி" தொடங்கப்பட்டது. (1/2)
ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன், குமரகுரு வேளாண் கல்லூரியின் தொழில் நுட்ப உதவியுடன், உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் இன்று (12.04.2026) மணப்பாறை பகுதியில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்காக “இல்லம் தேடி கால்நடை மருத்துவ முகாம்”நடைபெற்று வருகிறது.
#UzhavanFoundation
உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் கிராமப்புற விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த கால்நடை மேம்பாட்டு திட்டதிற்கான தொடக்க விழா ஆம்பினால் தொழிற்சாலை மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் உதவியுடன் மணப்பாறை - வெள்ளாளப்பட்டி கிராமத்தில் 08.03.2026 அன்று விவசாயிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.(1/2)
கிராமப்புற விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த கால்நடை மேம்பாட்டு திட்டம்.
மணப்பாறை பகுதியில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில்,
உழவன் ஃபவுண்டேஷன் முன்னெடுப்பில், #AMPHENOL தொழிற்சாலையின் பங்களிப்புடனும், @kumaraguru_agri உதவியுடனும் முதல்கட்ட திட்ட ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் -
இவைகளை உயிர்ப்புடன் வைப்போம்.
அரசியலமைப்பு நமக்கு தந்த உரிமைகளை
சமூக நலனுக்காக பயன்படுத்துவோம்.
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
#HappyRepublicDay
நஞ்சில்லா விளைபொருட்களுக்கென தனி சந்தையை உருவாக்கி, விவசாயிகள் உரிய விலை பெறவும், மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கவும் உழைக்கும் மக்கள் நலச்சந்தைக்கு சிறந்த வேளாண் கூட்டமைப்புக்கான உழவர் விருதும் ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
#Karthi#UzhavarAwards
திருப்பூர் நகரில் குப்பைகள் மற்றும் சாக்கடை கழிவுகளால் கழிவுகளால் முற்றிலும் அழிந்திருந்த மூளிக்குளம் ஏரியை மீட்டெடுத்த வேர்கள் அமைப்பிற்கு, நீர்நிலைகளை மீட்டெடுத்ததில் சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருதும் ரூ.2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. #UzhavarAwards
எந்த வித எதிர்பார்ப்புமின்றி 35 ஆண்டுகளாக விவசாயிகள் நலனுக்காகவும் நஞ்சில்லா உழவிற்காகவும் உழைத்து வரும் திரு. பாமயன் அவர்களுக்கு வேளாண் துறையில் சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருதும் ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
#Karthi#UzhavarAwards2026
விவசாயக் கூலியாக வாழ்வை தொடங்கி 30 ஆண்டுகள் அயராது உழைத்து, இன்று விவசாயியாகவும் 250+ கால்நடைகளுக்கு சொந்தக்காரராகவும் உயர்ந்த கோவில்பட்டி பழனியம்மாள் அவர்களுக்கு சிறந்த விவசாயிகளுக்கான உழவர் விருது மற்றும் ₹2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டது #UzhavarAwards2026