மாண்புமிகு @Udhaystalin அவர்களை நேற்று நேரில் சந்தித்தோம்.
தேர்தல் முடிவுகள் எதிர்பாராத விதத்தில் அமைந்திருந்தாலும், அவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
மக்களுக்காக அவர் ஆற்றிய பணி அளவிட முடியாதது. ஒரு தேர்தல் முடிவு அதை அளவிட இயலாது.
இது ஓர் இடைநிறுத்தம் மட்டுமே,
கழகத்தின் பயணம் தொடர்கிறது.
பிறை நிலவாய் நீங்கள் என்றும் துணை நிற்க,
உதயசூரியனாய் நாம் மீண்டும் இணைந்தே எழுவோம்! ❤️🖤
தோளோடு தோள் நிற்கும் இஸ்லாமிய சொந்தங்களின் நம்பிக்கைக்கு என்றும் திமுக உற்ற நண்பனாக, அரணாக நிற்கும்!
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்!
தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது!
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்!
பண்பற்ற பழனிசாமி அவர்களே,
தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல!
எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்!
மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!