#ராகுல்காந்தி பதவி பறிப்பு விவகாரம்: இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளேன். அதில் :
“ ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். திரு ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கும் ஆளும் கட்சியின் எண்ணம் இதில் தெளிவாகத் தெரிகிறது. எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, கீழமை நீதிமன்றங்களில் அரசு தலையிடுவதை இது வெளிப்படுத்துகிறது. இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை விவாதிக்க சபையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளோம்.
#VCK
#Thiruma
@RahulGandhi
#விசிக மகளிர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைக்கும் அனைத்துலக மகளிர் நாள்,
அன்னை இராமாபாய் பிறந்தநாள், கல்வித்தாய் சாவித்ரிபாய் ஃபுலே நினைவு நாள் முப்பெரும் விழா.
#தொல்திருமாவளவன்#விசிக
#மார்ச்_10: மாமனிதர் ஜோதிபா ஃபுலே அவர்களின் அருமைத் துணைவியாரான அன்னை #சாவித்திரிபாய் அவர்களின் நினைவுநாளான இன்று பெண் கல்விக்கான உரிமைக் களத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அன்னையின் ஈகத்தை நன்றியோடு போற்றுவோம்.
#NLC_India_Ltd நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி மாண்புமிகு முதல்வர்
@mkstalin அவர்களைச் சந்தித்தோம். தோழமை கட்சிகளின் தலைவர்கள்
@kbcpim@mutharasancpi@tvkvelmurugan
ஆகியோருடன் நானும் பங்கேற்றேன். பல்வேறு கோரிக்கைகளைப் பற்றிப் பேசினோம்.
அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்ற @EVKSElangovan அவர்கள் இன்று சட்டப்பேரவைத் தலைவர் @AppavuSpeaker மற்றும் மாண்புமிகு முதல்வர் @mkstalin ஆகியோரின் முன்னிலையில் உறுதிமொழியேற்று பதவியேற்றுக் கொண்டார்.
விசிக சார்பில் அவருக்கு ஆடைபோர்த்தி வாழ்த்துத் தெரிவித்தேன்.
#VCK
#விசிக மகளிர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைக்கும் அனைத்துலக மகளிர் நாள்,
அன்னை இராமாபாய் பிறந்தநாள்,கல்வித்தாய் சாவித்ரிபாய்ஃபுலே நினைவு நாள் முப்பெரும் விழா.
#தொல்திருமாவளவன்#விசிக@VCKmagalir
#ஈரோடு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இவிகேஎஸ்.இளங்கோவன் அவர்களை ஆதரித்து கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு இன்று ஈரோட்டில் #தேர்தல் பரப்புரையை மேற்கொண்டேன்.
#VCK#Thiruma
#ஈரோடு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்களை ஆதரித்து கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு இன்று ஈரோட்டில் #தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட போது செய்தியாளர் சந்திப்பில்...
#VCK#Thiruma
#ஈரோடு (கி) இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்களை ஆதரித்து கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு இன்று ஈரோட்டில் மேற்கொண்ட #தேர்தல் பரப்புரை...
#VCK#Thiruma
On behalf of VCK, we wish Hon'ble CM of Telangana shri #KCR on his b'day to achieve his goal that our country should be free from sanatan forces.
He has to get success in his all endeavors in politics through his new national party,#BRS.
#HBDKCR@TelanganaCMO@MinisterKTR
புத்தகயா மகாபோதி விகாரில் எம்மை வரவேற்றுச் சிறப்பித்த #மிஷன்_ஜெய்பீம் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் முனைவர் பங்கஜ் பஸ்வான், அவரது அண்ணன் முனைவர் இராம் கிஷோர் பஸ்வான் மற்றும் அவர்களது நண்பர்கள்.
#Missionjaibhim#Bothgaya#MahabothiTemple
#Social_Engineering என்னும் பெயரால் நடத்தப்பட்ட சோதனை முயற்சியின் ஒரு செயல்திட்டமாக சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நத்தம் இளவரசனின் தந்தை #இளங்கோவன் காலமானார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளே சென்றதும் அங்கே இருந்த பிக்கு ஒருவர் புத்தரின் திருவுருவச்சிலையின் மீதிருந்த ஆடையை எடுத்து அணிவித்துச் சிறப்பித்தார்.
விகாரின் வெளியே பின்பகுதியில் புத்தர் அமர்ந்திருந்த இருக்கை பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. அதனைச் சுற்றிலும் பெண்கள் உட்பட பலர் தியானம் செய்தனர். (3/3)
பின்னர் அடுத்தடுத்து வந்த ஹர்ஷர், கனிஷ்கர் போன்ற மன்னர்களால் வெவ்வேறு காலகட்டத்தில் எழுப்பப் பெற்றதே தற்போது கம்பீரமாய் வான்முட்ட நிமிர்ந்து நிற்கும் மகாபோதி கோபுரம் ஆகும். பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த ஏராளமானோர் அங்கேயே அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தனர். (2/3)
மகாபோதி விகாரில் பௌத்தபிக்கு ஒருவர் எம்மை வரவேற்று வெள்ளைப் பட்டாடை அணிவித்துச் சிறப்பித்தார். அதன்பின்னர் விகாருக்குள் செல்ல சிறப்பு அனுமதி வழங்கினர்.
புத்தர் ஞானமெய்திய இத்தலத்தில் தான் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னர் அசோகர் அவர்கள் நினைவுத்தூண் ஒன்றை எழுப்பினார்..(1/3)