பதவி சுகத்திற்காக கொள்கைகளை தூக்கி எறிந்த திமுக-பிஜேபி கூட்டணி கிட்டத்தட்ட உறுதி!
நமது அரசுக்கும், தலைவருக்கும் எதிராக பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிடக் களம் இறங்குகிறார்கள்.
My dear virtual Warriors வதந்திகளை முறியடிக்கத் தயாராவோம்!
இனி ஆட்டம் சூடு பிடிக்கும்! 👊💥
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம்.
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.
திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.
தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.
தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது.
கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.
பவள விழா பாப்பா…
என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி.
Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி.
மக்களே…
இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
எனது வீட்டில் எனது மகள் மரு. மதிவதினி இட்ட விசில் கோலம். விசில் கோலம் நாடெங்கும் போடுங்கள். நாளை நமதே என்று நம்புங்கள், விசிலின் ஓசையில் தளபதி @TVKVijayHQ யின் ஆட்சி மலரட்டும்..!
விகடன் கருத்துக்கணிப்பு படி தலைவர் விஜயின் அரசியல் வருகை நாம் தமிழர் கட்சியை அதிகம் பாதித்திருப்பதால்தான் நாம் தமிழர் கட்சியினர் ஆப்பில் சிக்குப்பட்ட குரங்குகள் போல அல்லும் பகலும் விஜயை@TVKVijayHQ பற்றி அவதூறு பரப்பிக் கொண்டிருக்கின்றனர்😭😇❤️
நாம் தமிழருக்கு கூப்பு உறுதி😂
வெற்றி நிச்சயம்❤️✅
#TVKVijay
#விசில்புரட்சி2026
#வரலாறு_திரும்புகிறது
உளவுத்துறை ரிப்போர்ட் இந்த தேர்தல் விஜய்க்கான தேர்தல்🔥🔥
அரண்டு போன திமுக 😆😆😎😎
ஒருவேளை அடுத்த முதல்வர் தெரிஞ்சதால தான் போலீஸ் பாதுக்கப்பு பட்டய கிளப்புது போல இப்போலாம் 💯💯💯
வரலாற்று வெற்றி! ஜனநாயகம் காக்கப்பட்டது!
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா படுதோல்வி!
இது அதிகார மிரட்டல்களுக்கு எதிராகக் கிடைத்த மாபெரும் வெற்றி.
தென்னகத்தின் குரல் டெல்லியில் ஓங்கி ஒலித்துவிட்டது! 👏🏻👏🏻
மசோதாவிற்கு எதிராகத் தலைவர் விஜய் @tvkvijayhq எடுத்த அரசியல் நிலைப்பாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது! 🔥
மக்கள் சக்தியின் முன் எதவும் எடுபடாது என்பதற்கு இதுவே சாட்சி!
கோவை வால்பாறை அருகே சுற்றுலாப் பயணிகள் பயணித்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்து பேர் பலியான செய்தி மன வேதனையை அளிக்கிறது. பலத்த காயமடைந்து பொள்ளாச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.