கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரனாரை அவமதித்த ஆதித்யா தொலைக்காட்சிக்கு கடும் கண்டனம்!
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயரின் அடக்குமுறையையும் வணிக ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தன் சொத்து, சுகம், வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து, சிறையில் செக்கு இழ���த்துத் தியாகத்தின் உச்சத்தைத் தொட்டவர் நமது மதிப்பிற்குரிய கொள்கை வழிகாட்டி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார். தமிழர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், சுதேசி சிந்தனைக்கும் முகவரியாகத் திகழும் தேசியத்தலைவர் வ.உ.சி அவர்களின் தியாக வரலாற்றை வருங்கால தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்கள், நகைச்சுவை என்ற பெயரில் அவரைக் கேலிப்பொருளாகச் சித்தரிப்பது மிகவும் வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.
சமீபத்தில் ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்று, வ.உ.சிதம்பரனார் அவர்களின் புனிதமான நினைவையும் வரலாற்றுப் பெருமையையும் சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நகைச்சுவைக்கும் கேலிச்சித்திரங்களுக்கும் எல்லையும் நாகரிகமும் உண்டு. நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தியாகிகளை, வர்த்தக லாபத்திற்காக��ும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இழிவுப���ுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வரலாற்று நாயகர்களையும், தியாகிகளையும், ஊடகங்கள் இழிவுபடுத்துவதைத் தடுக்கத் தேவையான கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், ஆதித்யா தொலைக்காட்சி நிர்வாகம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தேசியத்தலைவரையும் சுதந்திரப் போராட்ட வீரரையும் இழிவுபடுத்தி ஒளிபரப்பிய ஆதித்யா தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவ���். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia
@CPR_VP
சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்களின் பைசன் (காளமாடன்) திரைப்படம் இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பு! வெல்லட்டும் பைசன் காளமாடன்!!
பைசன் காளமாடன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். சாதிய திரைப்படம் என பைசன் விமர்சிக்க பட்ட நிலையில், இந்த திரைப்படத்தை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை எவ்வித இடையூறுகளுக்கும் இடமளிக்காமல் முழுக்க முழுக்க திரைப்படத்தின் மீது கவனத்தை வைத்திருக்கும் படியாக கதைக்களம் அமைந்திருந்தது.
தென் மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் ���ிறந்து, மிகப்பெரிய பகையினால் ஏற்பட்ட மோதலுக்கும், சாதிய சிக்கலுக்கும் மத்தியில், தனது இலட்சியத்தை அடையும் ஒரு இளைஞனின் போராட்டத்தை, தமிழரின் வீரவிளையாட்டான கபடி மூலம் உணர்வுபூர்வமாக அனைவரது மனதிலும் சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் விதைத்துள்ளார் என்றால் மிகையாகாது.
தாய்க்கு நிகரான சகோதரியின் அன்பையும், ஒரு தந்தையின் நம்பிக்கை எந்தளவிற்கு ஒரு பிள்ளை தனது லட்சியப் பா���ையை அடைய உறுதுணையாக இருக்கும் என்பதனையும், இந்த திரைப்படத்தின் மூலம் சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் இந்த சமூகத்திற்கு காட்சிபடுத்தியி��ுக்கிறார்.
சாதிக்க துணிந்தால், எத்தனை பெரிய வேலி போட்டாலும் தன்னம்பிக்கையால் அதனை தகர்த்து விடலாம் என்பதனை மிக தெளிவாகவும், நேர்த்தியாகவும் பைசன் மூலம் காட்சி படுத்தியுள்ளார். இத்திரைபடத்தில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பை தந்த சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்களையும், படக்குழுவின��ையும் மனதார வாழ்த்துகிறேன்.
பிறப்பால் அனைவரும் சமம் என்ற பாண்டியராஜக்களின் நெஞ்சுரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்! வெல்லட்டும் பைசன் காளமாடன்!!
#BisonKaalamaadan
#Bison
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் நடந்த துயரம்.
உளவுத்துறையின் தோல்வி மற்றும்
தவெக திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடியே இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு காரணம்.
#KarurTVKCampaign#Karur
எதிரில் நிற்பது எவரேனும் எதிர்த்து நிற்கும் நெஞ்சுரமும்,இடர்கள் எதுவாயினும் எளிதில் வெல்லும் அறிவாற்றலும் தந்திட்ட பேராசான்,வாழும் பேரரசரிடம் வாழ்த்து பெற்றேன்.
முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும், முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்துடனும்,எதிர்வரும் 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் நடைபெறவு��்ள, முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழை, இந்து முன்னணியின் மாநில தலைவர் உயர்திரு.காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வழங்க பெற்றுக்கொண்டேன்.
இந்த மாநாடு தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருளால் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!
@hindumunnani_tn
#முருகபக்தர்கள்மாநாடு
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராக சமூக பணியாற்றி வந்த முத்துப்பேட்டை ஆலங்காட்டை சேர்ந்த ரமேஷ் அவர்கள் 16.05.2025 அன்று மறைவெய்தினார்.அதனையொட்டி இன்று நடைபெற்ற அவர���ு படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு படத்தினை திறந்து வைத்தேன்.(1/2)
புதுக்கோட்டை மாவட்டம்,கறம்பக்குடி வட்டம்,மலையூர் கிராமம்,பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான முத்தரையர் சமுதாய இளைஞர் முருக��சன் என்பவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் @Seeman4TN அவர்களை சென்னையில் இன்று அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினேன்..
இன்றைய தினம் தலைநகர் சென்னையில் ���டைபெற்ற தமிழர் ஆட்சி கழக பெயர் மற்றும் கொடி அறிமுக விழாவில் அன்பு சகோதரர் தமிழர் ஆட்சி கழக நிறுவனத்தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
மதரீதியாக கூர் உணர்வுகொண்ட பகுதியாக அறியப்படும் திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் போது,காவல் துறை கேட்டுக் கொள்ளும்பட்சத்தில் அதிகபட்சம் 50 நபர்களோடாவது நினைவேந்தலை முடித்துக் கொள்கிறோம் என்ற போதும் கூட மாவீரன் ராஜேஷ் அவர்களின் நினைவேந்தலுக்கு சட்ட ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுப்பது ஏன்?
மாவீரன் ராஜேஷ் நினைவேந்தலுக்கு கெட்டுவிடும் சட்டம் ஒழுங்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தும் போது மட்டும் பாதுகாக்கப்படுவது எப்படி?
மூன்று வருடம் தடுத்தீர்கள்,இன்னும் எத்தனை வருடம் தடுப்பீர்கள்?! யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை?