விருதுநகர் அண்ணா நகர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்றாட தேவையான பொருள்களை வழங்கினார்.🙏🏻
என்றும் தளபதி வழியில்!!❤️
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு!
கட்சியின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பாட்டிற்கும் முரணாக செயல்பட்டதாக பெறப்பட்ட தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட மத்திய ஒன்றிய செயலாளர் திரு. M. முத்துவேல் அவர்கள், அப்பொறுப்பிலிருந்து 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில், உரிய நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#தமிழகவெற்றிக்கழகம்
விருதுநகர் சித்தமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.
ஆய்வின்போது ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து கேட்டறிந்தேன். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தேன்.
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMVijay
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினேன்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரைத் தாங்கி சிறப்புடன் இயங்கி வரும் இந்த கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தினர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை முன்னெடுத்துச் செல்லும் என்னை தலைமை விருந்தினராக அழைத்து கௌரவித்ததற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் தமிழ்நாட்டிற்கும், விருதுநகருக்கும் பெருமை சேர்க்க நல்வாழ்த்துகள்.💐
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMVijay
தமிழ்நாடு அரசு, விருதுநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற "வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில்" கலந்து கொண்டேன்.
மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி K. ஜெகதீஸ்வரி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. சுகபுத்ரா, IAS அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை விரைவுபடுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#Virudhunagar
விருதுநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, காமராஜர் புதிய பேருந்து நிலையம் வழியாக கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க போக்குவரத்துத் துறை ஒப்புதல் வழங்கியதை முன்னிட்டு, இன்று புதிய பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது!
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள்,மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பொதுமக்களிடம் உரையாற்றினேன்.விருதுநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கைக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கே சொந்தமானது!
இதை நிறைவேற்ற வழிவகுத்த தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுத்த மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் @TamilanParthib1 அவர்களுக்கும் மீண்டும் விருதுநகர் தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!
"இது தொடக்கம் மட்டுமே...மக்கள் சேவை தொடர்ந்து நடைபெறும்."🙏🏻
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMVijay
விருதுநகர் மக்களின் நீண்டவருட கோரிக்கையை ஏற்று, காமராஜர் புதிய பேருந்து நிலையம் வழியாக கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க போக்குவரத்துத் துறை ஒப்புதல் வழங்கியதை முன்னிட்டு, இன்று புதிய பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது!
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள்,மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பொதுமக்களிடம் உரையாற்றினேன்.விருதுநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கைக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கே சொந்தமானது!
இதை நிறைவேற்ற வழிவகுத்த தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுத்த மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் @TamilanParthib1 அவர்களுக்கும் மீண்டும் விருதுநகர் தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!
"இது தொடக்கம் மட்டுமே...மக்கள் சேவை தொடர்ந்து நடைபெறும்."🙏🏻
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் திரு ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் "தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம்" சார்பில் நடைபெற்ற மாபெரும் சிலம்பாட்ட சாலைப் பேரணியில் கலந்து கொண்டு இளம் சிலம்பக் கலைஞர்களை சந்தித்து வாழ்த்தினேன்.
சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்களின் வழியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தேன். மேலும், சிலம்ப வீரர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!💐
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMVijay
A victory for the long-standing demand of Virudhunagar people!
Following our MLA @selvamVNR representation to the Transport Department, approval has been granted to operate buses via the Kamarajar New Bus Stand, Virudhunagar.
A total of 316 bus services trips including SETC services, covering routes towards Madurai, Sivakasi, Kovilpatti, Sankarankovil, Tenkasi, Trichy, Coimbatore, Salem, Kanyakumari and many other destinations, will now pass through the Virudhunagar Bus Stand.
My sincere thanks to the Hon'ble Chief Minister @CMOTamilnadu and Hon'ble Transport Minister @TamilanParthib1 Our Virudhunagar MLA @selvamVNR for making this possible.🙏🏻🔥
#VirudhunagarMLA #CMVijay
விருதுநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது.🙏🏻
போக்குவரத்துத் துறையிடம் வழங்கிய மனுவை ஏற்று, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. @TamilanParthib1 அவர்கள் விருதுநகர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் வழியாக பேருந்துகளை இயக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.
போக்குவரத்துத் துறையின் உத்தரவின்படி, 274 தனி பேருந்து நடைகள், மொத்தம் 316 விருதுநகர் காமராஜர் பேருந்து நிலையம் வழியாக
இந்த சேவைகளை இயக்குவதற்கு சுமார் 120 முதல் 150 பேருந்துகள் வரை பயன்படுத்தப்படுகிறது
விருதுநகர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்பட உள்ளன.
இதில்:
• விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக இயக்கப்படும் 26 பேருந்துகள்
• விருதுநகர் – சிவகாசி – மதுரை வழித்தடத்தில் 124 பேருந்துகள்
• மதுரை – கோவில்பட்டி வழித்தடத்தில் 51 பேருந்துகள்
• மதுரை – சங்கரன்கோவில் – செங்கோட்டை வழித்தடத்தில் 37 பேருந்துகள்
• அருப்புக்கோட்டை – ராஜபாளையம் வழித்தடத்தில் 21 பேருந்துகள்
• அரசு விரைவு போக்குவரத்துக் கழக (SETC) 40 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மதுரை, சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், செங்கோட்டை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், பழனி, குமுளி, நத்தம், பொள்ளாச்சி, இராமேஸ்வரம், திருச்செந்தூர், சிவகங்கை, ராஜபாளையம், வத்திராயிருப்பு, கூமாப்பாட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்பட உள்ளன.
இதனால் புதிய பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகரிப்பதோடு, பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயனடைவார்கள். மேலும் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாக இது அமைகிறது.
விருதுநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வழிவகுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுத்த மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் @TamilanParthib1 அவர்களுக்கு விருதுநகர் தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!!
மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்றிட எனது மக்கள் பணிகள் தொடர்ந்து செய்வேன் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🏻
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #TVKVijay
என் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்னை உருவாக்கிய என் அண்ணன், தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.❤️
அரசியல் வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த என்னை, மக்கள் சேவையின் பாதைக்கு அழைத்து வந்ததும் நீங்கள் தான். ஒரு சாதாரண கடைக்கோடி தொண்டனாக இருந்த எனக்கு அடையாளம், அங்கீகாரம், புகழ், பதவி என அனைத்தையும் வழங்கி இன்று சட்டமன்ற உறுப்பினராக அழகு பார்க்கும் என் தலைவரும் நீங்கள் தான்.
"தாய்க்கு நிகர் யாருமில்லை" என்பார்கள். ஆனால் என் வாழ்க்கையில் அதையும் தாண்டி என்னை பார்த்து, வழிநடத்தி, உயர்த்தி வைத்தவர் நீங்கள். நான் தடுமாறிய நேரங்களில் தைரியம் கொடுத்ததும், வாழ்க்கையை சரியான பாதையில் மாற்றியதும் நீங்கள் தான்.
உங்கள் மீது வைத்துள்ள அன்பும் நன்றியும் என் உயிர் உள்ளவரை இருக்கும்!
நீங்கள் நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் மக்கள் பணியாற்றி தமிழ்நாட்டை மேலும் உயர்த்திட இறைவனை வேண்டுகிறேன்.🙏🏻
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா,தலைவா! ❤️💐
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். 🙏🏻
தலைவர் வழியில் சமூக அக்கறையுடனும், மக்கள் நலன் என்ற உயர்ந்த நோக்கத்துடனும் தொடர்ந்து பணியாற்றுவோம்!!
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட இளைஞர் அணி சார்பாக கல்லூரணியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அன்னதானத்தையும் வழங்கினேன்.
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சுழி தெற்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
🙏🏻 மக்கள் சேவை தொடர்ந்து நடைபெறும்.
#HBDCMJosephVijay
அன்பும், அர்ப்பணிப்பும், மக்கள் நலனும் நிறைந்த தலைவராக தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.❤️
மக்களின் கனவுகளை நனவாக்கும் உங்கள் தலைமையில் தமிழ்நாடு மேலும் பல்வேறு வளர்ச்சிப் பாதைகளில் முன்னேறி, மக்கள் நலச் சேவைகள் தொடரட்டும்.
நீங்கள் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.✨
என்றும் தளபதி வழியில்,
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சுழி தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.🙏🏻
ஏழை எளிய மக்களின் முன்னேற்றமே இந்த அரசின் இலக்கு என்பதையும், அந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெரிவித்தேன்.
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMVijayBirthay
நேற்று அயன்ராஜாபட்டி ஸ்ரீபாலாஜி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெற தேவையான மருத்துவ சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய மருத்துவமனை நிர்வாகத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டேன். 🙏🏻
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA