This Page is all about Our Leader @actorvijay and @tvkvijayhq || தமிழக வெற்றி கழகம் ❤️🐘💛 || ONE LAST DANCE #JanaNayagan 🥺 ||#VirtualWarriors of TVK Party ll
மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026-ல் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற அலுவலகம் மற்றும் ஆரப்பாளையம் ஞான ஒளி புறம் ஆகிய இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்துள்ளேன். பொதுமக்கள் அனைவரும் தாராளமாக வருகை தந்து, தாகத்தைத் தணித்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."
**
நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய மக்களின் வாய்மைக் குரலாக ஒலித்து வரும் ஆங்கில நாளிதழான @the_hindu குழுமத்தின் சார்பில், ‘தி இந்து ஹடில்’ (The Hindu Huddle) என்ற சிந்தனை சந்திப்பு ஜூன் 5, 6 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
அரசியல், கல்வித்துறை, தொழில் மற்றும் பெருநிறுவனங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, சிவில் சமூகம், இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சிறந்த ஆளுமைகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து கருத்துகளை வெளியிடும் களமாக அமைந்துள்ளது ’தி இந்து Huddle’.
கர்நாடக முதல்வர் மாண்புமிகு @DKShivakumar, காஷ்மீர் முதல்வர் மாண்புமிகு @OmarAbdullah, முன்னாள் மத்திய அமைச்சர் @Jairam_Ramesh உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த பெருமை மிகு அமர்வில்...இன்று நாம் கலந்துகொண்டோம்.
மாற்றத்திற்கான புதிய மக்கள் தீர்ப்பு: 'ஜென் சி' (Gen Z) தலைமுறையின் லட்சிய கதை- என்ற தலைப்பில் நமது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
@tvkvijayhq | @tvkhqitwingoffl |
@TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk
ஒரு வாக்காளருக்கு... ஒரு மரம்!
உலக சுற்றுச்சூழல் தினம்
தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் சார்பில் 1.2 கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
கவுண்டம்பாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக 1,46,466 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற திருமதி. கனிமொழி சந்தோஷ் MLA அவர்கள் தன்னை வெற்றிபெற வைத்த ஒவ்வொரு வாக்காளரின் சார்பாக ஒரு மரக்கன்று என்ற அடிப்படையில் 1,46,466 மரக்கன்றுகள் நடும் பணியை சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் கோவையில் இன்று துவக்கி வைத்தார்.
ஒருவர் ஒரு மரம் நடும்போது, அவர் தனது வாழ்நாளை மட்டுமல்ல; அடுத்த தலைமுறையின் வாழ்வையும் வளமாக்குகிறார். வீடு, பள்ளி, அலுவலகம், பொதுஇடங்கள் என எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
என்றும் மக்கள் பணியில்
திருமதி. கனிமொழி சந்தோஷ் MLA
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
🏆 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கம் – 2026 🏆
📍 இராஜரத்தினம் மைதானம், எழும்பூர்
📆 06.06.2026
🏅 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் Dr. A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 300 காவல் ஆளிநர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான 🏆 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
🎖️👏 காவல் துறையில் 10 ஆண்டுகள் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவல் ஆளிநர்களின் அர்ப்பணிப்பு, கடமை உணர்வு மற்றும் சேவையைப் பாராட்டும் வகையில் இப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
👮♂️ இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் (தலைமையிடம், போக்குவரத்து, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய குற்றப்பிரிவு), காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டார்கள். 🚔✨
#CMPoliceMedal #ChennaiPolice #GCP #AwardCeremony #PolicePride #DutyAndDedication #ServingTheCommunity
கோட்டு சூட்டு போடுவது பிரச்சனை இல்லை; கோட்டை விடுவதுதான் பிரச்சனை என்று @Udhaystalin உளறிக்கொட்டியிருக்கிறார். எந்த இடத்தில் கோட்டை விட்டார் என்று சொல்வத்ற்கு துப்புண்டா? ஒப்பந்தக்காரர்கள் கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் @AadhavArjuna கூட்டுகிறார். தரம்தான் முக்கியம்; கமிஷன் தேவை இல்லை என்கிறார், இதற்கு பெயர் கோட்டை விட்டதா? வண்டல் மண் இனாமாக எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இதற்கு பெயர் கோட்டைவிட்டதா?
எல்லாவற்றிலும் கோட்டைவிட்டு கொள்ளையடித்த கூட்டம் எரிச்சலில் பேசுவதை எந்தத் தமிழனும் கேட்கத் தயாரில்லை.
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 'நார்வே செஸ் தொடரில்' இந்திய கிராண்ட்மாஸ்டரும் நம் தமிழ்நாட்டின் செல்வனுமாகிய பிரக்ஞானந்தா அவர்கள் வெற்றிபெற்றுள்ள செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. 'நார்வே செஸ் சாம்பியன்' என்ற பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமிதத்தை நம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் அளித்துள்ள செல்வன் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் "தமிழ்நாடு Elite வீரர்கள் திட்டத்தின்" பயன் ஏற்பாளரான செல்வன் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிக்குப் பெருமை கொள்கிறோம்.
உலக அரங்கில் தமிழ்நாட்டு இளைஞர்கள் சாதனைகள் பல படைப்பதற்கு இந்த வெற்றி முன்னுதாரணமாக அமைந்துள்ளது. நமது வீரர் - வீராங்கனையர்கள் மேலும் பல சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டின் திறனையும் சிறப்பையும் உலகறிய செய்யத் தமிழ்நாடு அரசு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி இரா. சாந்தி அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
ஆர்.கே.நகரில் எழுச்சிமிகு நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டம்
நமது ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றி பெற்று, தமிழகத்தின் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு டாக்டர் நெ. மரிய வில்சன் (Dr. N. Marie Wilson) அவர்களின் ஆர்.கே. நகர் தொகுதி வெற்றி விழா மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று எழுச்சியோடு இனிதே நடைபெற்றது!
இப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பான வாழ்த்துரைகளை வழங்கிய அமைச்சர்கள்:
மாண்புமிகு என். ஆனந்த் (N. Anand)
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்)
மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna)
(பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்)
திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்த ஆர்.கே.நகர் தொகுதிப் பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
#RK Nagar #ThanksgivingMeet #DrMarieWilson #SuccessMeet #PublicMeeting #TamilNadu
அன்புள்ள அனைவருக்கும் அன்புடன் ஒரு வேண்டுகோள்.,
என்னை சந்திக்க வருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களின் அன்பினை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகங்களாக வழங்கினால் அவற்றை படிக்கவும், பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழங்கிடவும் வழிவகையாக இருக்கும்.
தயவுசெய்து பொன்னாடைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்குக! நன்றி!!