"உங்களை நீங்களே நேசியுங்கள்; ஒரு வரையறை செய்யுங்கள். உங்கள் நேரமும் சக்தியும் மதிப்பு மிக்கவை. அதை எப்படி உபயோகிக்க வேண்டும் எனத் தெரிவு செய்யுங்கள். எதை ஏற்பீர்கள், எதை நிராகரிப்பீர்கள் என்பதை முடிவு செய்து உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதை உணர்த்துங்கள்."
- விஸ்வா
அச்சம் கொள்ளும் போது காட்டும் சிரத்தையும், அக்கறையுடன் கூடிய கவனத்துடனான செயல்பாடும்,
நம் கனவுகளை நிஜமாக்குவதிலும் செலுத்தினால், நம் வாழ்வில் அதிசயம் நிகழும் கனவுகள் மெய்ப்படும்.
#sigaram#thoughts
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்
கடக்கப்போகும் பெரும்பாதையை கண்டு நீங்கள் வியக்கும்போது,
கடந்து வந்து பெரும் பாதையை நினைத்துப் பாருங்கள்.
சந்தித்த சவால்களையும் துன்பங்களையும் நினைத்துப் பாருங்கள்.
அனைத்து பயமும் உங்களை விட்டு ஓடிவிடும்.
நிச்சயம் உங்களால் வெல்ல முடியும்…
வாழ்க்கையில் நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது..
ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது..
மற்றொன்று ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது...