பேரதிர்ச்சியாக இருக்கிறது.
1990க்கு பிறகு ஒரு பெரும் இக்கட்டான சூழ்நிலையில் தனது திரை வாழ்வை தொடங்கி நூற்றுக்கணக்கான படங்களை தயாரித்து அதில் எண்ணற்றவர்களை அறிமுகப்படுத்தி தமிழ் திரைப்பட உலகிற்கு புத்துயிர் ஊட்டிய தயாரிப்பாளர்
ஐயா ஆர்.பி.சௌத்ரி அவர்களுக்கு
எனது கண்ணீர் அஞ்சலி.
வீரத்தோடும் அறத்தோடும்
வாழ்வதைவிட இப்பிறப்பில்
வேறு என்ன இருக்கிறது?
எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்
பெருநம்பிக்கையோடு,
வ.கௌதமன்
பேரழகான எம் தமிழ் குயில்
தனது தேன்குரலை நிறுத்திக் கொண்டது.
விடுதலை பெருநெருப்பை
வீதி முழுக்க, ஊர் முழுக்க,
உலகம் முழுக்க முழங்கி
உருமித் திரிந்த வரிப்புலி
தனது பெரும்பாய்ச்சலை
மெளனித்துக் கொண்டது.
பாட்டு(டை) தலைவனே
உனது பணி ஒரு போதும் வீண்போகாது
போய் வா நம்பிக்கையோடு...
குடிக்க வைத்தும் தமிழினத்தின் குடிகளை கெடுத்தும் கோட்டையை ஆண்ட திராவிட கட்சிகளுக்கு படுதோல்வியை பரிசாக தாருங்கள். 2026 தேர்தலில் நடந்துகொண்டிருக்கும் அருவருப்பான அரசியல் செயல்பாடுகள் என சென்னை விமான நிலையத்தில் வைத்து நடந்த அனல் கக்கும் நேர்காணல்.
https://t.co/qDa06z7QxY