ஆயிரம் விளக்கு மக்களின் நல்வாழ்வே எனது மூச்சு! உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருந்து தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைப்பேன்!
என் அன்புக்குரிய ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளப் பெருமக்களே, தாய்மார்களே, பெரியோர்களே, மற்றும் என் அருமை இளைஞர்களே! இந்தத் தேர்தல் களத்தில் உங்களைச் சந்தித்து வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் ஒவ்வொரு நாளும், நீங்கள் என் மீது காட்டும் பேரன்பும் பாசமும் என்னை நெகிழச் செய்கிறது. உங்களை வெறும் வாக்காளர்களாக நான் ஒருபோதும் பார்த்ததில்லை; எனது சொந்தக் குடும்பத்தின் அங்கமாகவே நான் மனதாரக் கருதுகிறேன். ஒரு குடும்பத்தில் உள்ள பெண்ணுக்குத் தன் குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்கள் எப்படித் தெளிவாகத் தெரியுமோ, அதேபோல ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் படும் அன்றாடத் துயரங்களையும், அட��ப்படை வசதிகளுக்காக நீங்கள் நடத்தும் போராட்டங்களையும் நான் முழுமையாக அறிவேன்.
விடியா ஆட்சியின் அலட்சியத்தால் பின் தங்கியுள்ள நமது தொகுதியை மீட்டெடுத்து, அனைவருக்குமான பாதுகாப்பான அரணாக ஆயிரம் விளக்கை மாற்றுவதே எனது தலையாய கடமை. ஒவ்வொரு வீதியிலும் தட்டுப்பாடற்ற சுத்தமான குடிநீர், முறையான வடிகால் வசதிகள், தூய்மையான சுகாதார வளாகங்கள் மற்றும் பழுதற்ற தரமான சாலை வசதிகள் இரு��்பதை முழுமையாக உறுதி செய்��ேன். அதேபோல், தாய்மார்களும் சகோதரிகளும் எவ்வித அச்சமுமின்றி நடமாடக்கூடிய பாதுகாப்பான சூழலையும், முதியவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் தடையின்றிக் கிடைக்கப் பாடுபடுவேன். இதுமட்டுமின்றி, நம் இளைஞர்களின் எதிர்காலம் வீணாகாமல் இருக்க, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களைத் தொடர்ந்து நடத்தி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவேன்.
ஒட்டு���ொத்தத்தில், ஆயிரம் விளக்கு தொகுதியைத் தமிழகத்திலேயே ஒரு சிறந்த 'முன்னோடித் தொகுதியாக' மாற்றுவதே எனது ஒரே இலக்கு. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும், மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலோடும் நமது தொகுதியை வளர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு செல்வேன். உங்களின் பாதுகாப்பான வாழ்விற்கும், குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும் நான் எந்த நிலையிலும் சோர்வின்றி களத்தில் நின்று உழைப்பேன்.
உங்களின் வீட்டுப் பிள்ளையான என் மீது முழு நம்பிக்கை வைத்து, வருகின்ற தேர்தலில் எனக்கு 'இரட்ட�� இலை' சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யுங்கள்! உங்கள் உழைக்கும் கரங்களுக்குத் துணையாக, என்றென்றும் உங்களின் சேவகியாக உழைக்கக் காத்திருக்கிறேன்!
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி.
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
ஆயிரம் விளக்கு தொகுதியின் அன்பான வாக்காள பெருமக்களே!!
உங்கள் வாக்குகளைச் சிந்தித்து அளிப்பீர்!
ஆயிரம் விளக்குத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். நான் சென்ற இடமெல்லாம் இளைஞர்கள், பெரியவர்கள், தாய்���ார்கள் எனப் பொதுமக்கள் அளித்த அமோக வரவேற்பு நெகிழ வைக்கிறது.
நமது தொகுதியில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், 'பட்டா வழங்கும் விவகாரம்' மிக முக்கியமான கோரிக்கையாக உள்ளது. பல ஆண்டுகளாக நீங்கள் படும் ��ந்தத் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
தேர்தல் பரப்புரையின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். உங்கள் ஒவ்வொரு வாக்கும் நமது தொகுதியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
தவறான நிர்வாகத்தை மாற்றவும், மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வரவ��ம், இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்து, இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைத் தேடித் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிந்தித்து வாக்களிப்பீர்! மாற்றத்தை உருவாக்குவீர்!
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!!
உங்கள் வேட்பாளர் பா.வளர்மதி
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி.
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
ஒட்டுமொத்த வளர்ச்சி... பாதுகாப்பான ஆயிரம் விளக்கு!
ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீதியிலும் வளர்ச்சியைக் கொண்டு வருவதே எனது முழுமையான இலக்கு! கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தடையில்லா குடிநீர் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்துத் தளங்களிலும் நமது தொகுதியைத் தமிழகத்திலேயே சிறந்த தொகுதியாக உருவாக்குவேன்.
மக்களின் அன்றாடக் குறைகளைத் தீர்க்கவும், உங்கள் குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் புரட்சித் தலைவி அம்மா அவர்���ளின் வழியில் எனது முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன்!
மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகுங்கள்!
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி.
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
இன்றைய இளைஞர்களின் கைகளில் தான் தமிழகத்தின் எதிர்காலம்!
ஆயிரம் விளக்கு தொகுதியின் எதிர்காலத்திற்காக...
இளைஞர்களிடம் ஒரு வேண்டுகோள்!
ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், நம் தொகுதி இளைஞர்களை நேரில் சந்தித்து 'இரட்டை இலை' சின்னத்திற்கு ஆதரவு திரட்டினேன். ���க்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் காணப்பட்ட அந்த உற்சாகம் எனக்குப் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.
தற்போதைய ஆட்சியில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதும், போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்பதும் வேதனை அளிக்கிறது. அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பொற்கால ஆட்சியில், இளைஞர்களுக்குத் தகுந்த வேலை��ாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன, கல்வி பயின்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. அந்த சிறப்பான நிர்வாகம் மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும்.
நம் தொகுதி இளைஞர்களே, உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்கவும், வரும் தேர்தலில் தவறாமல் 'இரட்டை இலை' சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை அளித்து ஆதரவு தாருங்கள்!
மாற்றத்��ை ��ோக்கி, வெற்றியை நோக்கி பயணிப்போம்!
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி.
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
ஆயிரம் விளக்கு தொகுதியில் இன்று இளைஞர்களுடன் ஒரு கலகலப்பான தருணம்!
விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெறும் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடியது மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று அங்குள்ள இளைஞர்களிடம் வாக்கு சேகரித்தேன்.
விளையாட்டின் மூலம் ஒழுக்கத்தையும், உறுதியையும் கற்றுக்கொள்ளும் நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்க, மாற்றத்திற்கான 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களியுங்கள்! உங்கள் ஆதரவே என் வெற்றி!
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்குத் தொகுதி
@EPSTamilNadu@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார��போற்றும்_வளர்ச்சி
ஆயிரம் விளக்கு மக்களின் அன்பும்... விடியா அரசின் மீதான கொந்தளிப்பும்!
ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். நான் சென்ற இடமெல்லாம் தொகுதி மக்கள் எனக்கு அளித்த உற்சாகமான வரவேற்பும், பேரன்பும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
என்னை அன்புடன் வரவேற்ற மக்கள், அதே வேளையில் தற்போதைய அரசு விதித்து���்ள அதீத சொத்துவரி உயர்வால் தாங்கள் படும் பொருளாதாரச் சுமைகளையும், வேதனைகளையும் என்னிடம் கடுமையான புகார்களாகத் தெரிவித்தனர்.
மக்களின் இந்தக் குறைகளையும், சிரமங்களையும் கவனமுடன் கேட்டறிந்த நான் அவர்களுக்கு ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறினேன்: "உங்கள் உணர்வுகளையும், சிரமங்களையும் நான் நன்கு அறிவேன். நமது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு பல்வே��ு மக்கள் சார்பு முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக, உங்களைப் பாதிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த வ���ி உயர்வு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, உரிய தீர்வு காணப்படும். மக்களின் துயர் துடைக்கவே நமது ஆட்சி அமையும்!"
உங்களின் சுமையைக் குறைத்து, நல்வாழ்வை உறுதி செய்ய... இரட்டை இலைக்கே வாக்களிப்பீர்!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்குத் தொகுதி
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
கானல் நீரான 40 ஆண்டு காலக் கனவு: பெண்களை வஞ்சித்த திமுக
நாடாளுமன்றத்தில் பெண்களின் அர��ியல் உரிமையை அழித்தொழிக்க திமுக எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்துள்ளது. பெண்களுக்கு 33சதவீத இடஒதுக்கீடு வருவதற்கு எதிராக வாக்களித்துத் திமுக தன் நீண்டகாலப் பெண்ணினத்தின் பகைமையை வெளிப்படுத்தியுள்ளது.இந்த வாரிசு அரசியல் கட்சிகளின் ஆணவமே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியடைய முக்கியக் காரணம்.
ஒரு குடும்பத்திற்காக ,ஒரு குடும்பத்தால் நடத்தப்படும்,ஒரு குடும்ப ஆட்சியில்-
ஒரு குடும்பக் கட்சி பல கோடிப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அழித்தொழித்திருக்கிறது.இந்தக்கூட்டணிக்கு, இந்தியாவின் ஒட்டுமொத்த மகளிர் சமுதாயமும் தக்க பதிலடி கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பெண்களுக்கு நம்பிக்கைக்குத் துரோகம் செய்த பாவம் உங்களைச் சும்மா விடாது. மக்கள் மன்றத்தில் நீங்கள் தலைகுனிந்து நிற்கும் காலம் நெருங்கிவிட்டது; இதற்கான மிகக் கட��மையான அரசியல் விலையை நீங்கள் கொடுத்தே தீர வேண்டும்!
@EPSTamilNadu
@AIADMKOfficial
விலைவாசி என்ற பெயரில் பகல் கொள்ளை... சாமானியர்களின் வயிற்றில் அடிக்கும் விட��யா அரசு!
தேர்தல் நேரத்தில் தேன் தடவிய வார்த்தைகளைப் பேசி ஓட்டு வாங்கிவிட்டு, இன்று விலைவாசியை விண்ணளவு ஏற்றி மக்களின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளது இந்த மக்கள் விரோத திமுக அரசு! மளிகைப் பொருட்கள் முதல் காய்கறி வரை தொட்டதெல்லாம் 'ஷாக்' அடிக்கும் அளவுக்கு விலையை உயர்த்திவிட்டு, ஒரு குடும்பம் மட்டும் கொள்ளையடித்துக் கொழுக்கிறது.
உழைக்கும் மக்களின் வியர்வையைச் சுரண்டி, அவர்களின் அன்றாட உணவிலேயே மண்ணை அள்ளிப் போடும் இந்தத் திறனற்ற விடியா ஆட்சியின் ஆணவத்திற்கு, ஆயிரம் விளக்கு மக்கள் வரவிருக்கும் தேர்தலில் சாவுமணி அடிப்பார்கள்! மக்களை வாட்டி வதைக்கும் இந்த கார்ப்பரேட் கம்பெனி ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து, அண்ணன் எடப்பாடியாரின் நல்லாட்சியை மலரச் செய்ய இரட்டை இலைக்கே வாக்களிப்பீர்!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்குத் தொகுதி
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
விடியா ஆட்சியின் வேதனைகள்... மக்கள் அளிக்கும் மாபெரும் ஆதரவு!
ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட மாடல் ஸ்கூல் ரோடு மற்றும் குலாம் அப்பாஸ் அலிகான் தெரு ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். நான் ���ென்ற இடமெல்லாம் மக்கள் எனக்கு அளித்த மாபெரும் வரவேற்பும், ஆதரவும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதே வேளையில், இந்த 5 ஆண்டுகால விடியா திமுக ஆட்சியால் மக்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டு, தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கே வேதனைப் படுகிறார்கள் என்பதை அவர்களின் குமுறல்கள் மூலம் என்னால் ஆழமாக உணர முடிந்தது. மக்களின் இந்தக் கண்ணீருக்கும், கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது!
உங்கள் வேதனைகள் தீரவும், பாதுகாப்பான ஆயிரம் விளக்கை உருவாக்கவும்... அண்ணன் எடப்பாடியார் அவர்களின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்குத் தொகுதி
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
மாற்றத்தை நோக்கி ஆயிரம் விளக்கு!
தேனாம்பேட்டை பகுதியின் வீதிகள்தோறும் இன்று அன்பால் நனைந்தேன்! அலைகடலென திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்த தாய்மார்களுக்கும், பெரியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், அடிப்படை வசதிகள் கூட இன்றி இந்தப் பகுதி மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் ச���்தித்துள்ளனர்.
எந்த முன்னேற்றமும் இல்லை, வெறும் வாக்குறுதிகள் மட்டுமே மிஞ்சியது என்பதுதான் ஒவ்வொரு வீதியிலும் மக்களின் குமுறலாக இருக்கிறது.
மக்களின் இந்த கண்ணீர் துடைக்க, ஆயிரம் விளக்கு தொகுதியை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள் என்பதற்கு இன்று கிடைத்த இந்த எழுச்சியே சாட்சி!
வெற்றி நிச்சயம்! மாற்றத்தை விதைப்போம்!
மீண்டும் மக���களாட்சி மலர
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்குத் தொகுதி
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
நாள்தோறும் குவியும் புகார்கள்... இதுதான் இன்றைய ஆயிரம் விளக்கின் அவல நிலை!
விடியா திமுக ஆட்சியின் 5 ஆண்டுகால அலட்சியத்தால், ஒரு காலத்தில் பெருமையோடு இருந்த நமது ஆயிரம் விளக்கு தொகுதி இன்று அடிப்படை வசதிகள��க்கே அல்லாடும் அவல நிலையில் உள்ளது. மக்களின் இந்தக் கண்ணீருக்கும், தினசரி குமுறல்களுக்கும் விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!
மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான நல்லாட்சி அமைந்தவுடன், ஆயிரம் விளக்கு மக்களின் அனைத்துப் புகார்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு நிரந்தரத் தீர்வு காணப்படும். இந்த அவல நிலை மாற...
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!
உங்கள் வேட்பாளர்
ப���.வளர்மதி
ஆயிரம் விளக்குத் தொகுதி
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம் #பார்போற்றும்_வளர்ச்சி
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய சுதந்திர போரில் நெஞ்சுரத்தோடு தனது இறுதி மூச்சு வரை போராடி, அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தன் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன், ஓடாநிலைக்கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
அன்று சின்னமலையைக் காட்டிக் கொடுத்த துரோகியைப் போல, இன்றும் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டின் நீராதார உரிமைகளையும், பாலியல் SIR-களிடம் தமிழகப் பெண்களின் பாதுகாப்பையும், போதை மாபியாக்களிடம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அடகு வைத்துவிட்டது திமுக எனும் த��யசக்திக் கூட்டம்.
ஒவ்வொரு தமிழரின் வாழ்வையும் காக்க வேண்டிய வரலாற்றுப் போர்களத்தில், சின்னமலை விதைத்த தீரத்தோடு சமர் செய்து, தீயசக்தி திமுகவை வேரடி மண்ணோடு வீழ்த்திட சூளுரைக்கிறேன்.
#DheeranChinnamalai
@AIADMKOfficial
ஆயிரம் விளக்கு தொகுதியை ஒளிரச் செய்யும் பயணம்!
ஆயிரம் விளக்குத் தொகுதியின் ஒவ்வொரு வீதியிலும் நான் கண்டது மாற்றத்திற்கான தாகம்!
பாபு தெரு, முத்தையா தெரு மற்றும் சொக்கலிங்கம் நகர் பகுதிகளில் எனது அன்புச் சகோதரி மதுவந்தி அவர்களுடன் இணைந்து ம��ற்கொண்ட வாக்குச் சேகரிப்பின் போது, கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நிலவும் தேக்கநிலையால் மக்கள் படும் அவதியை நேரில் உணர்ந்தேன். எல்லையம்மன் காலனி, காவலர் குடியிருப்பு முதல் வரதராஜபுரம் முக்கிய சாலை மற்றும் போயஸ் கார்டன் வரை நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் என் இதயத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையை மாற்றி, ஆயிரம் விளக்கை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து��் செல்ல அண்ணா திமுக ஆட்சி அமைய பாடுபடுவேன்.
மாற்றம் நமது தொகுதியிலிருந்து தொடங்கட்டும்!
மீண்டும் மக்களாட்சி மலர,
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி.
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
மூன்றே மாதங்களில் கஞ்சா ஒழித்துக்கட்டப்படும்
எனக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் இன்று சூறாவளிப் பரப்புரை மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலை��ர் ஐயா திரு. ஜி.கே. வாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
"திமுக ஆட்சியில் பெருகிவிட்ட போதைப்பொருள் புழக்கத்தை அதிமுக மூன்றே மாதங்களின் ஒழித்துக்கட்டும்" என்ற அவரது முழக்கம், ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் ஒட்டுமொத்த குரலாகவே ஒலித்தது. இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த விடியா அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, போதையில்லா தமிழகத்தைப் படைக்க அண்ணன் எடப்பாடியார் அவர்களின் நல்லாட்சி மலர வேண்டும்.
ஐயா ஜி.கே.வாசன் அவர்களின் வருகை நமது வெற்றியை மேலும் உறுதி செய்துள்ளது! வெல்லட்டும் இரட்டை இலை!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்கு தொகுதி
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
இன்று 15.04.2026. மாலை சென்னை, தேணாம்பேட்டை போயஸ் ரோட்டு���், தேசிய ஜனநாயக கூட்டணி - #அஇஅதிமுக ஆயிரம் விளக்கு சட்டமன்ற வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திருமதி. பா. வளர்மதி அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.
@SValarmathiofl
ராயப்பேட்டை மக்களின் உற்சாக வரவேற்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
பரப்புரையின் போது நீங்கள் தெரிவித்த நீண்டநாள் கோரிக்கைகளையும், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் பாராமுகத்தால் நீங்கள் படும் சிரமங்களையும் இன்று நேரில் கேட்டறிந்தேன். வரவிருக்கும் நமது அதிமுக ஆட்சியில் இப்பிரச்சினைகள் நிச்சயமாகத் தீர்க்கப்படும். ஆயிரம் விளக்கு ��ொகுதியை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வோம் என உறுதியளிக்கிறேன்
மீண்டும் நல்லாட்சி மலர..
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி.
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
லஞ்ச லாவண்யம்... கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு... இதுதான் விடியா ஆட்சியின் திராவிட மாடலா?
ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடமெல்லாம் மக்களின் கண்ணீரும், குமுறல்களுமே எதிரொலிக்கின்றன. "திமுகவினருக்கு லஞ்சம் கொடுத்து மாளவில்லை, எங்கள் பகுதி கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன" என்று மக்கள் என்னிடம் வேதனையோடு முறையிட்டனர். மக்களின் இந்தக் கொந்தளிப்பு இன்று பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்து, விடியா ஆட்சியின் ஊழல் முகத்தை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.
இறைவனின் சொத்துக்களைச் சூறையாடும் மற்றும் சாமானிய மக்களைச் சுரண்டும் இந்த அராஜக ஆட்சிக்கு, வரவிருக்கும் தேர்தலில் ஆயிரம் விளக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!!
உங்கள் வேட்பாளர்
பா.வளர்மதி
ஆயிரம் விளக்குத் தொகுதி
@EPSTamilNadu@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி