வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிய விவசாயிகளைத் தாக்கிய தவெக அரசு!
கொடுத்த வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சையில் போராடிய விவசாயிகளை கைது செய்ததோடு, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திரு. பழனியப்பன் அவர்களையும் தவெக அரசு தாக்கியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வருவதற்கு முன் "அனைத்து பயிர்க்கடனும் ரத்து செய்யப்படும்" என்று ஆவேசமாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அரைகுறையாகத் தள்ளுபடியை அறிவித்து வஞ்சித்தது போதாதென்று, அதைத் தட்டிக் கேட்போரை கைது செய்து தாக்குவதுதான் தூய சக்தியா? இப்படி ஏர் பூட்டும் விவசாயிகளை ஏமாற்றுவதுதான் மாற்று சக்தியா?
தான் வகிக்கும் பொறுப்பின் மீது @CMOTamilnadu அவர்களுக்கு சிறிதும் அக்கறை இருந்தால், ஆட்சி அதிகார மமதையில் அன்னமிடும் விவசாயிகளை அலட்சியப்படுத்தும் இந்தக் கொடூரப் போக்கைக் கைவிட்டு, தான் கொடுத்த வாக்குறுதிப்படி உடனடியாக பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!
சிதிலமடைந்த சிவன் கோயிலை, புனரமைக்க கோரி மனு..
இந்து முன்னணி புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக, #புதுக்கோட்டை மாவட்டம், #கறம்பக்குடி வட்டம், பாப்பாபட்டி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ சிவபாரநாயகி உடனுறை ஶ்ரீ சமேத சிவனேஷ்வரர் ஆலயம் 80 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு செய்யப்படாமல் உள்ளது..
அக்கோவிலில் மூலவர் கருவறை உட்பட அனைத்து மண்டபங்களும் கதவு இல்லாமல் உள்ளது. கோவிலின் நுழைவு பகுதியில் கதவு இல்லை..
கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து, கோவிலின் வளாகம் சிதிலமடைந்து உள்ள நிலையில், அதனை சீரமைத்து மண்டபங்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது..
@tnhrcedept@RameshOffcl@CMOTamilnadu
#பாப்பாபட்டி #சிவனேஷ்வரர்கோயில் #குடமுழுக்கு #புனரமைப்பு #மனு #இந்துமுன்னணி
திருப்பரங்குன்றம் முருகனுக்கு அபிஷேகம் செய்த பால் சாக்கடையிலா...?
தடுத்து நிறுத்துமா?? தமிழக அரசு..
திருப்பரங்குன்றம் முருகனுக்கு அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபிஷேகம் செய்யப்பட்ட பால் சாக்கடையில் கலப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசு பக்தர்களின் உணர்வுக்கும் பக்திக்கும் மதிப்பளித்து இது போன்ற அலட்சியமான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது..
@tnhrcedept@RameshOffcl@CMOTamilnadu
#திருப்பரங்குன்றம் #அபிஷேகபால் #HRCE #அறநிலையத்துறை #HinduMunnani
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு @TVKVijayHQ அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியமா?
சர்ச் வருமானம் கிருஸ்தவர்களிடம்..
மசூதி வருமானம் முஸ்லிம்களிடம்..
வேற்று மதத்தினர் ஹஜ், ஜெருசலேம் செல்லவும், மசூதி, சர்ச் புதுப்பிக்கவும் இந்து கோவில்களின் வருமானம்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக்கூறிவிட்டு, இந்து அர்ச்சகர்களுக்கு பூசாரிகளுக்கு மட்டும் கேள்வி குறியா??
@CMOTamilnadu@TVKVijayHQ
#உலமாக்கள் #TwowheelerSubsidy #CMJosephVijay #TVKGovt #Hindus #HinduMunnani