கடந்த ஆண்டு கரும்பு சாகுபடி செய்து சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 750 வீதம் வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையினை இன்று குடந்தையில் வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு வினோத் அவர்களை நேரில் சந்தித்தேன்.
திருபுவனம் தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சியில் தேர்தல் நிதி 1.75 லட்சம் வழங்கிய நிகழ்வு. உடன் மாவட்டத் துணைச் செயலாளர் கலிஸ்துராஜ், ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு ,பிச்சப்பிள்ளை கலந்து கொண்டனர்.
திருச்சி திருப்புமுனை மாநாட்டினுடைய தலைவராக பொள்ளாச்சி டாக்டர் கிருஷ்ணன் அவர்களை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டிசோமு அவர்கள் முன்மொழிந்தார்கள். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டிசோமு முன்மொழிந்ததை நான் வழிமொழிந்தேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு Live கீழே உள்ள இணைப்புகளில் காணலாம்.
YouTube:
https://t.co/rSxolFdVco
Facebook:
https://t.co/6NzRyyfFyQ
Twitter:
https://t.co/7d0c6o2cRG
பட்டுக்கோட்டை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தஞ்சாவூர் வந்த முதன்மைச் செயலாளர் திரு துரை வைகோ அவர்களை வரவேற்ற நிகழ்வு.
படம் உதவி போட்டோ ராஜா:
கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரைவைகோ அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சார்பிலும் ,அரியலூர் மாவட்ட மதிமுக சார்பிலும் மனநலம் பாதிக்கப்பட்ட மையம், முதியோர் காப்பகம் உள்ளிட்ட இடங்களில் உணவு வழங்கப்பட்டது.அரியலூர் பெருமாள் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிராமபுர நூறுநாள் வேலைவாயாப்பு திட்டத்தின் நாட்களை அதிகரிக்க வேண்டும் என்று ஏழை தாய்மார்க்களுக்காக இந்திய நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த தலைவர் துரை வைகோ
#HBDDuraiVaiko