இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன்,
நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம்.
இந்தியத் திருநாடு வாழியவே!
தமிழ்நாடு வாழியவே!
அனைவருக்கும் இனிய #சுதந்திரதின_நல்வாழ்த்துகள்
#HappyIndependenceDay
@AIADMKOfficial
பிரிக்க முடியாதது என்னவோ?
திமுகவினரும் போதைப் பொருள் கடத்தலும்!
"கருணாநிதி பேருந்து நிலைய"த்தில் போதைப்பொருள் கடத்த முயன்று கைதான மூவரில் ஒருவர்
இராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்ராஹிம்.
நேற்று அயலக அணி,
இன்று சிறுபான்மை அணி,
நாளை?
#SayNoToDrugs_SayNoToDMK
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6 கிலோ, ரெட்ஹில்ஸ் அருகே குடோன் ஒன்றில் 1 கிலோ என 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
சொல்லாட்சி-செயலாட்சி என்று எதுகை மோனையில் விளம்பர வசனம் மட்டும் பேசும் திரு. @mkstalin அவர்கள் தலைமையிலான விடியா திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் "செயலற்ற ஆட்சி"யாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமேனும் அக்கறை இருப்பின், நம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்று, துப்பாக்கிசுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ள @realmanubhaker அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 🥉
@AIADMKOfficial
Heartiest Congratulations to @realmanubhaker on securing the first medal for India in 33rd #OlympicsParis2024 and becoming the first woman athlete to secure a medal in #Shooting for #India !🥉
#Olympics #Paris2024
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?
கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?
யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்!
இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை CBI-க்கு மாற்றவேண்டும்.
@CMOTamilnadu@AIADMKOfficial
சட்டசபை வளாகத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் உள்ளிட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் அராஜகப் போக்கை கையாண்ட விடியா திமுக அரசின் ஏவல்துறை!
ஹிட்லர், இடிஅமின், முசோலினி வகையறா பாசிசத்தை கையாண்டுவிட்டு, ஜனநாயக மாண்பைப் பற்றியெல்லாம் எந்த அருகதையில் பேசுகிறீர்கள் @mkstalin அவர்களே?
அடக்குமுறைகளால் மக்கள் குரலை ஒடுக்கமுடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
#Resign_Stalin