ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
-------------------------------
1) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
2) கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து கட்சிக்குள்ளேயே பேசவேண்டிய முரண்களைப் பொதுவெளியில் பேசி, கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் தேவையற்ற நிர்வாக நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார் .
3) தேர்தலுக்கு முன்பு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்' நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில், அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்பும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்போதும் கருத்து மாறுபாடுகளைக் கடந்து பேணவேண்டிய தோழமைக்கான மதிப்பீடுகளைச் சிதைக்கும் வகையில், ஊகமான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
4) கட்சியின் நலன்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் முன்னணி பொறுப்பாளர் என்கிற முறையில், அவருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி, உரிய நேரத்தில்- உரிய வகையில், 'கடிந்தும் -கண்டித்தும்' அறிவுறுத்தப்பட்டது. எனினும், அவரது நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றமும் இல்லை.
5) வாய்மை, நேர்மை என்னும் பெயரில் உட்கட்சி முரண்களை பொதுவெளியில் பேசுவது, கட்சியின் கட்டுக்கோப்பான வலிமையை அசைத்துப் பார்க்கும் ஆபத்தான முயற்சியாகும். அத்துடன், கட்சியைப் பின்பற்றி அரசியல் சக்தியாய் அணிதிரளும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் மிகவும் தீங்கான போக்காகும்.
6) கட்சியை விட, கருத்தியலை விட, களம் காணும் மக்களைவிட, 'தானே முதன்மை' என தன்னை முன்னிறுத்தும் இத்தகையபோக்கு, ஒரு 'தவறான முன்மாதிரியாக' அமைந்து கட்சியிலுள்ள பிறரையும் இவ்வாறு செயல்படத் தூண்டுவதாக அமையும்.
7) இந்நிலையில், கட்சியின் நலன்களைக் கருத்தில்கொண்டு பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள், "கட்சியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படுகிறார்."
😎 இந்த நடவடிக்கை தொடர்பாக இவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விளக்கமளிக்கவும் அல்லது கட்சித் தலைமையிடம் மேல்முறையீடு செய்யவும் இவருக்கு உரிமையுண்டு.
9) இடைநீக்க காலத்தில் இவர் கட்சியின் விதிமுறைகளை மதித்து, மேலும் முரண்பாடான செயல்களில் ஈடுபடாமல், கட்சியின் கட்டுப்பாட்டைக் காப்பதன் மூலமே, இவரது மேல்முறையீடு ஏற்கப்பட்டு, இடைநீக்க நடவடிக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
10) ஒழுங்கு நடவடிக்கைக்குரிய காலத்தில் இவர் கட்சியின் நிகழ்வுகளில், போராட்டங்களில், கட்சி சார்ந்த இன்னபிற செயற்பாடுகளில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டியது இவரது இன்றியமையாத அரசியல் கடமையாகும்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
Gen -Z எனும் நவீன தலைமுறையை உட்பட அடித்தட்டு மக்களையும்
அரசியல்படுத்துவோம் ...
சனநாயகத்தை காக்க
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைவோம் !!
சேலம் அ.வசந்த்
மாநில செயலாளர்
இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை
கொங்கு மண்டலம் -விசிக
30.5.2026
@thirumaofficial
விசிக தொண்டனாக , கட்சியின் முன்னனி நிர்வாகியாக எப்போதும் எனது நிலைப்பாடு எனது தலைவர் திருமாவளவன் அவர்கள் முதல் அமைச்சர் ஆவதில்தான் எமது மகிழ்ச்சி கொண்டாட்டம் எல்லாம்!
வேறு யார் முதல்வர் என்றாலும் முகமூடி அணிந்து கொள்கிறேன்!!
சேலம் அ.வசந்த்
-விசிக
30.5.2026
@thirumaofficial
RSS தனது சித்தாந்தத்தை நிலைநாட்ட தலைவர் திருமாவளவன் அவர்களை கூட முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு செய்வார்கள்..! திராவிட சித்தாந்த கொள்கை பேசும் திமுக இனி வருங்காலங்களில் சுழற்சி முறையில் முதல் அமைச்சர் என்ற அடிப்படையில் திராவிடத்தை நிலைநாட்ட முன்வருவார்களா?
@thirumaofficial
சென்னையில் ஜூன் 14
விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழா 💥
ஜூலை 23 அன்று
தமிழ் தேசிய எழுச்சி மாநாடு
தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் அறிவிப்பு 💙❤️
சேலம் அ.வசந்த்
@thirumaofficial
தமிழகத்தில் அதிக
சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற தவெக -க்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. அதேவேளையில் எந்தவொரு சூழ்நிலையிலும் தவெக- க்கு ஆதரவு தெரிவித்து விட கூடாது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு !
சேலம் அ வசந்த்
@thirumaofficial
மே நாள் - உலகத் #தொழிலாளர்_நாள் !
----------------------------
உழைக்கும் மக்கள் யாவருக்கும் 'மே நாள்' நல்வாழ்த்துகள்!
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் அவற்றை எதிர்த்துப் போராட உறுதியேற்போம்!
-------------------------
தொல்காப்பியன் திருமாவளவன் அறிக்கை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுற்றைகள் மற்றும் சுரண்டல் கொடுமைகள் உலகெங்கும் காலமெல்லாம் தொடர்கின்றன. அவற்றை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டே உள்ளது.
முதலாளித்துவம் வல்லரசியமாகப் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. சனநாயகம் சமூகநீதி போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டே, முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் புதிய புதிய வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர்.
இந்தியாவிலும் இந்நிலையைத் தெளிவுறக் காணமுடிகிறது.
குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வருகிறது.
அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் கார்ப்பரேட் பெமுதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே நடைமுறையிலிருந்த நாற்பத்து நான்கு வகையான தொழிலாளர் நலச் சட்டங்களையெல்லாம் நான்குச் சட்டங்களாகத் தொகுத்துள்ளது. இவை நான்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்தியே உருவாக்கப் பட்டுள்ளன.
இந்த நான்கு சட்டத் தொகுப்புகளும் நவம்பர் 21, 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படுமென பாஜக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் உழைக்கும் வர்க்கம் திரண்டு போராடியது.
விவசாயச் சட்டத்தை எதிர்த்து எப்படி தொடர் போராட்டங்களை நடத்தி மோடி அரசை அந்த சட்டங்களை திரும்பப் பெற வைத்து விவசாயச் சமூகம் வெற்றிக் கண்டதோ, அதேபோல் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறும் வரையில் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டிய அவசியம் உள்ளது.
ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரையும் ஒடுக்கி முடக்கும் வகையில் இன்றைய பாஜக அரசு இயங்கிவருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாவலர்களாக இந்திய ஆட்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய சூழலில், இந்திய தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து, நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறவைக்கவும்; இன்னபிற அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரங்களுக்காகவும் போராட மே நாளில் உறுதியேற்போம்!
உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம்! - ஆதிக்க
ஒடுக்குமுறை-சுரண்டலை முறியடிப்போம்!
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.