இன்று தமிழர் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வேங்கையின் மைந்தர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு @MRKPanneer அவர்கள் மோவூர் கிராமத்தில் கழக கொடியேற்றி சிறப்பித்தார்கள். உடன் மோவூர் கிராம நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள்..!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
இன்று (20-09-2026), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் மகள் திருமிகு சாந்தி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அதுபோது, கழகத் தலைவர் அவர்களது மனைவி திருமிகு. துர்கா ஸ்டாலின், தலைமை நிலையச் செயலாளர் திரு. பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி பின்வருமாறு:
“தலைவர் கலைஞர் அவர்களும் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் கரையாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்திருக்கிறது. அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அன்பு பாராட்டி வந்த சகோதரி திருமிகு சாந்தி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் திரு. நாராயணசாமி, மகள்கள் திருமிகு. விஜி லட்சுமி, திருமிகு. சத்யவதி, சகோதரர்கள் திரு. ராம்குமார், திரு. பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
மாற்றம் என சொன்னவர்கள்
அண்டப் புளுகு என்பதை ஆதவ் அர்ஜுனா புளுகு என மாற்றிவிட்டார்களோ?
-திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கண்டனம்!
வாயை திறந்தாலே பொய் என்பதற்கு உதாரணமாக வாழும் அமைச்சரின் லேட்டஸ்ட் பொய். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை முதலமைச்சர் விஜய் இன்னும் எடுக்கவில்லையாம்.
ஏமாற்றி பழகிவிட்டோம் என்பதற்காக, எதை சொன்னாலும் நம்பி ஏமாந்து விடுவார்கள் என்று மக்களை ஏளனமாக நினைப்பதா ?
எந்த இடத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்டுவது என ஆராய ஒரு குழுவை அமைத்து, இந்த இந்த இடங்களை ஆராய்ந்து சொல்லுங்கள் என இடம் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்தால், முதலமைச்சர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால், இடத்தை முடிவு செய்து, இத்தனை லட்சம் சதுர அடியில் கட்டடம் கட்டுகிறோம் அதில், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் எவ்வளவு, வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான அரசு நிலம் எவ்வளவு என்பது வரைக்கும் விரிவாக 25.55 ஏக்கர் நிலத்தில், பட்டினப்பாக்கத்தில், ஃபோர்ஷோர் எஸ்டேட்டில், 1,200 கோடியில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று 'in-principle approval' கொடுத்த ஓர் அரசாணை வெளியாகியுள்ளது.
இப்படி ஓர் ஆணை முதலமைச்சருக்கு தெரியாமல் எப்படி வர முடியும்? அல்லது முதலமைச்சரை டம்மியாக வைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்தைக் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் சக்தி எது?
எல்லா தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்கள் வயிற்றில் அடித்து தலைமைச் செயலகம் கட்ட முதல்வருக்கு கூட தெரியாம அறிவிக்கும் அதிகாரம் உள்ள "Super CMs"யார்?
பொய் சொல்லி, மடை மாற்றி மக்களை ஏமாற்றும் போக்கை தவெக நிறுத்திக்கொள்ள வேண்டும். நேர்மையாக மக்களை எதிர்கொண்டு பதில் சொல்ல வேண்டும்.
மீனவர்கள் நலனும், வாழ்வாதாரமும் பாதிக்கும் எனில் கழகம் அவர்களுக்கு எந்த எல்லைக்கும் சென்று துணை நிற்கும்.
நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு நிர்வாகிகள் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!
நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் “நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு” அமைப்பின் நிர்வாகிகள், இன்று (21-09-2026) காலை, சென்னை - அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தனர்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தொடக்கம் முதலே உறுதியோடும் சமரசமின்றியும் செயல்பட்டு வரும் கழகத் தலைவர் அவர்களிடம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாங்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் குறித்து கூட்டியக்கத்தினர் விளக்கி, அவரது ஆதரவைக் கோரினர்.
குறிப்பாக, நீட் எதிர்ப்பைத் தமிழ்நாட்டைக் கடந்து இந்திய அளவில் வலுப்படுத்தும் வகையில் #BanNEET இணையவழிக் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்பது, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் விழிப்புணர்வுக் காணொலியை வெளியிடுவது, சமூக வலைதளங்கள் வாயிலாகப் பரப்புரை மேற்கொள்வது, அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக இயக்கங்கள் மற்றும் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட தங்களது செயல்பாடுகள் குறித்து எடுத்துச் சொல்லி ஆதரவு கோரினர்.
நீட் எதிர்ப்பு கூட்டியக்கம்- தமிழ்நாடு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், #BanNEET இணையவழிக் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு தனது ஆதரவையும் பதிவு செய்தார்.
மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்: யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது?
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவைக் கோரி, மீனவச் சங்கத்தினர் இன்று என்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். இதற்கு எதிராக மீனவ மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவைத் தருவதோடு, தனது முடிவில் இருந்து த.வெ.க. அரசு பின்வாங்கும் வரை மீனவச் சகோதரர்களுடன் உறுதியாகத் துணைநிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம் கட்ட எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே, தலைமைச் செயலகப் பயன்பாட்டுக்கெனத் தலைவர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகமும் இருக்கிறது. வேண்டுமென்றால், அங்கே செயல்பட்டு வரும் மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, மீண்டும் அதைத் தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம். ஆனால், கடற்கரையைப் பார்த்தபடி முதலமைச்சரின் அலுவலகம் அமைய வேண்டும் என ஜோதிடர் ஒருவர் சொன்னதாலேயே முதலமைச்சர் பட்டினப்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
ஒருவரின் ஆசைக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், தமிழ்நாடு அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளன. இது கடுமையான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாகும். இங்கு தலைமைச் செயலகம் அமைந்தால் மாணவர்களும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாக நேரிடும்.
மேலும், பட்டினப்பாக்கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதிக்குத் தெற்கில் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. வடக்குப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமில் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் என மொத்தம் 12 குடியிருப்புப் பகுதிகள் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ளன. முள்ளிக்குப்பம் பஞ்சாயத்து மற்றும் மீனவ மக்கள் அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.
இந்த ஆட்சி அமைய ஆதரவு தந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமையாது என நினைத்தோம். ஆனால், அவர்களது எதிர்ப்பினையும் போராட்டங்களையும் மீறித் த.வெ.க. அரசு இதில் விடாப்பிடியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க.வும் இந்தப் போராட்டத்தில் வீரியத்துடன் இணைய வேண்டிய சூழலை ஆளும் த.வெ.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த திராவிட மாடல் ஆட்சியில், பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டி வாழும் மீனவ மக்களுக்கெனப் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தந்தோம். சீனிவாசபுரம் பகுதியில் உள்ள 1,356 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் சிதிலமடைந்து உள்ளதோடு, இப்பகுதியில் ஆயிரம் குடிசைகளும் இருக்கின்றன. கடல்சீற்றத்தால் இவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குப் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தருவதற்கு முந்தைய கழக ஆட்சியில் பரிசீலனையில் இருந்த இடத்தில்தான் தற்போது 1,200 கோடி ரூபாயில் தலைமைச் செயலகம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அரசாணையையே மறைத்துவிட்டு, “விரிவான திட்ட அறிக்கை மட்டுமே கோரியிருக்கிறோம், இதில் முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை” எனத் த.வெ.க. அமைச்சர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசுவது மக்களை ஏமாற்றும் மோசடிச் செயலாகும். அரசாணை வெளியிட்ட பின்னர் முடிவெடுக்கவில்லை எனச் சொல்லும் அளவுக்குத்தான் இவர்களின் நிர்வாக அறிவு இருக்கிறதா? அல்லது, வாக்களித்த மக்களும் எதிர்க்கட்சிகளும் இவர்கள் எந்தப் பொய்யைச் சொன்னாலும் நம்புவார்கள் என நினைக்கிறார்களா?
மீனவர்களின் அழுகுரலுக்குத் த.வெ.க. அரசு செவிமடுத்து உடனடியாகத் தனது அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதலமைச்சர் அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்பகுதியில் மீனவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும்.
அராஜகப் போக்குடனும் ஆணவ எண்ணத்துடனும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய போராட்டத்தினை முன்னெடுக்கும் என மீனவர் விரோத த.வெ.க. அரசினை எச்சரிக்கிறேன்.
இந்த தொகுதி மக்களுக்கு அவங்க செஞ்ச துரோகத்தை நாம ஒவ்வொருத்தரும் இந்த தொகுதி முழுக்க ஒவ்வொரு வீடா எடுத்துட்டு கொண்டு போய் சேர்க்கணும். இந்த புதிய ஆட்சி அமைஞ்சு கெடுத்துட்டு நான்கு மாசம் ஆகுது. இந்த நான்கு மாசத்துல அவங்க ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்தாங்களே ஏதாவது ஒன்னு செஞ்சிருக்காங்களா?
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKExposed #TVKScams
கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை மீனவர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.
கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை, இன்று (21.9.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், பட்டினப்பாக்கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதியில் உள்ள அனைத்து மீனவர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியுடன் ஒப்பிடும் அளவுக்கு அதன் மாண்பை குறைத்துவிட்டார்கள்!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்.
#TVKScams#TVKExposed
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு "புதிய புரட்சி கழகம்" கட்சி ஆதரவு!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (21.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் புதிய புரட்சி கழகத்தின் தலைவர் ஓ.இ.சங்கர் - பொதுச்செயலாளர் கோல்டன் கோபி ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகளான துணைப் பொதுச்செயலாளர் தரமணி வேலு, தலைமை நிலையச் செயலாளர் மடையத்தூர் துரைசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஹரிகிருஷ்ணன், கொள்கைப் பரப்பு செயலாளர் வழக்கறிஞர் கேட் சேகர், கமலஹாசன் செல்வமணி, உமா மகேஷ்வரன் மாநிலச் செயலாளர் அஜிஸ்ராசா, மாவட்டச் செயலாளர் மதுராந்தகம் ஜி.கே.சேகர், மாவட்ட தலைவர் வி.எம்.மாரிமுத்து, பொருளாளர் இளங்கோ, அமைப்பாளர் மணிகா ஆகியோர் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு புதிய புரட்சி கழகம் முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு புதிய புரட்சி கழக நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது பனையூர் பாபு உடனிருந்தார்.
அமைச்சர் நிர்மல் குமாரது அவதூறு பேச்சிற்கு கழக சட்டத்துறை செயலாளர் திரு. என்.ஆர். இளங்கோ அவர்கள் பதிலடி.
ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை கைவிடவில்லை, மேல்விசாரணை தொடரும் என்றுதான் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது
இடைத்தேர்தலில் மக்களின் கவனத்தை திசை திருப்ப தவறான தகவலை பரப்பும் நிர்மல் குமார் குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் வகையில் பேசுகிறார் நிர்மல் குமார்
தவெக ஆட்சியில் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு பாலியல் வன்கொடுமைகள்
இன்று சட்ட அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்கள், ஜெம் கிரானைட் வீரமணி அவர்களுடைய போக்சோ வழக்கைப் பற்றி, தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காகவும், வரக்கூடிய இடைத்தேர்தல்களில் அரசியல் லாபம் தேடுவதற்காகவும் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பியதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறையின் சார்பில் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்.
தொடர்ச்சியாக, திரு. நிர்மல் குமார் அவர்கள் தான் சட்ட அமைச்சர் என்பதை மறந்து, மக்களுக்காகப் பணியாற்ற வேண்டிய பணியை மறந்து, மக்களுக்கு உண்மை நிலவரத்தை மட்டுமே தர வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை மறந்து, அரசியல் லாபங்களுக்காகவும், இடைத்தேர்தலில் எப்படியாவது மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவும் இதுபோன்ற பேட்டிகளைத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
குறிப்பாகச் சொல்லப்போனால், கழகத் தலைவர் அவர்களைப் பற்றி, அவர் மிசாவில் அனுபவித்த கொடுமைகள் குறித்து மிகவும் அவதூறான தகவல்களைப் பதிவு செய்தார். அதற்காக மாநிலங்களவை உறுப்பினர் திரு. திருச்சி சிவா அவர்கள் ஏற்கனவே காவல்துறைத் தலைவரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
இன்றைக்கு ஜெம் கிரானைட் வீரமணி அவர்கள் மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கை குறித்து, அது ஏதோ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நீர்த்துப்போகச் செய்ததாக ஒரு கருத்தைப் பரப்பியிருக்கிறார். அது முற்றிலும் தவறான கருத்தாகும்.
ஏனென்று சொன்னால், 7.10.2025-ல் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, வீடுகள் சோதனையிடப்பட்டு, கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல்விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால், நீதிமன்றத்தில் இதுவரை செய்த புலன் விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாங்கள் கைவிடவில்லை. உரிய ஆதாரங்களைத் திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல்விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறோம் என்றுதான் குறிப்பிட்டு, போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அதுவும் கூட, அப்போது இருந்த டைரக்டர் ஆஃப் பப்ளிக் பிராசிகியூஷன், அடிஷனல் டைரக்டர் ஆஃப் பப்ளிக் பிராசிகியூஷன் ஆகியோருடைய கருத்துருவின் அடிப்படையில் அது தாக்கல் செய்யப்பட்டது. எனவே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அந்த வழக்கின் புலன் விசாரணை கைவிடப்படவில்லை. மேல்விசாரணை தொடரும் என்றுதான் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதை மறைத்து, அவதூறான கருத்துகளை சட்ட அமைச்சர் பரப்பி வருகிறார். குறிப்பாகச் சொல்லப்போனால், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிலைப்பாடு என்னவென்றால், குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும், குறிப்பாக பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதே, திரு. நிர்மல் குமார் அவர்கள் எப்படியாவது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றிவிடலாமா என்ற எண்ணத்தோடு பேசுவதாகத்தான் தெரிகிறது. ஏனென்று சொன்னால், இல்லாத அரசியல் அழுத்தங்களை இருப்பதாகச் சொன்னால், பாதிக்கப்பட்ட அந்த நபர்கள், இந்த வழக்கில் ஏதோ மிகப்பெரிய பிரச்சனை இருப்பது போல் இருக்கிறது என்று கருதி, அவர்கள் சாட்சியம் அளிக்காமல் அதிலிருந்து விலகிச் செல்வதற்காகவே, திரு. நிர்மல் குமார் அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுவதாக நாங்கள் நம்புகிறோம்.
அதுமட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஒரு நாளைக்கு இரண்டு பாலியல் குற்றங்களாவது புகார்களாக அளிக்கப்பட்டு வருகின்றன.
சொல்லப்போனால், என் கையில் இருக்கும் பட்டியலில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நடந்திருக்கக்கூடிய பாலியல் குற்றங்களைப் பற்றி சொன்னால், அதற்கு ஒரு நாள் கூடப் போதாது.
ஆட்சிக்கு வந்த 150 நாட்களில் இதுவரை 219 பாலியல் குற்றங்கள் அரங்கேறியிருக்கின்றன. வேறு யாரோ அல்ல; தமிழக வெற்றிக் கழகத்தினுடைய பொறுப்பாளர்கள் அவர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சொல்லப்போனால், ஒரே ஒரு நாளில் மட்டும், 15-ஆம் தேதி ஜூன் 2026-ல் மட்டும், ஏறக்குறைய ஐந்து இடங்களில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சட்டம்-ஒழுங்கைப் பற்றி கவலைப்படாமல், அரசியல் லாபத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் மட்டுமே சட்ட அமைச்சர் இதுபோன்ற பேட்டிகளை அளித்து வருகிறார். சட்ட அமைச்சர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து கொண்டு பேச வேண்டும்.
போக்சோ போன்ற சிறப்பு வழக்குகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை. அவற்றில் இந்தக் குற்றங்கள் பற்றி பொதுவெளியில் பேசி, அந்தக் குற்றங்களை நீர்த்துப்போகச் செய்வது என்பது சட்டம்-ஒழுங்குக்கு நல்லதல்ல. இதுபோன்று திசைதிருப்பும் வேலைகள் அந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யும். அது கூடத் தெரியாமல் இருக்கிறார் ஒரு சட்ட அமைச்சர்.
மேலும், சட்ட அமைச்சர் தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார். அவதூறு செய்தால், அவதூறு பரப்பினால், அவரும் அவதூறு செய்த குற்றத்திற்கு உட்பட்டவர்தான். அதற்கான உரிய நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடரும்.
நான் இதுவரை சொன்னதில், குறைந்தபட்சம் மூன்று சிறுமிகளாவது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக வெற்றிக் கழக அரசு, இல்லாத கூற்றுகளைச் சொல்லி வழக்கை நீர்த்துப்போகச் செய்வது உண்மையிலேயே கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல என்பதால் கவலைக்குரியது.
இந்தப் போக்கை தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிற அனைவரும் கைவிட வேண்டும் என்பதை நாங்கள் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.
இப்படியே மீறிச் சென்றால், வெறுமனே அவதூறு வழக்கு மட்டுமல்லாமல், போக்சோ வழக்கைத் திசைதிருப்பியதற்காகவும், குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்கு ஒரு வழியாக இருந்ததற்காகவும், அதற்குக் காரணமாக இருந்ததற்காகவும், உரிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வழக்கு விவகாரத்தில் அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட்டிருந்தால், அது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும். அவர்களிடம் உரிய ஆதாரங்கள் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொடர்பு இருக்கிறது என்பதை அவர் ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கவில்லை என்றால், அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மீது உரிய வழக்கைத் தொடருவோம்.
கேள்வி: முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் சந்தித்தது குறித்து...
பதில்: நீங்கள் அரசு ஆவணங்களில் பார்த்தால், கொரோனா காலகட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தொழில் புரிவோரும், தொழில் முனைவோரும், சாதாரண மக்களும் பணம் வழங்கினார்கள். அதுபோன்று, ஒரு நாள் கொரோனா நிவாரண நிதியாக திரு. வீரமணி அவர்கள் பணம் கொடுத்திருக்கிறார் என்பதை அறிகிறோம். அதைத் தவிர்த்து, வேறு எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் எங்கள் கழகத் தலைவரைச் சந்திக்கவில்லை என்பதை நாங்கள் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.
இதுபோன்ற மோசமான குற்றங்களை கடுமையாக விசாரிப்பதை வரவேற்கிறோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைத் திசைதிருப்பும் விதமாகப் பேட்டிகள் அளிப்பதைத்தான், பொறுப்புள்ள அமைச்சர்களே பேசுவதைத்தான் கண்டிக்கிறோம். அது கண்டனத்திற்குரியது; தண்டனைக்குரியது.
குற்றங்களை தடுக்கவும், குற்றங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் துப்பு கெட்ட தவெக அரசு, அவற்றை எப்படி தங்களுடைய பொலிட்டிக்கல் டூல்கிட்டாக பயன்படுத்தலாம் என்பதிலேயே குறியாக உள்ளது.
முன்னாள் அமைச்சர் திரு. எஸ் ரகுபதி அவர்கள்.
#TVKFails
Format C-2
Declaration regarding criminal antecedents of candidates set up by the party
(As per the judgment dated 25th September 2018 of the Hon’ble Supreme Court in W.P. (Civil) No. 536 of 2011 – Public Interest Foundation & Ors. vs. Union of India & Anr.)
Name of the Political Party: Dravida Munnetra Kazhagam
Name of the Election: Bye-Election - Puducherry Legislative Assembly Elections, 2026
Name of State / UT: Union Territory Of Puducherry
Name of Constituency: No. 09 – Thattanchavady Constituency
Name of candidate: K. Sethu Alias Sethuselvam
https://t.co/tNGbGEWB0i
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது.
இனியும் அவர் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது. ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவு!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (24.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் அல்ஹாஜ் எம். பஷீர் அஹமது, மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் அப்துல்காதர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது திராவிட இயக்கமும் “திராவிட மாடல்” அரசின் மூலம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் சிறுபான்மை மக்களுக்கு ஆற்றிய பணிகளை அடியொற்றி தோழர் ஹாத்தம் அலி அவர்கள் எழுதிய “நல்லிணக்கத்தின் நாயகன் M.K. STALIN” நூல் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வின்போது தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் உடனிருந்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தர்சினி கலைகூட நிர்வாகி தர்மலிங்கம் அவர்கள் சந்தித்து தர்சினி கலை கூடம் சார்பில் “கலைஞர் கண்ட கலைஞர்” என்ற தலைப்பிலான ஓவிய தொகுப்பினை வழங்கினார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (24,09,2026) காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை தலைவர் போஸ் வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் தர்சினி கலைகூட நிர்வாகி தர்மலிங்கம் அவர்கள், தனது “தர்சினி கலை கூடம்” ஏற்பாட்டில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஓவியர்கள் வரைந்த கலைஞர் ஓவியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூறு சிறந்த ஓவியங்களை தொகுத்து “கலைஞர் கண்ட கலைஞர்” என்ற தலைப்பிலான ஓவிய தொகுப்பினை வழங்கினார்.
அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், செய்தி தொடர்பு குழு தலைவர் டி கே எஸ் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் உடனிருந்தனர்
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பச்சை குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாரையும் விடுவதில்லை இந்த த.வெ.க.வினர். தினம் தினம் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் பெரும்பாலானவர்கள் த.வெ.க. கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
த.வெ.க. தலைவர் விஜய் நடித்த ஆபாச காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை எல்லாம் பார்த்துப் பார்த்து, ரத்தத்தில் ஊறிப்போன த.வெ.க.வினர் மனதில் இப்படியான கெட்ட எண்ணங்கள் ஊறிப்போய், இப்படிப்பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் த.வெ.க.வில் இருக்கும் இது போன்ற பாலியல் குற்றவாளிகளை விஜய் திருத்த வேண்டும்.
#TVKCrimes #TVKFails
ஊருக்கு வெளிப்படைத்தன்மை குறித்து உபதேசம் செய்துவிட்டு, திரைமறைவில் ஒரு மாநில முதல்வரே தனியாருக்குத் தரகு வேலை பார்க்கும் இந்த 'மானங்கெட்ட மாற்றத்தை'த் தமிழ்நாடு காறித் துப்புகிறது!
ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு டம்மி பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அதே நாளில், சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்த டம்மி முதல்வர், ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து இன்று செப்டம்பர் 23ல் செய்தி வெளிவந்துள்ளது.
இக்கடிதம் குறித்து 50 நாட்களாக ஏன் மக்களிடம் சொல்லவில்லை? ஏறக்குறைய ஒருத் திருடனைப் போல இந்தக் கடிதத்தை மறைத்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன?
அந்தக் கடிதம் வெளியே தெரிந்தால் சட்டமன்றத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கின்றி அசிங்கப்படுவோம் என பயந்து நடுங்கி அதை மறைத்துள்ளதா இந்த டம்மி அரசு?
#TVKVijayFails #TVKScam
முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுக்களை மிரட்டி, அவர்களை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கத் தவெக அமைச்சர் அரை டவுசர் பிராடு குமார் நடத்தும் அப்பட்டமான ரவுடித்தனம் குறித்து குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள்.
அமைச்சரின் மிரட்டலுக்குப் பயந்து, கோயில் இணை ஆணையரே அறங்காவலர்களை ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தும் அளவிற்குத் தவெக-வின் அதிகாரப் போதை தலைக்கேறி ஆடுகிறது.
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில், அரசு அதிகாரத்தையும், ஆன்மீகத் தலங்களையும் தனது 'ரசிகர் மன்றக் கூலிகளின்' பிடிக்குள் கொண்டுவரத் துடிக்கும் அரை டவுசர் பிராடு குமார் போன்ற என்ன ஜந்துக்களைக் கண்டிக்கக் கூட முதல்வருக்குத் துப்பில்லையா?
#TVKFails #TVKScam