ஈசன் அருள் அன்றி இயலாது…!
உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.
விளக்கம்:-
உயிருடன் ஒன்றிக் கலந்து நீக்கம் இல்லாமல் நிறைந்து இருப்பவை காரண உபாதிகள். இவை ஆன்மாவுக்கு அழிவையும், சோர்வையும் அளிப்பவை. நடுங்கச் செய்யும் இவற்றில் இருந்து ஆன்ம விடுபடுவதற்கு என்ன வழி? உயிர் பக்குவம் அடைந்தவுடன் அதனை விட்டுப் பிரியாமல் நிற்கும் ஈசன் கருணையினால் மட்டுமே இந்த உபாதிகளையும் ஆணவத்தையும் அழிக்க முடியும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏
நேற்று இரவு அண்ணாமலையார் கிரிவலம் சென்றபோது எமலிங்கம் முன்பு இதுவரை காணாத வகையில் நெல்லிக்கானியில் விளக்கு ஏற்றி வைத்த�� வழிபட்டு வருகிறார்கள் திடீர் ஆந்திர பக்தர்கள்.
வந்தோமா சாமி கும்பிட்டோமா போனோமானு இருங்கடா புதுசு புதுசா பத்தி விட்டு போகாதீங்க 😂
தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று.
வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ்ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழந்ததாகப் புகார் - முறையான விசாரணை நடைபெறுவதை மருத்துவத்துறை உறுதி செய்ய வேண்டும்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவி���ியர் படிப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், சக மாணவர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட மூக்கு அறுவை சிகிச்சையின் போது அதிகளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ற��� சக மாணவிகளே குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்களால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் மருத்துவர்களில் ஒரு சிலரின் அலட்சியமும், பொறுப்பின்மையும் ஒட்டுமொத்த மருத்துவத்துறை மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, மாணவி உயிரிழப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்ச��ய��்துடன் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும��ன மரியாதைக்குரிய திரு நிதின் நபின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கும் திரு நிதின் நபின் அவர்கள் பூரண உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@NitinNabin @BJP4India @BJP4TamilNadu
தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு - தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்க���ம் மின்வெட்டுப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நிகழும் அறிவிக்கப்படாத பலமணி நேர திடீர் மின்வெட்டால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கோடைக் காலங்களில் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக திகழும் மின்சாரம், அறிவிக்கப்படாமல் அடிக்கடி தடை செய்யப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே கொரோனா கால பாதிப்புகளாலும், மின் கட்டண உயர்வாலும் ஏராளமான சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக அரங்கேறும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டுப் பிரச்னையால் சிறு வணிகர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றத்தையே வழங்கி வருகிறார்.
எனவே, தமிழக மக்களின் தற்போதை��� தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் தொடர் மின்வெட்டு பிரச்னையை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும் என மின்சாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரி���ாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை ம���்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!
@TVKVijayHQ @TVKPartyHQ @EPSTamilNadu @Udhaystalin @mkstalin @PremallathaDmdk
#அதிமுக#எம்ஜிஆர்#அம்மா
அதிமுகவில் தற்போது நடைபெறும் குழப்பங்களுக்கு பழனிச்சாமி��ே காரணம் என்பேன். கடந்த 9 ஆண்டுகளாக, தன்னை அதிமுகவின் தலைவராக நிலைநிறுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தினாரே தவிர, அதிமுகவை வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை.
கட்சியில் தனது பதவியை காப்பாற்றிக் கொண்டால் போதும், திமுக மீதான அதிருப்தியில் எப்படியும் அதிமுகவுக்கு வாக்களித்து விடுவார்கள் முதல்ராகி விடலாம் என்கிற கனவில் இருந்த பழனிச்சாமி பதவியை காப்பாற்றிக் ���ொள்ளவே தனது முழு பலத்தையும் பயன்படுத்தினார்.
அதிமுகவின் தொடர் தோல்விகள், அதிமுக பலவீனமாக இருக்கிறது, டெல்லிக்கு அடிமையாகி விட்டது போன்ற திமுகவின் பிரச்சாரங்களுக்கு சரியான எதிர்வினை அதிமுகவில் இருந்து வரவில்லை. மாற்றுக்கருத்து உடைய��ர்களை அனுசரித்து செல்லாமல், அவர்களை கட்சியை விட்டு அனுப்புவதிலயே பழனிச்சாமி குறியாக இருந்தார், ஒரே காரணம் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பது மட்டும்தான்.
சட்டமன்ற தேர்தலில் தோற்றால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதும், நாடாளுமனற தேர்தலில் தோற்றால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது என ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது என அம்மா காலம் வரை ���திமுக வைத்திருந்த பேட்டர்ன், பழனிச்சாமி தலைமை வகித்த காலத்தில் மறைந்து போனது. தொடர் தோல்விகளால், பத்துதோல்வி பழனிச்சாமி என அடைமொழி நிலைக்கும் அளவுக்கு அதிமுகவின் நிலைமை மோசமாய் போனது.
அப்பொழுதும் அதில் பாடம் கற்றுக் கொண்டு அதிமுகவை வலுப்படுத்தும் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக என நெடுங்காலமாய் தமிழகத்தில் நிலவிய சமன்பாட்டை விஜய் நிச்சயம் சீர்குலைப்பார் என்பதை கணிக்காமல், அல்லது அதற்கேற்றார்போல் அதிமுகவை தயார்டுத்திக் கொள்ளாதன் விளைவு, விஜய் இன்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. அதிமுக தொடர்ந்து இரு சட்டமன்ற பொதுதேர்தல்களில் தோற்பது, 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல்முறை.
��தை எல்லாவற்றையும் விட கொடுமை, சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி, பழனிச்சாமி முதல்வர் என்கிற செய்தி எல்லா பக்கங்களிலும் மிக வேகமாக பரவியபோதும், அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது மிகப்பெரும் அதிர்ச்சி. இல்லை அப்படியொரு முயற்சியே இல்லை, நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தோமா என பழனிச்சாமி தரப்பில் இருந்து யார��வது கேட்டால்,
"திமுக தயவுடன் அதிமுக ஆட்சி என்கிற செய்தி ஊடகங்களில் வந்த உடனே, எம்ஜிஆர், அம்மாவின் வழியில் வந்த எங்களுக்கு திமுக தயவில் ஆட்சியமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற செய்திகளை பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்", என சொல்லி இருந்தால் அது உண்மையான அதிமுக ரத்தம். ஆனால் அந்த மெளனம் சொல்லிய செய்தி என்ன? பதவிக்காக திமுகவையும் ஏற்பீர்களா? அப்படியொரு சிந���தனை வந்த பிறகு, எம்ஜிஆர், அம்மா, அதிமுக என சொல்லும் தகுதி யாருக்காவது இருக்குமா?
அதிமுக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரமிது. தனிமனிதர்களின் பதவியை விட அதிமுக என்கிற பேரியக்கமே இங்கு பெரிது.
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு ��ாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ��ட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 ���ூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொ���்கிறேன். தேர்தல் நேரத்தில் மக்கள் முன் வைத்த அனைத்து வாக்குறுதிகளையும் உரிய நேரத்தில் நிறைவேற்றும் எனவும் நம்புகிறேன். @CMOTamilnadu
இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய கொடையாகவும், தாய்மை எனும் பெருங்குணத்தை ஏந்திய தியாகத்தின் மறு உருவமாகவும் திகழும் தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள���கிறேன்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடிப்படை அடித்தளமாக, அளவிட முடியாத அன்பு கொண்டவராக, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தின் முதல் ஆசிரியராகத் திகழும் தாய்மார்களின் அன்பும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் போற்றி கொண்டாடுவோம்.
சவால்கள் நிறைந்த சூழலில் தனிப்பட்ட வாழ்க்கையை விட, தான் கொண்ட கொள்கைக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்பணித்திட்ட ஆருயிர் சகோதரர் செயல்வீரர் மேலூர் திரு ஆர். சாமி அவர்களின் நினைவு தினம் இன்று.
சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, மேலூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் மத்தியில��� மட்டுமில்லாது, தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் என்னுடன் இணைந்து பணியாற்றி அனைத்து தரப்பு கழகத்தினரின் அளப்பரிய அன்பையும் பெற்று, போர்ப்படைத் தளபதியாக தொண்டர்களின் மத்தியில் நீக்கமற நிலைத்திருக்கும் சகோதரர் மேலூர் ஆர். சாமி அவர்களின் நினைவுநாளில் அவர் கண்ட இலக்குகளை விரைந்து அடைந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் - தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னரே கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி நதிநீரில் தொடர்புடைய நான்கு மாநிலங்களில் கர்ந���டகாவை தவிர்த்து மீதமுள்ள தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகாத நிலையில், அதிகாரிகளை வைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டுவதும், அதில் நதிநீர் விவகாரம் குறித்து விவாதிப்பதும் ஏற்புடையதல்ல.
அதிலும், குறிப்பாக தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேக��ாது அணையை கட்டியேத் தீருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அம்மாநிலத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெறவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைப்பதோடு, தமிழ்நாடு, கேரள���், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் அமைந்த பின்னரே இக்கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தன்னுடைய வீரத்தாலும், அசாத்திய திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை அதிரச் செய்தவருமான மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்டு, தன் தனித்��ுவ உத்திகளால் வெற்றிமேல் வெற்றி கண்டு, பிறந்த மண்ணின் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் வீரர் தீரன் சின்னமலை அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமேதை, சமுதாயத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
பரந்த படிப்பும், ஆழ்ந்த அறிவும், வியக்கத்தக்க நெஞ்சுரம் கொண்டிருந்து, நாடு முழுவதும் சமதர்ம சமூகநீதி தத்துவங்களை வேரூன்றச் செய்த மாபெரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.