வாழ்க்கை, குடும்பம், வேலை, நல்ல நண்பர்கள், வாசிப்பு, இலக்கியம், etc...
வாழ்வில் மகிழ்ச்சியற்ற கணங்கள் அனைவருக்கும் உண்டு. பெரிய மகிழ்ச்சியான வாழ்வின் முன்பு அவை மிகச்சிறியவை.
ரீல்ஸ் ஒன்றில் "மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?"
என்று ஒருவர் கேட்கிறார்.
சிலர் ஆம் என்கிறார்கள். சிலர் இல்லை என்கிறார்கள்.
(இல்லை என்பவர்கள் பாதிப் பேர் இளம்வயதில் இருப்பவர்கள். ஆம் என்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்)
இதைவிட என்ன பெரிய மகிழ்ச்சி இருந்திடப் போகிறது.
இதைப்பார்த்துவிட்டு நானே என்னிடம் கேட்டுக் கொள்கிறேன்.
மகிழ்ச்சியாக இருக்கிறாயா?
ஆம் நிச்சயமாக
மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?