கொலை மிரட்டல் விடுத்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்துள்ள தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக��கத்தக்கது.
நாங்கள் சொல்வதை எதுவும் செய்ய மாட்டோம் என்பது தெரிந்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் அர்த்தமற்றதும், அப்பட்டமான அரசியல் பழிவாங்கலுமாகும்..
ஆட்சியை இழந்த திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவுவதற்கு உறுதுணையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள புதிய தலைமுறை ஆசிரியர் விஜயனை கைது செய்த #SofaModel அரசிற்கு வன்மையான கண்டனங்கள்.
கண்டம் விட்டு கண்டம் சென்றுள்ளதால், தற்போது கண்டனத்துடன் மட்டும் முடித்துக் கொள்கிறேன்.
இந்தியா வந்தவுடன் இன்னும் வன்மையாக கண்டிக்கிறேன். அதுவரை என் மச்சான் அணி அல்லது அத்தை அணி என பிரிந்து திரளாமல், நான் வரும் வரை காத்திருங்கள் கழகத் தோழர்களே.
ஆளும் #SofaModel முதலமைச்சர், ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி, தமிழக அரசியலில் தவறான முன்னுதாரணமாக விளங்குகிறார்.
மத்திய அரசால் ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர் கைது செய்யப்பட்டாலும், அவரை அமைச்சராகத் தொடரவிட்டு தியாகி பட்டம் அளிப்பதே தமிழக அரசியல் மரபாகவும், திராவிட மாடலின் சாதனையாகவும் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.
@TANGEDCO_Offcl last one and half hours ah enga area la bower cut panni on panni vilaiyatikittu irrukanga. Center ku call panna No. Not available nu varuthu.
Ithukku illaiya sir end....
திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்���ு ஏளனம் பேசுவது ஏனோ?
வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி?
அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலி��ா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்?.
கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி?
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.?
குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது.
பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில�� பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்த���க்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்?
இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம்.
கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, ��ிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி.
உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று ��ுள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள் போற்றுதும்!
மாவீரம் போற்றுதும்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் சர்வதேச இனப்படுகொலை நாள் கூட்டம் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ஜுனா அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை...
முதலில் கம்யூனிஸ்ட்கள் சொன்னோம் அப்போது திமுகவினர் நம்பவில்லை, பிறகு பல முக்கிய பத்திரிகையாளர்கள் சொன்னார்கள் யாரும் நம்பவில்லை, பிறகு C.V. shanmugam சொன்னார், இப்போது திருமாவளவன் சொல்லி விட்டார்.
��ந்த கேவலத்தை தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தை காப்பாற்றியது இடது சாரிகள்...
நாளை பல பேர் திமுக இருந்து வந்து சொல்லுவார்கள்...
வரலாறு எப்போதும் கம்யூனிஸ்ட்களை நினைவு கொள்ளும்...
#TvK #VcK #CPIm
தமிழ்நாட்டின்,சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமான ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து அரசால் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களிடம் ஒப்படைக்கப்படிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசின் தொடர் முயற்சி பலனளித்திருக்கிறது. மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாடின��,சோழப்பேரரசின் பல்வேறு மத நம்பிக்கைகளை மதிக்கும் தன்மைக்குச் சான்றாக உள்ள இச்செப்பேடுகள் தமிழ்நாட்டின் விலைமதிபற்ற சொத்து. ஒன்றிய அரசு இதை உடனடியாக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதைப்பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த போற்றுதலுக்குரிய வரலாற்று ஆவணமான செப்பேடுகள் சொல்லும் செய்தியான மத சகிப்புத்தனமையை பிரதமர் மோடி அவர்களும்,பாஜகவும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை ��ழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொரு��ரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்த���க்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான�� எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• ��ோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீ��்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!