இசையுலகின் ஆகாய கங்கை... விடைபெற்றார் ஜானகி அம்மா!
நம்பவே முடியவில்லை... பல தலைமுறைகளாக நம் வீடுகளிலும், மனங்களிலும் தனது தேன்குரலால் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த அந்த 'இசைக்குயில்' தன் பாடலை நிறுத்திக் கொண்டதா?!
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, நான்கு மொழிகளில், 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, இந்தியத் திரையிசையின் முடிசூடா மகாராணியாகத் திகழ்ந்த மரியாதைக்குரிய 'பாடும் நிலா' எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகிற்கும், கோடிட்டுச் சொல்ல முடியாத பேரிழப்பாகும்.
'சின்னச் சின்ன வண்ணக்குயில்' என்று அவர் துள்ளலாகப் பாடினால் நம் மனமும் சிறகடிக்கும், 'உருகும் உன்னைக் கண்டு' என்று அவர் உருகினால் நம் கண்களிலும் கண்ணீர் துளிர்க்கும். கொஞ்சும் மழலையின் குரலாகட்டும், காதலின் தவிப்பாகட்டும், தாலாட்டின் தாய்மையாகட்டும்... அத்தனை உணர்வுகளையும் தன் குரல் வளத்தால் மட்டுமே கடத்தியவர் அவர்!
மெல்லிசை மன்னர் MSV முதல், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை அத்தனை இசை மேதைகளின் கற்பனைகளுக்கும் உயிர் கொடுத்தவர் ஜானகி அம்மா. குறிப்பாக, SPB - ஜானகி அம்மாவின் கூட்டணி என்பது தமிழ் திரையிசையின் பொற்காலமாகும்.
அவரது எளிமையும், எதற்கும் ஆசைப்படாத அந்தப் பெருந்தன்மையும், விருதுகளை விட ரசிகர்களின் அன்பே பெரிது என்று வாழ்ந்த குணமும் அவரை சாதாரணப் பாடகியாக அல்லாமல், நம் வீட்டுத் தாயாக மாற்றியது.
உடல் மறைந்தாலும், காற்றுள்ள வரை... இந்த பூமியில் இசை உள்ள வரை உங்களது குரல் அலைகள் காற்றில் மிதந்து கொண்டே இருக்கும் அம்மா!
ஜானகி அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!...
தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று.
வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ்ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தமிழர் வீர வரலாற்றின் ஒளிவிளக்காகவும், மண்ணின் மானத்தை காத்த மாமன்னராகவும் திகழ்ந்தவர் மாவீரர் பெரும்பிடுங்கு முத்தரையர். தன்னுடைய ஆட்சித் திறன், வீரத் தன்மை, தமிழர் பண்பாட்டை காத்து வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றவர்.
இன்று அவரது 1351வது சதய விழாவை முன்னிட்டு, அவரின் புகழையும், தியாகத்தையும், வீர மரபையும் நினைவுகூர்ந்து தலைவணங்குகிறோம். தலைமுறைகள் கடந்தும் அவரது பெயர் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் விதமாக கடந்த ஆண்டு நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் மாவீரர் பெரும்பிடுகு முத்தையர் அவர்களுக்கு தபால் தலை வெளியிட்டு நம் தமிழரின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்தி உலகறியச் செய்ததை நினைவு கூர்ந்து மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு இந்திய துணை குடியரசுத் தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் திரு. @CPR_VP அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது..
ஆனால் @TNDIPRNEWS
சார்பில் எந்தவொரு நாளிதழிலும் விளம்பரம் கொடுப்பதில்லை..
@CMOTamilnadu@imrajmohan
EPS Respects | பெரும்பிடுகு முத்தரையருக்கு மரியாதை
போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழாவை முன்னிட்டு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு வரும் 23 ஆம் தேதி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
EPS | Perumpidugu Mutharayar
#EPS | #PerumpiduguMutharayar | #Newstamil24x7 | #Tamilnews
தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சனநாயக நாட்டில் ஆட்சியதிகாரம் என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைச் சுமந்து நிற்கும் ஒரு பெரும் பொறுப்பாகும்.
@arivalayam தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக, மக்கள் நலனை எப்போதும் உயர்த்திப் பிடிப்பதே எங்களது லட்சியம்.
அந்த வகையில்,அமையவுள்ள புதிய அரசு கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஒரு தோழமை சக்தியாக நான் வலியுறுத்துகிறேன்!..
அரசு என்பது மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல; கடைக்கோடியில் வாழும் பாமர மக்களின் கண்ணீரைத் துடைப்பதே உண்மையான அரசு. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதில் புதிய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தின் தனிப்பெரும் அடையாளம் நமது 'மாநில சுயாட்சி'. நிதிப் பங்கீடு மற்றும் மொழி உரிமை ஆகியவற்றில் தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசிடம் போராடிப் பெறுவது இந்த அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த சமூக நீதிப் பாதையில் தமிழகம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், அனைத்து சமூகத்தினருக்குமான சமமான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, பாசனத் திட்டங்களை விரைந்து முடிப்பதோடு, காவிரி உள்ளிட்ட நதிநீர் உரிமைகளில் தமிழகத்தின் பங்கினை உறுதி செய்ய வேண்டும். இயற்கை வளங்களைச் சுரண்டுவதைத் தடுத்து, பசுமைத் தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், கிராமப்புற சுகாதார மையங்களை மேம்படுத்துவதும் மிக அவசியம்.
தேர்தல்கள் வரும், போகும்; ஆனால் மக்கள் நலன் என்பது நிரந்தரமானது. அமையவுள்ள புதிய அரசு, மக்களின் நம்பிக்கையைச் சிதைக்காமல், வெளிப்படைத்தன்மையுடனும், ஊழலற்ற முறையிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.
மக்களுக்காகப் பணியாற்றும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிக்கும் எங்களது தார்மீக ஆதரவு என்றும் உண்டு. அதேவேளையில், மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் சூழலில், ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக களத்தில் நிற்போம்!..
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே முத்தரையர் மக்களின் புரவிஎடுப்பு விழாவை காவல்துறை தடுத்து நிறுத்தியதை அறிந்த, தமிழர் தேசம் கட்சி தலைவர் திரு.@KKSelvakumaroff அவர்கள் கிராம மக்களை சந்தித்து, கோவில் விழாவை நடத்த சட்டரீதியிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என உறுதியளித்தார்.
சனநாயகத் திருவிழாவில் பங்கேற்ற அன்பு உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, நத்தம் சட்டமன்ற தொகுதி, வேட்பாளராகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில், தங்களின் பொன்னான வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடும் வெயில், நீண்ட வரிசை என எதையும் பொருட்படுத்தாமல், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நம் மாநிலத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க நீங்கள் காட்டிய ஆர்வம் மெச்சத்தக்கது.
வாக்களிப்பது என்பது வெறும் உரிமை மட்டுமல்ல, அது நம் சமூகத்தின் மீதான நமது பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட்ட உங்களின் செயல் போற்றுதலுக்குரியது.
எந்தவித அசம்பாவிதமும் இன்றி, அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களின் முதிர்ச்சி பாராட்டுக்குரியது.
உங்களின் நம்பிக்கை, எங்களின் உறுதி!
தேர்தல் என்பது வெறும் வாக்குகளைச் சேகரிக்கும் களம் மட்டுமல்ல; அது மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் புரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையையும், அளித்த ஆதரவையும் ஒருபோதும் வீணடிக்க மாட்டேன்!
வாக்களித்தவர்கள் மட்டுமன்றி, இந்தத் தேர்தல் களம் சிறப்பாக அமைய பாடுபட்ட தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகள்.
இனி வரும் காலங்களில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்போம்!
இன்றைய தினம் 16.04.2026, வியாழக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.காதர்பட்சா (எ) முத்துராமலிங்கம் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
இன்றைய தினம் 15.04.2026, புதன்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.கா.அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராக, வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
இன்றைய தினம் 15.04.2026, புதன்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.ஏ.எம். ஷாஜகான் அவர்களை ஆதரித்து, ஏணி சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
மதவாத சக்திகளுக்கு எதிராக, வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நத்தம் தொகுதி வேட்பாளர் தமிழர் தேசம் கட்சி தலைவர் திரு.@KKSelvakumaroff அவர்கள், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். வாக்குச் சேகரிப்பும் செய்து வருகிறார்.
வெற்றியையும் உறுதி செய்து வருகிறார்.
#KKSelvakumar#DMKAllaiance#Natham#நத்தம்
இன்றைய தினம் 04.04.2026, சனிக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் மேலான வழிகாட்டுதலின்படி, நத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக, நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தேன்!
இந்நிகழ்வில் கழக தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆண்டி அம்பலம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.விஜயன், நத்தம் நகர செயலாளர் திரு.மோகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.முத்துகுமாரசாமி, நத்தம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.ரத்தினகுமார், நத்தம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் திரு.சேக் சிக்கந்தர் பாட்சா, நத்தம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.பழனிச்சாமி, சாணார்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.தர்மராஜ், சாணார்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் திரு. ஜான் பீட்டர், சாணார்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.மோகன், கிளை கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்!