காவல்துறையாக இருந்தாலும் தனது சொந்த தனியார் வாகனத்தில் எந்த பகுதியிலும் தனது அதிகாரத்தை குறிக்கும் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்கள்! @CMOTamilnadu@chennaipolice_
Beaver Construction Company என்ற கட்டுமான நிறுவனம் பொது சாலை மற்றும் தெருவை ஆக்கிரமித்து, கட்டிடத்தின் முன்பகுதியில் சறுக்கு (ரேம்ப்) மற்றும் வாசல் படிகளை சாலை வரை நீட்டித்து அமைத்து சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது. @chennaicorp
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, அகரகட்டு ரயில்வேகேட் மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளத்தை நிரந்தரமாக சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். @CollrTenkasi
தென்காசி மாவட்டம், அகரகட்டு ரயில்வேகேட் மெயின் ரோட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பெரிய பள்ளம் இருந்து வருகிறது. இந்த சாலையை தினந்தோறும் பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் குறிப்பாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன @CMOTamilnadu@CollrTenkasi
எனவே, மேற்கண்ட ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இடம்: சத்தியமூர்த்தி தெரு, காந்திநகர்,
சாலிகிராமம்,
சென்னை - 600093
(129 வார்டு - விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி) @chennaicorp
இதனால் பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கும், போக்குவரத்துக்கு இடையூறுக்கும் உள்ளாகின்றனர். மேலும், இந்த ஆக்கிரமிப்பு பொது பயன்பாட்டிற்கான சாலையின் அகலத்தைக் குறைத்து விபத்து ஏற்படும் அபாயத்தையும் உருவாக்குகிறது. @chennaicorp
DGP சந்திப்ராய் ரத்தோர் இதற்கு முன்பு சென்னை காவல் ஆணையராக பணிபுரிந்த போது தான் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.. இதே போன்ற சதி மதுரை வெள்ளை காளிக்கும் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது..
அதனால் மதுரை வெள்ளை காளி உயிருக்கு இவரே உத்தரவாதம்!!!!
ரவுடி வெள்ளை காளி சிலை மாற்றிக் கொலை சதி உளவுத்துறை உஷார் உஷார் உஷார்
பல்வேறு கொலை வழக்குகளில் கைதாகி சென்னை புழலில் இருக்கின்ற மதுரையை சேர்ந்த வெள்ளை காளி என்ற நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் ஆஜராக கொண்டு சென்றபோது அவர் மீதான கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அவர் தற்போது புழல் ஜெயில் உயர் பாதுகாப்பில் இருந்து வருகிறார் இந்த நிலையில் சிறைச்சாலைக்கு உள்ளே அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்று இருக்கிறது குமுளி ராஜ்குமார், ஜாலி மணி போன்ற நபர்கள் வெள்ளைக்காளியை கொள்வதற்கு ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
வெள்ளை காளியை கோயம்புத்தூர் சிறைக்கு மாற்றி தற்போது காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர் இது வெள்ளைக்காளியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது
ஏற்கனவே கோயம்புத்தூர் சிறையில் 2025-ல் ஜனவரி மாதத்தில் ஏசுதாஸ் என்ற நபர் சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் அதை தற்கொலை என காவல்துறையினர் மாற்றி விட்டனர், இந்த நிலையில் வெள்ளை காளி கோயம்புத்தூர் சிலைக்கு மாற்றப்படுவது அதுபோல ஒரு திட்டத்திற்கு தான் என சந்தேகம் எழுகிறகிறது
இந்த திட்டத்திற்காக சிறை துறையின் மூத்த அதிகாரி எத்தனை ஸ்வீட் பாக்ஸ்களை பெற்றுக் கொண்டார்கள் என்பதை உளவுத்துறை தலைவர் அஸ்ரா கார்க் பார்வைக்கு
@CMOTamilnadu@tnpoliceoffl@tnpdial100
நேற்று இரவு தென்காசி மாவட்ட ஈ.னாவிளக்கு ரவுண்டானா அருகே நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இலத்தூர் காவல்நிலைய தலைமை காவலர் காசிபாண்டியன் என்பவர் ஏல,எங்கல போறீங்க என்று மரியாதை குறைவாக பேசினார்! நடவடிக்கை எடுக்குமா தென்காசி காவல்துறை?@TenkasiPolice@SouthZoneTNpol
மிக்க நன்றி🙏🏻 மேலும் இது போன்று போலீஸ் ஸ்டிக்கர் மற்றும் போர்டு உடன் நிறைய வாகனங்கள் சென்னை மாநகரக்குள் வளம் வந்து கொண்டிருக்கிறன.. அவை அனைத்தையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்! @ChennaiTraffic
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அதிகாலை ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் தற்போது மணி 10:40 ஆகியும் CMDA காண்ட்ராக்டில் பணி செய்பவர்கள் பார்க்கிங் டோக்கன் மட்டும் வாங்கிகொண்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்யாமல் பக்கோடாவும், சமோசாவும் ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்!
Coimbatore Mapla என்ற Youtuber சென்னை T.நகரில் பள்ளி மாணவிகளை வழிமறித்து தனது @instagram திறந்து, அவள் தன்னை பின்தொடர்கிறாளா என்பதை அவரது மொபைல் மூலம் உறுதிப்படுத்த சொல்லி, அந்த மாணவியின் Instagram ஐடியை காண்பித்து, அந்த மாணவிக்கு சமூவலைதளத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறார்!
ஒரு நாள் கூத்து மாதிரி "One Day Action" ஆக தெரிகிறது.. அங்கு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன.. இந்த சாலை ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்..
நிரந்தர தீர்வு அளிக்கவும்!
@COPTBM@Tambaram_Corp
கிழக்கு தாம்பரம் கணபதிபுரம், சுத்தானந்த பாரதி தெருவில் சாலையில் இரண்டு புறமும் வாகனங்களை நிறுத்தி கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. கண்டுகொள்ளாமல் உறங்கும் தாம்பரம் மாநகர காவல்துறையும், மாநகராட்சியும்!
காலை 10 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயிலில் மாண்புமிகு நீதியரசர் திரு. G.R.சுவாமிநாதன் மற்றும் நீதித்துறையை களங்கப்படுத்திய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்!
போலீஸ் ஸ்டிக்கர் மற்றும் போர்டுடன் TN 05 BL 7945 என்ற கார் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் டு சோளிங்கர் ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது நடவடிக்கை எடுக்குமா ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை?
@mkstalin@Udhaystalin@tnpoliceoffl
கிழக்கு தாம்பரம் கணபதிபுரம், சுத்தானந்த பாரதி தெருவில் சாலையில் இரண்டு புறமும் வாகனங்களை நிறுத்தி கொண்டு சாலையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. நடவடிக்கை எடுக்குமா தாம்பரம் மாநகர காவல் துறையும், மாநகராட்சியும்??
@COPTBM@Tambaram_Corp