நம்முடைய #ChepaukTriplicane தொகுதி வி.ஆர் தெரு சமூக நலக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால நிவாரண முகாமில் இன்று ஆய்வு செய்தோம்.
அங்கு பொதுமக்களுக்காக தயாரிக்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து, அதன் தரத்தை உறுதி செய்தோம்.
மேலும், அங்கிருந்த மழைக்கால மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினோம். @nchitrarasu
வடகிழக்குப் பருவமழை நேரத்தில் மக்களுக்கு துணை நிற்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் இன்றைய தினம் காலை ஆய்வு செய்தோம்.
Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் பேசினோம். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம். #NEMonsoon
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எழுதும் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் ஒரு மகத்தான வரலாற்று ஆவணமாய், கழக இளைஞர் அணியின் சார்பில், நடத்தப்படும் @muthamilarignar பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
கழக இளைஞர் அணிச்செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு மற்றும் ஆசிரியர் குழு புத்தக உருவாக்கப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கழக மாநாடுகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், தி.மு.கழக இதழ்கள், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அறிவிப்புகள், துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் தொடர்பான அரிய புகைப்படங்கள் உங்களிடம் இருந்தால், அவற்றை
📮தி.மு.க-75 அரிய புகைப்படங்கள்,
அன்பகம்,
614, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை 600018.
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
📩[email protected] என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது
📲8807193390 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.
#DMK75 #கழக_இளைஞர்_அணி
தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை - C.I.T. நகரை இணைக்கும் வகையில், சென்னையின் முதல் இரும்பு மேம்பாலத்துக்கு, கொரோனா களத்தில் மக்களுடன் நின்று உயிர்துறந்த திரு. ஜெ. அன்பழகன் அவர்களின் பெயர்சூட்டித் திறந்து வைத்தேன்!
#AnbazhaganFlyover
உடலால் மறைந்தாலும் உணர்வால் நம்முடன் வாழ்கிறார் ஆற்றல்மிகு செயல்வீரர் அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்கள்.
தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள சென்னையின் முதல் இரும்புப் பாலத்திற்கு அண்ணனின் பெயரைச்சூட்டி, அதை இன்று திறந்து வைத்து சிறப்பு சேர்த்துள்ளார்கள் நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
கொரோனா நேரத்தில் மக்களைக் காப்பதற்கான களப்பணியில் தன்னுயிர் தந்த அன்பு அண்ணனின் பெயரைத் தாங்கி நிற்கும் இப்பாலம், அவர் நேசித்த மக்களுக்கு இன்று முதல் பயன்பட இருக்கிறது.
நம் அன்பு அண்ணன் பெயரில் தியாகராய நகரில் பாலம் அமைத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!
#JAnbazhagan
இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் - உள்ளத்தில் உறைந்து நிற்கிறது! 🎼
இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை!
@ilaiyaraaja#இளையராஜா#இளையராஜா_50
தமிழ்நாட்டின் காவல் அரணாக திகழும் ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தின் தலைவராக, மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் இன்று!
#DMKITWING_ARIVAGAM
பொதுமக்களின் இல்லம் தேடி அரசு சேவைகள் செல்கின்ற வகையில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், #ChepaukTriplicane தொகுதி, வார்டு 119, பேகம் சாகிப் மெயின் தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற முகாமை இன்று ஆய்வு செய்தோம். அரசுத்துறைகளின் சேவைக்காக மனு அளித்தவர்களுக்கு சேவைக்கான சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினோம்!
@nchitrarasu
வயிற்றுப்பசியோடு, அறிவுப்பசி போக்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்று அடுத்தக்கட்டத்தை எட்டி இருக்கிறது!
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் @BhagwantMann அவர்கள் முன்பாக, நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், மயிலாப்பூர் புனித சூசையப்பர் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவளித்து தொடங்கி வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம்.
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் பயனாளிகளான மாணவச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
#CMBreakfastScheme
இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் மாண்புமிகு பகவந்த் மான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார்.
இன்று காலை விழா அழைப்பிதழை மாண்புமிகு திரு. @PWilsonDMK MP அவர்கள் பஞ்சாப் முதலமைச்சர் அவர்களிடம் நேரில் வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் வரவேற்றார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சிறப்புமிகு திட்டமான #காலை_உணவு_திட்டம் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் சத்தான உணவுடன் கல்வி கற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 26 அன்று இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறது #திராவிட_மாடல் அரசு !
இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு♥️
நாளை (25.08.2025) எனது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், எங்கள் குடும்பத் தலைவர் திரு. @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.