சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்த
அருணாசலம் படத்தில்
இடம்பெற்ற
'அதான்டா இதான்டா'
பாடலுக்காக எழுதப்பட்டுப்
படத்தில் இடம்பெறாத
மாற்றுப் பல்லவியும் சரணங்களும்
ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்பில்
இடம்பெறுகின்றன
இந்த வரிகளை
ரசிகர்கள் அதே மெட்டில்
பாடிப் பார்க்கலாம்;
பரவசம் கொள்ளலாம்
பல்லவி
அன்புள்ள அண்ணன்டா
அருணாசலம் நான்தாண்டா
சாதிபேதம் இல்லாம
சகலருக்கும் சொந்தம்டா
ஆண்டவன் நடத்திடுவான்டா
அருணாசலம் நடந்திடுவான்டா
நான் எந்த நாளும்
எளிமையான ஆளடா - அட
ஏழை வீட்டு உப்புக் கல்லு நானடா
சரணம் 1
எல்லா மனிதனுக்கும்
ஓராற்றல் உண்டு – அதை
நல்லா வளர்த்துவிடு
அடையாளம் கண்டு – அட
உதவாத பயலென்று
எவனுமில்லை இன்று – சிறு
வேப்பம் பூவானாலும்
தேனுண்ணும் வண்டு
பாம்புகடிச்சு இங்கே
பொழச்சவனும் உண்டு – தன்
செருப்புக் கடிச்சு இங்கே
செத்தவனும் உண்டு – அட
நாளை என்னாகும் என்ற
கவலைகளை வென்று – நீ
இன்றே சுகம் கண்டு
வாழ்வதுதான் நன்று
போதிக்கும் மனிதர்கள்
சாதிப்பது இல்லையடா
சாதிக்கும் மனிதர்கள்
போதிப்பது இல்லையடா
உழைக்கும் மனிதன்
அழைக்கும்போது
தெய்வம் வருமடா
நெற்றி வேர்வை
நிலத்தில் சிந்தி
வெற்றி வெற்றி கொள்ளடா
சரணம் 2
கறையேதும் இல்லாத
நிலவெங்கே சொல்லு? – சிறு
நுரை கூட இல்லாத
நதி எங்கே சொல்லு – அட
சதுரத்தில் முட்டையிடும்
பறவை எதுசொல்லு – மிகச்
சரியாக வாழ்கின்ற மனிதன்
யார் சொல்லு?
ரோஜாச் செடியென்றால்
அதிலுண்டு முள்ளு – நீ
முள்ளோடு மோதாமல்
ரோஜாவைக் கிள்ளு – அட
அறியாத பிழை என்றால்
அதை விட்டுத் தள்ளு – சிறு
குறை நீக்கி நிறை கண்டு
நெறியோடு நில்லு
இளமையில் உழைப்பவன்
முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன்
முதுமையில் அழுகிறான்
விதைக்கு வைத்ததைச்
சமைத்து உண்பவன்
மிகவும் மூடனடா
மழைக்கு முந்தியே
கலப்பை செய்பவன்
எவனோ அவனே சூரன்டா
முதல்வர் பக்தவத்சலமா #Parasakthi-ல நடிச்சவரோட நிறய இன்டர்வியூஸ் இப்போ வருது. சாமி, மனுஷன், எவளோ பக்கா திராவிடனா இருக்காரு👌🔥அதவிட அரசியல் புரிதல் இன்னும் வியக்க வைக்கிது.
Another textbook example of Villains make the greatest humans in real life.
Shankar Jaikishan won the best music director award for Chori Chori, in the year 1957. O.P. Nayyar was the only other contender for the movie CID. This very romantic song by Mannadey and Lataji is written by Shailendra . This is the last film of Nargis and Raj together.
🎤 சமீபத்தில் எங்கள் வீட்டில் நடந்த ஒரு கரோக்கி இசை இரவில் ஒரு மாயம் நிகழ்ந்தது.
வழக்கம்போல சிலர் பாட, சிலர் தயங்கிய மாலை. நானும் சுமாராகப் பாடிவிட்டு, தயங்கிய நண்பர்களிடம் இதைச் சொன்னேன்:
“எந்தவொரு திறமையைக் கற்றுக்கொள்வதற்கும் சங்கடம் தான் நுழைவுக் கட்டணம்.”
ஒவ்வொருவராகச் சங்கடத்தைக் கடந்து பாட ஆரம்பித்தார்கள். கடைசியில் இருந்த ஓர் இளம் தோழி, 'இதற்கு முன் பொதுவில் பாடியதில்லை' என்றார் அவளது தாய்.
“மனம்விட்டுப் பாடி மகிழ இது ஒரு சின்ன ஆரம்பம் தான், சங்கடப்படாதே!” என்றேன் அந்தப் பெண்ணிடம்.
🎶 ஒரு புதிய மென்மையான பாடலைத் தயக்கத்துடன் தடுமாற்றத்துடன் பாடி முடித்தார்.
“இது ஓர் அற்புதமான விலைமதிப்பற்ற தருணம். நீ நுழைவுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டாய், வாழ்த்துகள்,” என்றேன். அடுத்த பாடகரைத் தேர்ந்தெடுக்கத் திரும்பியபோது என் தோளைத்தட்டி அந்த இளம் நண்பர் சொன்னார்:
“நான் இன்னொரு பாட்டு பாடறேன்!”
அவதாரம் திரைப்படத்தில் வரும் 'தென்றல் வந்து தீண்டும்போது' என்ற கடினமான பாடலைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், பிடித்த பாடல்.
பயம் குறைந்து, மகிழ்ச்சி பெருக, நாங்கள் இருவரும் இணைந்து பாடினோம். முடிந்ததும், ஒருவருக்கொருவர் ஹை-ஃபைவ் கொடுத்துக்கொண்டோம்.
ஒரு நுழைவுச்சீட்டு உடனடியாக அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்று அவருடைய வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக மாறியது. இது மாயமில்லாது வேறென்ன? ✨
#CourageToBegin #SkillDevelopment #MusicMagic
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
ஒருவேலை அண்ணன் சீமான் தடம் பிரண்டால்.. (மாட்டார்)
இதே கொள்கையை தூக்கி பல இளைஞர்கள் நடை போடுவார்கள். அவர்களுடன் நடை போடுவேன்..
ஒரு வேளை அண்ணன் படம் நடிக்க போய்டாருன்னா என்னண்ணே பண்ணுவீங்க...