பழைய பேப்பர்!
எஸ்.ஜானகியை மதிக்காத காங்கிரஸ்!
1984-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய அஸ்தி பல மாநிலங்களுக்கு அஞ்சலிக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட இந்திரா காந்தியின் அஸ்திக்கலசம் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.
திரையிசை கலைஞர்கள் சார்பில் எம்.எஸ்.விஸ்வநாதன், சீர்காரி கோவிந்தராஜன், ஏ.எம்.இராஜா & ஜிக்கி, சங்கர் கணேஷ், கங்கை அமரன், ன, எஸ்.பி.பாலசுப்ரமணியம், டி. கே.எஸ்.கலைவாணன், வாரியார்தாசன், வாணி ஜெயராம், எம்.ஆர்.விஜயா ஆகியோருடன் பாடகி எஸ்.ஜானகியும் இசை அஞ்சலி செலுத்தினார்.
அந்த எஸ்.ஜானகிக்கு பத்ம விருதுகளை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உரிய காலத்தில் அளிக்கவில்லை. கடைசியில் 2013-ல் பத்ம பூஷன் விருதை காங்கிரஸ் அறிவித்த போது, ஜானகியிடம் இருந்து எதிர்வினை வந்தது. ’’55 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் பாடிவரும் எனக்கு, இந்த பத்ம விருது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏற்க விரும்பவில்லை’’ என்று அறிவித்தார்.
#janaki #sjanaki
💠இந்நாள் முதலமைச்சரின் கரூர் பேச்சு - முன்னாள் முதலமைச்சரைப் பற்றிப் பயன்படுத்திய சொற்கள் ஒரு முதலமைச்சர் என்ற பதவித் தகுதிக்கு உகந்ததல்ல!
💠வெற்றிகளும் – தோல்விகளும் நிரந்தரமல்ல!
மிகப்பெரிய சோகம் நடைபெற்ற கரூருக்கு, முதலமைச்சரான பின்பு நேற்று (10.7.2026) திரு.ஜோசப் விஜய் அவர்கள் சென்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், சில உதவிகளையும் – பணி நியமனங்களையும் வழங்கியதால், அது அரசால் ஏற்பாடு செய்யப்பட்டதாக, அரசாங்க நிகழ்ச்சியாகவே கருதப்படவேண்டிய நிகழ்ச்சி என்பது ஒருபுறம் இருந்தாலும், அதில் பேசிய முதலமைச்சரின் @CMOTamilnadu@actorvijay பேச்சும் (அது தயாரிக்கப்பட்ட உரை என்ற நிலையிலும்கூட), அதன் மொழி நடையும், அரசியல் அறம் சார்ந்ததாகவோ, பண்பு நலனையொட்டிய சொற்கோவையாகவோ இல்லாதது, அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுநிலையில் உள்ள எவராலும்கூட ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பது, வேதனை மிகுதியுடன் கண்டனம் தெரிவிக்கக் கூடிய ஒன்றாகும்.
💠முதலமைச்சர் பதவியில் உள்ள ஒருவரின் தகுதிக்குரிய மொழிகள் ஆகாது!
தி.மு.க.வின் தேர்தல் தோல்வி பற்றியோ, முதலமைச்சராக இருந்தவரின் தோல்வி குறித்தோ அவருக்கு விமர்சிக்க உரிமை இருக்கலாம். ஆனால், அதற்கு அவர் பயன்படுத்திய தரக்குறைவான சொற்கள் ‘‘ஒரு 5 நிமிடம் பேசியவுடனே, கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்’’ என்பது பகுத்தறிவுள்ள – பண்பாடு புரிந்தவர்கள் எவராலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று; முதலமைச்சர் பதவியில் உள்ள ஒருவரின் தகுதிக்குரிய மொழிகள் ஆகாது!
திரைப்படங்களில் அந்த வசனங்களுக்குக் கைதட்டல் கிடைக்கலாம்; உண்மை ஜனநாயகத் தத்துவத்தைப் புரிந்த எவரையும் முகம் சுளிக்க வைக்கும் வசை மொழிகளாகும்.
மக்களாட்சியில், தேர்தலில் முதலமைச்சர்களாக இருந்தவர்களும், மக்கள் தலைவர்களாக மதிக்கப்பட்டவர்களும்கூட தோல்வி அடைவது அதன் விசித்திரங்களில் ஒன்று.
💠தோல்விபற்றி விமர்சித்தபோதுகூட – மொழிகளில் கண்ணியம் காத்தனர்!
சாதனைக்கு மேல் சாதனை செய்த, ஊழல் செய்யாத ‘ஏழைப் பங்காளர்' என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் காமராசர் தோற்கடிக்கப்படவில்லையா?
பேரறிஞர் அண்ணா தேர்தலில் (காஞ்சியில்) தோற்கடிக்கப்படவில்லையா?
ஏன், திருமதி இந்திரா காந்தி தேர்தலில் தோற்கடிக்கப்படவில்லையா?
வெற்றி பெற்ற கட்சித் தலைவர்களும், தனிப்பட்ட முறையில் வருந்தியவர்களும், அவர்களது தோல்விபற்றி விமர்சித்தபோதுகூட – மொழிகளில் கண்ணியம் காத்தனரே!
ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் என்பவர், அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய கடமைக்குரியவர்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்கள் பலவற்றை – முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் த.வெ.க. ஆட்சி பின்பற்றித் தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பது எதைக் காட்டுகிறது?
முன்னாள் முதலமைச்சரின் தோல்வியை விமர்சிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அது தரமற்றதாகவும், அருவருப்புக்குரியதாகவும் இருக்கலாமா?
இப்படியெல்லாம் அரை நூற்றாண்டுப் பொதுவாழ்வுக்கு உரியவரான மானமிகு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு இழுக்கு ஏற்படுத்திட முடியாது எவராலும்! இது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும்.
💠வெற்றிகளும், தோல்விகளும் எவருக்கும் நிரந்தரம் அல்ல!
வெற்றிகளும், தோல்விகளும் எவருக்கும் நிரந்தரம் அல்ல; காலச் சூழல் அதைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வந்துள்ளது. இனியும் வரும்.
‘‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்’’ (குறள் 191)
‘‘கேட்பவர் பலரும் வெறுத்துச் சினங் கொள்ளும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லிக்கொண்டே இருப்பவன், பிறர் எல்லோராலும், எப்பொழுதும் எள்ளி நகையாடப்படவே செய்வான்.’’
- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.7.2026
Sanghis are now targeting Christians in Bengal.
A cross of newly built Church in Subhasgram (Baruipur, Bengal) was destroyed amid chants of Jai Shri Ram.
I hope the world is watching what these terr0r!sts are doing to minorities in India.
An audit in Rajasthan has reportedly uncovered an alleged ₹20 crore cattle shelter scam. According to the report, dead cows were shown as alive on paper to claim government grants, with duplicate and fake ear tags also allegedly used.
The audit also revealed that government funds were collected in the name of fodder and maintenance by registering more cattle than the actual number in many places, while payment was also obtained by using the same tag number repeatedly.
புத்தகங்களே
சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்!
- கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதை இது. மனப்பாடக் கல்வி முறைக்கு எதிரான சாட்டையைக் கவிதையாக வீசினார். குழந்தைகளிடம் இயற்கையாகவே எதையும் தேடி கற்கும் குணம் இருக்கும். அந்த ஆர்வத்தைத் தூண்டாமல் பாடப்புத்தகங்களை மட்டும் அவர்கள் கையில் கொடுத்து அவர்களின் பரந்த உலகத் தேடலைச் சுருக்கிவிடுகிறோம் என்பதைத்தான் இப்படிக் கவிதையாக வடித்தார்.
குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள். அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பிய கவிக்கோ இன்றைக்கு இருந்திருந்தால்
அமைச்சர்களே
சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்!
என மாற்றி பாடியிருப்பார்.
அவரு பாட்டுக்கு அமைதியா இருந்திருப்பாரு...
வேண்டுமென்றே பொய் கேஸ் போட்டு, தமிழ்நாடு முழுக்க famous ஆக்கிவிட்டாங்க.
ஆனா, ஒரு நாள் முடியுறதுக்குள்ள உச்சத்தைத் லாடம் கட்டிட்டு வந்துட்டாப்புல்ல மனுஷன்! 🔥
உண்மையிலேயே நீங்க வேற லெவல், அண்ணா. 👏
@ARROffice
Hats off to you! 🫡
வாருங்கள் தோழர்களே !
அடுத்தடுத்த தலைமுறைகளின்
பண்பு நிலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் , இனி இந்த சனநாயக அமைப்பில் தேர்தல்களின் எதிர்காலம் பற்றி விவாதிப்போம்.