திருமாவின் மவுனம் அதிர்ச்சியளிக்கிறது..
பேராசான் என்று கொண்டாடினோமே ?
அமைப்பாய் திரள்வோமில் நீங்கள் எழுதிய அறம் இது தானா ? அரசியல் பிழைத்தேன் என்ற சொகுசாய் வாழ்தல் அறமா?
உங்களுக்காய் உடல் பொருள் ஆவியனைத்தையும் தத்தம் செய்தவர்களை எண்ணி பார்க்கிறேன்..
வெட்கம். வேதனை..
கதறு கதறு என்று சொல்கிறார்கள்...
இனி நாங்கள் கதறி என்ன கதறாமல் என்ன?
எங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த காலகட்டத்தை திராவிட இயக்கம் தந்த கொடைகளின் பயனாளியாய் திமுக ஆட்சியின் கீழ் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களின் கீழ் பயன் பெற்று படித்து வேலைக்குப் போய் உலகமெல்லாம் சுற்றிவிட்டு வந்து வாழ்ந்து முடித்து விட்டோம்.
வளரும் தலைமுறையின் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்ற கவலையில் தான்...
இப்போது வந்திருக்கும் முட்டாள் தனமான ஆட்சியை எதிர்க்கிறோம் விமர்சிக்கிறோம்..
இது தொடர்ந்தால் பிற்காலத்தில் கதறப்போவது என்னவோ இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் தலைமுறைதான்.
முக்கியமாக இன்றைய GenZ மற்றும் Gen A
அனேகமாக அடுத்த 20-25 வருடங்களில் இந்த தலைமுறை நாற்பது வயதை தொடும் போது செய்த தவறினை நினைத்து நிச்சயம் கதறத்தான் போகிறார்கள்.
அப்போது அதை பார்க்க எங்களில் பெரும்பாலானோர் இருப்போமோ என்னவோ..!
காலம் பதில் சொல்லும்..
-கதிர் ஆர் எஸ்
26/08/26
இவ்ளோ டிஜிட்டல் சப்போர்ட் இருந்தும் ஒரு Fake Narrative க்கு பதில் கொடுக்க முடியாம நாம திணறிட்டு இருக்கோம்.
ஆனா தலைவன் ஒட்டுமொத்த பார்ப்பன Narrative களையும் ஒத்தையா நின்னு டீல் பண்ணாரு.🔥
முரசொலி 85 🔥🔥
தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் பிறந்ததினம் இன்று!
திருச்சியிலோ, இல்லை AI வைத்தோ நினைவுகூறும் ஃபோட்டோ எதுவும் வந்துச்சா?
இல்லை, ஆட்சிக்கு வந்தவொடன மறத்துட்டாங்களா?
தகவல் இருந்தால் பகிரவும்
தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள்.
சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்.
இதுதான் சாக்குனு வன்மத்தைக் கக்குறேன்னு நினைக்க வேண்டாம்.
DMK-ல சேரணும், அந்தக் கட்சியோட உறுப்பினரா, உட்கட்சித் தேர்தல்ல வாக்களிக்குற வகையிலான membership card வாங்கணும்னு (unlike Oraniyil Tamil Nadu kinda online memberships) ஆர்வமா இருக்க எத்தனையோ பேரைப் பாத்திருக்கேன். ஆனா, DMK-ல எப்படி உறுப்பினராவது என்பதையே பரம ரகசியமா வெச்சிருக்கோம். தலைமைக் கழகமே உறுப்பினர் உரிமைச் சீட்டு அனுப்பி வெச்சாலும் தனக்கு ஆதரவான ஆள் இல்லன்னா மா.செ. தராம கூட இழுத்தடிப்பாங்க சில இடங்கள்ல.
இதை உடைச்சு, உறுப்பினர் சேர்க்கையில வெளிப்படைத்தன்மைய கொண்டு வந்து எளிமைப்படுத்தணும். Background check, probation periodலாம் வேணா வெச்சிக்கலாம்.
இதை ஏன் இப்ப சொல்றேன்னா, திமுக இந்தத் தேர்தல்ல தோத்த பிறகு இருக்க கொந்தளிப்பான மனநிலையில திராவிடப் பற்றுள்ள இளைஞர்கள் இனிதான் நாம தீவிரமா வேலை செய்யணும்னு வெறியா இருக்காங்க. அது ஆறிப் போறதுக்குள்ள எல்லாரையும் அதிகாரப்பூர்வமா கட்சிக்குள்ள உள்ள இழுக்கணும்.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.