திராவிட முன்னேற்றக் கழக கலை - இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநில துணைச் செயலாளரும், என் தந்தையார் முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் திரு. பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் மீது மிகுந்த பற்று கொண்ட அணுக்கராய் விளங்கியவருமான திரு. வீரகணேசன் அவர்கள் நேற்று உடல் நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உறுதிமிக்க கொள்கைப் பற்றாளரான அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.