சாமானியர்கள் எந்த பொருளாதார வலிமை அரசியல் பின்புலம் இல்லாதவர்கள்தான் தவெக வில் எம் எல் ஏ அமைச்சர்கள் ஆகியுள்ளனர் எனது தொடர்ந்து ஒரு கட்டுக்கதை அவிழ்த்து விடப்படுகிறது…
ஆதவ் அர்ஜுனா ( பெரும் பணம், விசிக வின் து. பொ. செ. ஆக இருந்தவர் )
புஸ்சி ஆனந்த் ( புதுவை அரசியலில் அதிகாரத்தை ருசித்தவர் )
செங்கோட்டையன் ( முன்னாள் அமைச்சர் )
அருண்ராஜ் ( முன்னாள் ஐ ஆர் எஸ் )
நிர்மல்குமார் ( அதிமுக , பாஜக வின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் )
மரிய வில்சன் ( தனியார் கல்லூரி முதலாளி )
ஜே சி டி பிரபாகர் ( அதிமுக எம் எல் ஏ…. இப்போ சபாநாயகர் )
ரெட்டியார்பட்டி நாராயணன் ( முன்னாள் அதிமுக எம் எல் ஏ . சீட் கிடைக்காததால் கடைசி நிமிடம் தவெக வில் இணைந்து நான்குனேரி எம் எல் ஏ )
ஆர் எஸ் முருகன் ( பெரும் செல்வந்தர் , காண்டிராக்டர்.. அதிமுக வில் பயணித்து திமுக வந்து அங்கே சீட் கிடைக்காததால் கடைசி நிமிடம் தவெக சென்று இப்போ நெல்லை எம் எல் ஏ )
மிஸ்ரா… முஸ்தபா …. என்று பெரும் பட்டியலே உள்ளது….
இன்னும் எத்தனை நாட்கள் மக்களை இப்படி ஏமாற்ற திட்டம் ?
தமிழ்நாடு பாண்டிச்சேரியில் உள்ள 22 நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஐந்து ரவுண்டு மருத்துவச் சேர்க்கை முடிந்த பிறகும் இன்னும்
402 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பாமலேயே உள்ளது. அந்த இடங்களை நிரப்புவதற்கு நகைகடை,ஜவுளி கடை ,நாட்டு மருந்து விளம்பரங்களைப் போல யூடியூபர்ஸ் கூவி கூவி விளம்பரம் செய்கிறார்கள்.இலட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்காக இரவும் பகலும் வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஐந்து ரவுண்டு கவுன்சிலிங் முடிந்த பிறகும் இன்னும் 402 இடங்கள் மீதம் இருக்கின்றன. ஏனென்றால் அந்த மருத்துவ இடங்களில் ரேட் அப்படி 25 முதல் 40 வரை லட்சம் ரூபாய் வரை ஒரு வருடத்திற்கு செலவாகும். இன்னும் சீட் நிரம்பாமல் உள்ள டீம்டு யுனிவர்சிட்டி இன்னொரு ரவுண்ட் கவுன்சிலிங் வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டிலும் அவர்கள் என்ன கேட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய கல்வி கட்டணத்தை குறைக்க மாட்டார்களாம் ஆனால் எம்பிபிஎஸ் சேர்வதற்கான நீட் தேர்ச்சி மதிப்பெண் 720 க்கு 177 என்பதை இன்னும் குறைக்க வேண்டுமாம். பூக்கடைக்காரர்களிடம் ஒரு பழக்கம் உண்டு கிலோ 500 விற்றபோது எத்தனை முழம் பூ கொடுத்தார்களோ 50 ரூபாய் மல்லிகை பூ விற்கும் போதும் அதே அளவு தான் கொடுப்பார்கள் காரணம் கேட்டால் விலை அதிகமாக இருக்கும் போதும் குறைவாக இருந்த போது கொடுத்த அளவே எதிர்பார்ப்பார்கள் என்று கூறுவார்கள்.மீதமுள்ள பூக்களை கீழே கொட்டுவார்கள் ஒழிய அதிகமாக தரமாட்டார்கள். அதேபோல எம்பிபிஸ் இடங்கள் காலியாக கிடந்தாலும் பரவாயில்லை ஏழை எளிய மாணவர்களிடம் குறைந்த கட்டணத்தை பெற்று சீட் தர மாட்டோம். நாங்கள் வாங்கும் கட்டணத்தை குறைக்க மாட்டோம் அதிக கட்டணத்தை பெறுவதற்காக என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தேடிப் பிடிப்போம் இதுதான் அவர்கள் நிலைப்பாடு.
இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் ஒரு காலத்தில் எப்படி மருத்துவக் கல்லூரிகளாக இங்கு தமிழ்நாட்டில் ஆரம்பித்தார்கள் மாநில அரசின் கீழ் இயங்கும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அனுமதி பெற்று விடுகின்றார்கள் ஆனால் அனுமதியை பெற்ற பிறகு அறுபது சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்களை தமிழ்நாடு அரசு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் மாணவர்களுக்கே வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடம் இந்த அளவிற்கு பணம் பெற முடியாது.அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணத்தையே பெற முடிகிறது.(ரூபாய் ஐந்து லட்சம்)அதனால் காலப்போக்கில் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றுவதற்கு என்னென்ன சித்து வேலைகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் பார்த்து நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களாக உயர்த்திய பிறகு அவர்கள் தமிழ்நாடு அரசிற்கு கட்டுப்பட தேவையில்லை.தமிழ்நாடு அரசு மதிப்பெண் அடிப்படையில் எடுக்கும் மாணவர்களுக்கு அவர்கள் சீட் வழங்க தேவையில்லை கட்டணத்தை அவர்கள் இஷ்டம் போல வைத்துக் கொள்ளலாம் இதன் காரணமாக மிகக் குறைந்த மதிப்பெண்கள்(177/720) எடுத்த மாணவர்களிடம் 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு பெற்று எம்பிபிஎஸ் இடங்களை சிறப்பான முறையில் விற்பனை செய்கிறார்கள். இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழக மாறிவிட்டன அதற்கான தடையின்மைச் சான்றை கடந்த ஆட்சி காலத்தில் வழங்கி விட்டார்கள் அதனால் இந்த ஆட்சி வந்த பிறகு அதை தடுக்க இயலவில்லை ஆனால் இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாது என தமிழ்நாடு அரசால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு என்ற பெரிய தடை இங்கு வந்த போதும் அதை தங்களின் அயராத உழைப்பால் தமிழ்நாட்டு மாணவர்கள் உடைத்து தமிழ்நாடு மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆரம்பித்து விட்டார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் மண்ணில் பிறந்து தமிழ்நாட்டு மக்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாடு அரசை பயன்படுத்திக் கொண்டு மருத்துவக்கல்லூரிகளை ஆரம்பித்த பெரும் முதலாளிகள் தமிழ்நாடு அரசுக்கும்,தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு நம்முடைய தமிழ்நாடு அரசு விரைவில் முட்டுக்கட்டை போடும்
பல லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் என நம்புவோம்..
@CMOTamilnadu 🙏🙏
@arunraajkg 🙏
@imrajmohan 🙏
எங்க ஊரில் ஒரு மொபைல் புக்ஷாப் இருக்கிறது. 10 வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கிறது. நிறைய ஆங்கில நூல்கள்தான் இருக்கும். அங்கே தமிழ் நூல்கள் மிகவும் குறைவு.
சில நாட்கள் முன்பாக அந்தக் கடைக்கு சென்றிருந்தபோது, “எங்கிட்டே நிறைய தமிழ் புக்ஸ் இருக்கு. எடுத்துக்கறீங்களா?” என்று கேட்டேன்.
யோசித்தார். “காசுக்கு இல்லைங்க. சும்மா எடுத்துக்கங்க. வீட்டுலே இடத்தை அடைச்சிக்கிட்டிருக்குன்னு complaint பண்ணுறாங்க” என்றேன்.
“சும்மாவெல்லாம் எடுத்துக்க மாட்டேன் சார். பதிலுக்கு சில புக்ஸ் நீங்க எடுத்துக்கணும்” என்றார்.
நேற்று ஒரு சாக்குமூட்டை நிறைய புத்தகங்களை எடுத்துச் சென்றேன். எல்லாமே தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள். முன்னணிப் பதிப்பகங்கள் பதிப்பித்த அரிய நூல்கள்.
வாங்கி வைத்துக் கொண்டு, “ஆயிரம் ரூவாய்க்கு நீங்களே ஏதாவது புக்கு செலக்ட் பண்ணி எடுத்துக்கங்க சார்” என்றார்.
என் மகள் நாலைந்து ஆங்கில நாவல்களை எடுத்துக் கொண்டார்.
“880 ரூபாய்தான் வந்திருக்கு. இன்னும் நூத்தி இருபது ரூபாய்க்கு ஏதாவது புக்கு எடுத்துக்கங்க” என்றார்.
“பரவாயில்லைங்க. இன்னும் நிறைய புக்ஸ் டிஸ்போஸ் பண்ண வேண்டியிருக்கு. அப்பப்போ எடுத்துட்டு வர்றேன்” என்றேன்.
“சார்! ஒரு சின்ன விஷயம். நீங்க கொண்டு வந்திருக்கிற authors-ஐ யாருக்கும் தெரியாது. இந்த புக்கெல்லாம் விக்குமான்னே தெரியலை. அடுத்த வாட்டி கொஞ்சம் ஃபேமஸ் ரைட்டர்ஸ் புக்கு இருந்தா நல்லது” என ஒரு போடு போட்டார்.
தமிழ் சமூகவலைத்தளங்களில் கடவுளுக்கு நிகராக போற்றி சீராட்டப்படும் எழுத்தாளர்கள், சில்லறைப் புத்தக விற்பனையாளர்களுக்கு அகல் விளக்கு எழுத்தாளர்கள்தான் என்கிற பாடத்தை நேற்று கற்றுக் கொண்டேன்.
அப்ப “ஸ்டாலினுக்கு சீட் கிடையாதா” என வீரபாண்டியார் கலைஞரிடம் நேராக கேட்க முடிந்தது…
“உன் ஆளு நல்ல மூடுல இருக்கானய்யான்னு” கோ. சி மணி உதவியாளருக்கு போன் செய்து கேட்டுக்கொண்டு கலைஞர் கோ. சி மணிக்கு போன் செய்ய முடிந்தது…
எங்களுக்கு தேர்தல. வேலை எப்படி பாக்கணும்னு ,, வட நாட்டில் இருந்து வந்த சின்ன பசங்க சொல்லவேண்டிய அவசியம் இல்லனு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும்...
அதே போல இப்போதைய தலைவரை மேடையில் வைத்துகொண்டே ,,
நீங்க கொஞ்சம் மாறனும் தலைவரே ,,ஆட்சி இருக்கும்போது காவல்துறையை ரொம்ப இடம்கொடுத்து வெச்சிட்டீங்க ஆட்சி மாறனதும் அவனவன் ஜாதி பாசத்துல அந்த பக்கம் போயி நம்ம ஆளுங்களை மிரட்டுரானுங்கனு
ஜெ.அன்பழகனால்
சொல்லமுடிந்தது..
தொண்டனை திட்டிவிட்டு, அதற்காக வருந்தி திருப்பி அழைத்து கலைஞரால் மன்னிப்பு கேட்க முடிந்தது…
ஒரே மேடையில் கலைஞரின் அருகில் மன்னையால் கால் மேல் கால் போட்டு அமரமுடிந்தது…
கருத்து சுதந்திரம் இருந்தது,
பொறுப்பில் இல்லாதவனும் சக கட்சிகாரனாய் பார்க்கப்பட்டான்
கடைகோடி தொண்டனுக்கும் கருத்து சுதந்திரம் இருந்தது, விமர்சனங்கள் விரும்பப்பட்டன.
திமுகவாலேயே இனி திரும்பவே கொண்டுவரமுடியாத பொற்காலம அது
தளபதி அவர்களே உள்கட்சி ஜனநாயகம் முக்கியம்
கழக நிர்வாகத்தின் மறு சீரமைப்பின் போது இதை நினைவில் கொள்க ...எங்கள் தலைவர் தளபதி அவர்களே
அது தான் என்னை போன்ற தொண்டர்களின் எதிர்பார்ப்பும
ஒரு நண்பர் AI நல்ல AI முதல் இரண்டு வகுப்புகளுக்குப் பிறகு ஆளைக் காணவில்லை. என்னடா, நம்ம எதுவும் ஒழுங்கா சொல்லித் தராம விட்டமா என்ற கவலையில் அவரைத் தொடர்பு கொண்டேன்.
அவர் சொன்னது:
“ரவி, ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்த AI கருவிகளை நோண்டிப் பார்த்துவிட்டு ஒன்றும் சரியில்லை என்று விட்டுவிட்டேன். இப்போது உங்கள் வகுப்புகளில் கலந்து கொண்ட பிறகுதான் அதன் இன்றைய வீச்சு புரிந்தது. கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தில் ஒரு புதுத் திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு மன்றாடிப் பார்த்தோம். இப்போது AI-ன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி அதை மீண்டும் முன்வைத்தோம். அதற்கு நிறுவனத் தலைமை ஒப்புதல் அளித்ததைக் கண்டு, இத்தனை ஆண்டுகளாக முயன்றவர்கள் எல்லாம் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்கள்” என்றார்.
அவரைப் பொருத்த வரை இந்த AI வகுப்புகளில் கலந்து கொண்டதன் பயன் முதல் இரு வகுப்புகளிலேயே கிடைத்து விட்டது. அவரைப் போன்றவர்களுக்குத் தேவை ஒரு திறப்பு. ஒரு தகவல். அதைப் பிடித்துக் கொண்டு போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு அவர்களே போய் விடுவார்கள்.
கடந்த ஜூலை மாதம் தொடங்கிய AI நல்ல AI வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நவம்பர் மாத சனிக்கிழமை வகுப்புகள் நாளை, அதாவது நவம்பர் 7 இந்திய நேரம் இரவு எட்டு மணிக்குத் தொடங்குகிறது. ஞாயிறு வகுப்புகள் நவம்பர் 22 இந்திய நேரம் காலை 11 மணிக்குத் தொடங்கும்.
நிறைய பேர் AI கற்றுக் கொள்ள தங்களுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டுமா, அதிகம் படித்திருக்க வேண்டுமா, Laptop வேண்டுமா, தங்களுக்கு எல்லாம் அது புரியுமா, பயன்படுமா என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
AI கொண்டு நம் அன்றாட வாழ்க்கையின் பணிகளைச் செய்வதற்கு பணமோ, மொழியோ, படிப்போ, அறிவோ ஒரு தடையாக இருக்கவே இருக்காது.
ஒரே ஒரு தடை தான் நான் காண்கிறேன். மனத்தடை.
AI நல்ல AI வகுப்புகளில் ஒரு தாய் கலந்து கொண்ட போது, அவருடைய ஏழு வயது மகனும் அருகில் இருந்து கவனித்திருக்கிறார். தன் அம்மா வலைத்தளச் செயலிகள் செய்வதைக் கண்ட அந்தச் சிறுவனும் AI துணையுடன் online game உருவாக்கி, விளையாடி மகிழ்ந்துள்ளார்.
குழந்தைகள் யாருமே இது முடியுமா, பயனளிக்குமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. அவர்களுக்கு ஆர்வமூட்டினால் தொடர்வார்கள். தவறு செய்தாலும் இடறி விழுந்தாலும் மீண்டும் எழுந்து கூச்சப்படாமல் கற்றுக் கொள்வார்கள். இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் AI மட்டுமல்ல எதையும் கற்றுக் கொள்வார்கள்.
எப்படி இன்று எல்லோரும் கணினி, செல்பேசியை இயல்பாகப் பயன்படுத்துகிறோமோ அது போலவே AI நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும். அதற்கான நம்பிக்கையையும் மனமாற்றத்தையும் தூண்டுவதே AI நல்ல AI வகுப்புகளின் நோக்கம்.
எப்படி ஒரு திரையரங்கில் எல்லா வகுப்பினரும் அமர்ந்து ரசிக்கிறோமோ அதைப் போலவே AI கற்றலும் அமைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
AI நல்ல AI வகுப்புகளில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் தொடங்கி பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள், மாணவர்கள், தொழில் முனைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் எனப் பல்வேறு பின்னணியினர் ஒன்றாகக் கூடிக் கற்கின்றனர். இந்த வகுப்புகளில் எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய மனநிறைவும் இது தான்.
விக்கிப்பீடியா, கிண்டில், Streamyard வழி live webcast என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வரும் நுட்பங்களை நண்பர்களிடம் கொண்டு சேர்க்கும் ஆர்வத்தின் தொடர்ச்சியாகவே இந்த முன்னெடுப்பையும் பார்க்கிறேன். அந்த உற்சாகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வகுப்புகள் Google Meet மூலம் இணைய வழி வகுப்பாக நடக்கும் என்பதால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் கலந்து கொள்ளலாம். வகுப்புகள் முழுக்க தமிழிலேயே நடக்கும். ஆங்கிலம் தேவையில்லை. Laptop இருந்தால் உதவும். ஆனால், செல்பேசி இருந்தால் போதும். Coding அனுபவம் வேண்டாம்.
வாரம் ஒரு மணி நேர வகுப்பு. மொத்தம் 12 வாரங்கள். நவம்பர் மாத வகுப்புகளில் சேரும் முதல் 200 பேருக்கான கட்டணம் ரூ. 2,999 மட்டுமே. இந்த வகுப்புகளுக்குச் செலுத்தும் கட்டணம் என்பது ஒரு முறை கட்டணம் மட்டுமே.
சனி, ஞாயிறு எந்த வகுப்பில் சேர்ந்தாலும் தவற விடும் வகுப்புகளை உங்களுக்கு வசதியான நாட்களில் மாற்றி மாற்றிக் கலந்து கொள்ளலாம். வகுப்புகளில் கற்பிக்கப்படும் முக்கியக் குறிப்புகள் Learning Hub என்கிற தனி வலைத்தளம் மூலம் பகிரப்படும். WhatsApp மூலமும் என்னிடம் ஐயங்களைக் கேட்டுத் தெளியலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கும் வகுப்புகளிலும் கூடுதல் கட்டணமின்றி கலந்து கொள்ளலாம்.
அடுத்து இந்த வகுப்புகள் 2027 ஆண்டின் நடுப்பகுதியில் தான் நடத்த எண்ணியுள்ளேன். அப்போது கட்டணமும் கண்டிப்பாக உயரும்
ஆகவே, இன்றே இணைவீர்.
Joinaitribe dot com தளத்தில் கூடுதல் விவரங்கள் உள்ளன. இணைப்பு மறுமொழியில்.
திவாலிக்கு sweets and பட்டாசு குடுக்க இங்க ஒரு children welfare home க்கு போய் இருந்தேன் மொத்தம் 40 students school college படிக்கிறாங்க 10 girls மீதி எல்லாரும் boys . நான் office ல குடுத்துட்டு கிளம்பும் போது உள்ள வந்து பாருங்க மேடம் சொன்னாங்க , நான் எப்பவும் இப்படி contribution செய்தா உள்ள போய் distribute பண்றது/ பாக்குறது I don't do , என்னமோ அவங்க privacy ல intrude பன்ற மாறி இருக்கும் எனக்கு. ஆனா ரொம்ப force பண்ணாங்க எல்லாரும் டியூஷன் போய் இருக்காங்க 10 to 12 students தான் இருக்காங்க வாங்க வந்து நம்ம kitchen , library லாம் பாருங்கனு சொன்னாங்க... போய் பார்த்தேன் எல்லாரும் டீனேஜ் boys from age of 10 to 18 நான் போனதும் அப்படி ஒரு excitement எல்லா lights போட்டு..
அவங்க உடனே ஹால் ல வந்து சைலண்டா உட்காந்துடாங்க..
இப்படி நிறைய பேரு பார்க்க வருவாங்க போல அவங்க செஞ்சது ஒன்னபோல இருந்துச்சு. அதுல ஒரு பையன் சத்தமா "அக்கா சாப்பாடு போட மாட்டிங்கிறாங்க" அப்படின்னு குரல்... எனக்கு என்ன செய்யறது/சொல்றது அப்போ ஒன்னுமே புரியல...
அதுக்கு அப்பறம் நிறைய நேரம் வெளிய அந்த welfare home நடத்துறவங்க அவங்க problems எல்லாம் சொன்னாங்க...
End of this - மனச போட்டு பிசையுது அந்த குரல் , ஒரு 12 வயசு பையனோட அந்த ஆர்வமான கண்கள் , யாரோ வந்திருக்காங்க நமக்கு help கிடைக்கும்னு அந்த எதிர்பார்ப்பு.... ஒரு பக்கம் கோடி கோடியா செலவு செஞ்சு கல்யாணங்கள் இன்னொரு பக்கம் அந்த பையனோட குரல்...
இதை எழுத கூட ரொம்ப தயக்கமா இருந்துச்சு ஆனா சொல்லணும்னு தோணுச்சு. சமநிலை இல்லாத சமுதாயம் ரொம்ப அயர்ச்சி தருது..
And that boy's cry reminded me of Oliver Twist by Charles Dickens written in 1839 - இன்னமும் எதுவுமே மாறல அந்த பையனோட கண்ணு என்னால மறக்கவும் முடியல.
AI காரணமாக பெரும் பொருளாதார மாற்றங்கள் வரலாம், அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படலாம், இதனை எப்படி எதிர்கொள்வது என்று உலகெங்குமே பேசித் தான் வருகிறார்கள்.
சிலர் Universal Basic Income(UBI) தரலாம் என்கிறார்கள். அதாவது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போல! UBI தருவதெல்லாம் பகல்கனவு தான் என்பது என் நிலைப்பாடு.
AI கொடிது, ஆகவே அதை விமர்சிப்போம், தடுப்போம் என்பது ஒரு அணுகுமுறை.
அது வந்தே தீரும், அதைத் தடுக்க முடியாது, புதிய பொருளாதார உலகுக்கு நம்மை எப்படித் தயார்படுத்திக் கொள்வது என்பது இன்னொரு அணுகுமுறை. நான் இரண்டாவது வகை.
AI ஒரு கொடிய விலங்கு என அஞ்சி பாதுகாப்பான பகுதிகளை நோக்கி ஓடவும் முடியாது. அதை அடக்கவும் முடியாது. நம்மால் முடிந்தது அதில் சவாரி செய்யக் கற்றுக் கொள்வது தான்.
இது சாதாரண news card கிடையாது. Gladiator படத்தில் வரும் இந்த மன்னனின் பெயர் காமோடஸ். தந்தையை கொன்று தகுதி இல்லாமல் ஆட்சிக்கு வரும், இவனுடைய ஆட்சியில் கடும் வறுமை, பஞ்சம், நோய் பரவும். பொருளாதாரம் மிக மோசமாக மாறும். இதனால் தன்னுடைய ஆட்சிக்கு எதிராக மக்கள் திரும்பி விடக்கூடாது என்பதற்காக, அவர்களின் கவனத்தை திசை திருப்ப, ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் போட்டியை, ரோமின் கொலோசியம் மைதானத்தில், 150 நாட்கள் நடத்துவான். அதில் மூர்க்கமாக தாக்கி கொள்ளும் சண்டையை பார்த்து, மக்கள் இவன் ஆட்சியில் இருக்கும் பிரச்சனைகளை மறந்துவிடுவார்கள்.
இதை அப்படியே விஜயின் இந்த அறிவிப்புக்கு பொறுத்தியுள்ளது @sunnewstamil
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு மோசம், சிறுமிகள் மாயம், போதை பொருள் தயாரிப்பு கலாச்சாரம், பொருளாதார வீழ்ச்சி என்று மோசமான ஆட்சியை மக்களிடம் திசை திருப்ப, காமோடஸ் எப்படி மைதான சண்டை அறிவிப்பை செய்வானோ, அதே போல விஜய் சினிமா காட்சி அறிவிப்பை செய்துள்ளார்.
நுட்பமான பார்வை. வாழ்த்துகள் 💐
யாசிர்
நடிகை அசின் தமிழ் சினிமாவில் ஒரு 10, 15 படங்கள்தான் நடித்திருப்பார். நம்ம க்யூட் சி.எம் கூட ஒரு 2, 3 படங்களில் நடித்திருப்பார். என்னமோ சொல்லுவாங்களே… “Never disappear like before” அந்த மாதிரி …
கடந்த ஆட்சியில், முடியை ஒழுங்காக வெட்டிக்கொண்டு வராத மாணவர்களுக்கு, ஆசிரியர் ஒருவர் முடிதிருத்தும் தொழிலாளியைப் பள்ளிக்கே வரவழைத்து மாணவர்களுக்கு முடிவெட்டியபோது, அன்றைக்கு தமிழ் சந்து முழுவதும் ஒரே ரணகளம்!
மாணவர்களின் தன்மானம், உரிமை, குழந்தைகள் மீதான உளவியல் தாக்கம் என சமூகநீதிப் போராளிகள் முதல் மனித உரிமைக் காவலர்கள் வரை வரிசைகட்டி வந்து வகுப்பெடுத்தார்கள்.
ஆனால், இன்றைக்கு ஒரு அமைச்சர், “தப்புத் தப்பா முடி வெட்டிட்டு வந்தா மொத்தமா மொட்டை அடிச்சிருங்க” என்று பகிரங்கமாகச் சொல்கிறார்.
அசின் போலவே, அந்தக் காலத்து புரட்சியாளர்களும் காணாமல் போய்விட்டார்களோ?
தமிழ்நாட்டில் இந்த புதிய உளவியலை பார்க்க முடிகின்றது!
அதுதான் எங்களுக்கு இலவசமே வேண்டாம் நாங்கள் பணம் கூட செலுத்த தயாராக இருக்கிறோம் என்று பொதுமக்களை அவர்களின் வாயால இது சொல்ல வைக்கும் சம்பவங்கள்!
200 யூனிட் மின்சாரம் இலவசமாக வேண்டாம் ஆனால் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்
எங்களுக்கு இலவச பேருந்து பயணம் வேண்டாம் தடையில்லாத பேருந்து பயணம் வேண்டும்
எங்களுக்கு மாத உதவி தொகை வேண்டாம், விலைவாசியை குறையுங்கள்
எங்களுக்கு ரேஷனில் பாசுமதி தரத்தில் இலவச அரிசி வேண்டாம் இருக்கின்ற அரிசியின் விலையை குறையுங்கள்
இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!
தமிழ்நாடு எப்போதுமே எக்கனாமிக்கல் வெல்ஃபேர் ஸ்டேட் கிடையாது மாறாக எக்கனாமிக்கல் பீப்பிள் வெல்ஃபேர் ஸ்டேட்
அதாவது நமக்கு கொடுக்கப்பட்ட இலவசங்கள் எல்லாம் மக்களின் வாழ்க்கை தரத்தை சமநிலையை நோக்கி உந்தித் தள்ளிய முக்கிய காரணிகள் அதனால் தான் Human Index-ல் அனைத்து தளங்களிலும் தமிழ்நாடு முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மாநிலமாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது
உதாரணத்திற்கு இலவச தொலைக்காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள் பக்கத்து வீட்டில் ஓடும் தொலைக்காட்சியை ஜன்னல் வழியாக தொத்திக்கொண்டு பார்த்த என் உட்பட எத்தனையோ குழந்தைகளுக்கு அது ஒரு சுதந்திரத்தை வழங்கியது. இலவச பஸ் பாஸ் இல்லையென்றால் என்னால எல்லாம் பத்தாம் வகுப்பு தாண்டி இருக்க முடியாது!
இது போன்ற விஷயங்கள் எலைட்டுகளுக்கு புரியாது.
ஆனால் அத்தகைய இலவசங்களையே வேண்டாம் என்று மக்கள் வாயாலேயே சொல்ல வைப்பது என்பது நுணுக்கமாக அணுகப்பட வேண்டிய உளவியல்!
அடிப்படைத் தேவைகளை தாண்டி அடுத்த கட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் நகர்ந்ததற்கு முக்கியமான காரணம் இத்தகைய திட்டங்கள் காரணம் அந்தந்த காலகட்டத்திற்கு தேவைப்படும் அடிப்படைத் தேவைகளை அரசே பார்த்துக் கொள்ளும் என்பதால் அந்த நகர்வை மக்களால் தைரியமாக செய்ய முடிந்தது!
தற்பொழுது இது உடைக்கப்படுகிறதோ அதுவும் மக்களாலேயே உடைக்கப்படுகிறதோ அல்லது உடைக்க வைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது
அன்பில் மகேஷ் கைதுக்கான புகாரில் என்ன இருக்கு?
அனுமதி வாங்கி தரேன் என்று 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியும் அரசகுமார் பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல.
திரும்ப சொல்லு.
பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல.
அரசகுமார் செய்து தந்திருந்தால், செய்து கொடுத்ததன் அடிப்படையில் அன்பில் தவறு செய்தவர். ஆனா இங்கே செய்து தரவில்லை என்பது தான் புகார். பணத்தை வாங்கிய அரசகுமார் தன் பெயரில், உறவினர் பெயரில் சொத்தாக வாங்கிவிட்டார் என்பது தான் FIR ல் இருக்கு. அப்புறம் எப்படி அன்பில் குற்றவாளி ஆவார்?
புகார் கொடுத்தது யாரு பள்ளிகளா?
இல்லை. அரசகுமார் தலைவராக இருக்கும் அதே சங்கத்தின் செயலாளர் இளங்கோவன் தான். அவர் பாதிக்கப்பட்டவரும் இல்ல. இது இரண்டு நிர்வாகிகளுக்கு இடையிலான சிவில் வழக்கு.
அப்போ அன்பில் வழக்கு என்ன ஆகும்?
அரசகுமாருக்கு என்ன ஆனது? ஜாமினில் வந்துட்டாரு. Main குற்றவாளியே ஜாமீனில் வந்துட்டாரு என்றால் அரசகுமாருகே விஜய் அரசால் proof காட்ட முடியல என்று அர்த்தம். அரசக்குமாருகே முடியல என்றால் சம்பந்தமே இல்லாத அன்பில் மகேஷ்க்கு எப்படி proof காட்ட முடியும்?
அப்போ என்ன நடக்கும்?
அரசகுமார் to அன்பில் link பண்ண proof இல்லை என்பதால், யாராவது அன்பில் மீது புகார் கொடுக்க வாங்க வாங்க என்று போலீசை விட்டு நிச்சயம் விஜய் கெஞ்சுவார். Mark my words அன்பில் மீது பள்ளிகள் புகார் கொடுக்க முன்வரலாம் என்ற அறிவிப்பு வரும். நான் தான் லஞ்சம் கொடுத்தேன் என்று எந்த பள்ளியும் வராது. வந்தால் அவர்களும் சிறைக்கு போகணும். So பாஜக பேச்சை கேட்டு விஜய் போட்ட பொய் வழக்கு உடையும்.
நந்தகுமார் என்பவரை லஞ்சம் என்று அன்பிலுக்கு எதிராக பேச வைத்துவிட்டு, அதே நந்தகுமாரிடம் வாக்குமூலம் வாங்காமல் அவருக்கு personal வேலை இருக்கு அதனால அவரை விசாரிக்கல என்று கோர்ட்டில் பின்வாங்கிய அரசு தான் தவெக அரசு. அப்போ narrative காக இவர்கள் உருவாக்கியது, இப்போ இவர்களுக்கு எதிராகவே கோர்ட்டில் திரும்பும்.
- யாசிர்
நாம்தமிழர் கார்த்திகா இதுக்கு முன்னாடி தலைவர விமர்சிச்சு திட்டுன வீடியோவ போட்டு தலைவருக்கு நாகரீகம் அதிகம்னு நம்ம ஆளுகளும்.,இந்த ஆளுக்கு ரோசம் இல்லயானு தவெக தற்குறிகளும் கிகிபிகி பண்ணிட்டு இருக்கீங்க
இரண்டு பேருக்குமே என் பதில்.. அது தான் அவர் குணம்..
நாளைக்கே விஜய தூக்கி போட்டு பாஜக மிதிச்சாலும் அப்பவும் ஏ ஒன்றிய ஏகாதிபத்திய அரசேனு அறிக்கை தான் விடுவாரு
14 வயசுல இளைஞரணி ஆரம்பிச்சு அரசியல்னு வந்த அப்பறம் அந்த மனுசன் ஜனநாயகம்,அடக்குமுறைக்கு எதிரான அரசியல்னு பாத்து பாத்து அப்படியே வாழ்ந்நுட்டாரு..
ரங்கராஜ் பாண்டே வீட்டுக்கு துக்கம் விசாரிக்க போன மனுசன்கிட்ட வேற என்ன எதிர்பாக்குறீங்கனு தான் புரியல
அவரலாம் மாத்த முடியாது.. மாத்தவும் தேவையில்ல
கார்த்திகா திட்டுன வீடியோ வெளிய பரவ பரவ தலைவர் மீது தான் நல்ல அபிப்ராயம் வரும்
எப்படி திட்டிருந்நாலும் மனுசன பாரு.. அந்த பொண்ண கைது பண்ணதும் அறிக்கை விட்டாரு பாருனு தான் பேசுவாங்க..
சங்கு சுட்டாலும் வெள்ளயா தான் இருக்கும்.. அப்படியான மனுசன் தான் எங்க தலைவரும்.🖤♥️
அழுகிய பிணங்களை தூக்கி சுமந்த காரணத்தினால் எங்கள் மீது வெறுப்பு வந்து வாக்குகள் சரிந்தது
இந்த தவறை இனி செய்யமாட்டோம்
- அண்ணா அறிவாலயம்
கலைஞரின் அனல் பறக்கும் அறிக்கைகள் இனி தீயாக வரும் 🖤❤
உடன்பிறப்பே உயிர் கொள் 👌🔥🔥
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
MGR வந்தார், சென்றார்... திமுக நிலைத்து நின்றது.
ஜெயலலிதா வந்தார், சென்றார்... திமுக நிலைத்து நின்றது.
இப்போது விஜய் வந்திருக்கிறார், அவரும் சென்றுவிடுவார் என்று தெரியும்... அதற்குள் திமுக'வின் கதைய முடித்தாக வேண்டும்.
இவர்களின் கனவு திமுக'வின் தேர்தல் தோல்வியில்ல, திமுக'வின் நிரந்தர அழிவு.
உங்கள் அப்பனுக்கு அப்பன் வந்தாலும், உங்கள் நூல், சனாதன, சங்கி கூட்டத்திற்கு என்றும் திமுக ஒரு அசைக்க முடியாத சிம்ம சொப்பனம் தான்.
திமுக போராடும், திமுக வெல்லும்.🖤❤️
TVK's best performance - 35%
DMK Base - 30%
2- 5% Anti-incumbency can bring down this government without any alliance.
அதிமுக செல்வாக்கு உள்ள இரண்டு தொகுதிகள்
போன முறை ஓடுகாலி கூட்டணியை வைத்தும் ஒரு இடத்தில் மூன்றாவது இடம்
விஜய் இரண்டு நாட்கள் தெரு தெருவா அலைஞ்சிருக்கார்
கூட்டணி இல்ல , செல்வாக்கு உள்ள தொகுதி இல்ல டெபாசிட் வாங்காது திமுக சொன்னாங்க
தனிச்சி இரண்டாவது இடம் தனி வாக்குவங்கி
People still loves you DMK - Dravida Munnetra Kazhagam ❤️