திமுக இனி எந்த காலத்திலும் நம்பிக்கை துரோகிகளை கூட்டணி கட்சியில் சேர்த்து விடாதீர்கள்.குறிப்பாக காங்கிரஸ்,விசிக,மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கம்யூனிஸ்ட்
வெற்றியோ தோல்வியோ கழக உடன்பிறப்புகளை நம்பி மட்டும் களத்துல இறங்குங்க!
இதுக்கு ஆதரவு கொடுக்குற தோழர்கள் இந்த பதிவை RT 🔁 பண்ணுங்க..
2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அரியணையில் அமரும். மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராவார் என உறுதியாக நம்புகிறவர்கள் மட்டும் 🔁RT பண்ணுங்க. @DMKITwing
எது நடந்தாலும் பீஜகவ உள்ளவிடக் கூடாதுன்னும் எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் தமிழ்நாட்டுல திமுகவ ஆதரிக்கத்தான் வேணும்னும் ஏன் சொல்றோம் தெரியுமா -
போன வருஷம் ஜிஎஸ்டி வரி குறித்து நான் போட்ட வீடியோவ பார்த்துட்டு ரெண்டு வகையான ரியாக்ஷன் வந்தது. ஒண்ணு, நான் 200 ரூ வாங்குற உபின்னு. (கொடுத்தா செலவுக்கு ஆகும், அது வேற விஷயம்). ரெண்டு, பார்த்து இருந்துக்கோங்க, சங்கிங்க கேவலமா தாக்குதல் செய்யக்கூட தயங்க மாட்டாங்கன்னு. அதுவும் நடந்தது. பீஜக கிட்ட காசு வாங்குற ரெண்டு சேனல் பேட்டி கேட்டு வந்தாங்க, நான் சுதாரித்துக்கொண்டு தவிர்த்தேன் (சுதாரித்துன்னு சொல்றதவிட என்னோட சோம்பேறித்தனத்தால இப்போ அப்போன்னு அதுவே அவாயிட் ஆயிடுச்சு).
இப்போ நான் போட்ட மாநகராட்சி மற்றும் மிக்ஜாம் பத்தின ரெண்டு வீடியோஸயும் கண்டிப்பா ஆளும் கட்சியான திமுகல பார்த்திருப்பாங்க/பார்த்திருக்காங்க. அதுக்கு வந்த ரியாக்ஷன் - நான் ரெட் ஜயண்ட் ப்ரொடக்ஷன்ல கரண்ட்ல பண்ணிட்டிருக்குற படத்தோட இந்த மாதத்திற்கான டேட்ஸ் வந்தது. அவ்வளவே. (திமுகக்கு சொம்படிச்சுத்தான் படத்துல நடிக்கிறியான்னா, அடேய், அவங்க தயாரிச்ச ஆரம்பகால படமான நண்பேண்டாலயும் நான் நடிச்சிருக்கேன். அது ஒரு பக்கம் இருக்க, என் கட்சித்தலைவர் நடத்துற பிக் பாஸுக்கு கோடி ரூபா கொடுத்தாலும் போக மாட்டேன்னும் பகிரங்கமா சொல்லியிருக்கேன்.)
பேச்சு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், விமர்சன சுதந்திரம், தனிமனித free will, கொள்கை முரணை பகுத்தறிந்து விவாதிப்பது இதெல்லாம் திமுகவோட அடித்தள கட்டமைப்புல இருக்கு. சமூக நீதி பெண் உரிமைன்னு உள்ள இருக்குற தொண்டனுக்கும் ஒரு basic awareness இருக்கு. ஆனா பீஜக மதத்தை வெச்சு மூளைச் சலவை செய்யுற பட்டறையில உருவானது. மூளையைக்கழட்டி வெச்சுட்டு பாரம்பரியமா சொல்லப்பட்ட மதக் கதைகளையும் நம்பிக்கைகளையும் (லாஜிக்கே இல்லனாலும்) collective consciousக்குள்ள புகுத்த. பரப்ப நினைக்குற, மனிதனுடைய free willக்கு எதிரான இடத்துலேர்ந்து வர்ற ஒரு ideology கொண்டது. அதுல பேச்சுக்கோ கற்பனைக்கோ நையாண்டிக்கோ சிந்தனைக்கோ கவிதைக்கோ கனவுகளுக்கோ கொள்கை முரணுக்கோ experiment செய்வதற்கோ இடமில்ல. போட்ட கோட்டில் மக்கள் நடப்பதும் சரியாக நேர்கோட்டில் நடப்பவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் வழங்கப்படுவதும்தான் autocracy bordering on fascism உள்ள நாடுகளின் போக்கு. அங்கு மனிதர்கள் economyக்கு பயன்படும் கருவிகளே, எந்திரங்களே. அதுக்குன்னு திமுக ஒண்ணுதான் தீர்வுன்னு சொல்லல. பீஜக எப்பவும் தீர்வு இல்ல, in fact, அது தீர்வே இல்ல, தலவலின்னு சொல்றேன்.
திமுக ஐடி விங்ல நான் பீஜகல சேர்ந்துட்டதா சொல்றாங்களாம். பீஜகல நான் திமுகக்கு ஆதரவுன்னு ரொம்பநாளா ஓடிட்டிருக்கு.
நாராயண.. நாராயண…
#maiam #மய்யம்
@ikamalhaasan