`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'
காஞ்சிபுரம் நெசவாளர்கள் உலகைத் தங்கள் கலையால் ஈர்த்தவர்கள். ஜி.எஸ்.டி, கொரானா என அடுத்தடுத்து விழுந்த அடிகளால் அவர்கள் வாழ்வு நசிந்துவிட்டது. உரிய நிவாரணமும், தொழில் சிறக்க ஊக்கமும் உடனே அளிக்கப்பட வேண்டும். #சீரமைப்போம்_தமிழகத்தை
பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்தி அடிப்படைவாதம் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாகத் தமிழகத்தை மாற்றிய பெரியாரின் நினைவுகளை அசை போடுகிறேன். பெரியார் அன்றும் இன்றும் என்றும் தேவையாக இருக்கிறார்.