சிறுமியை அமைச்சர் அநாகரிகமாக தொட்டது?தவறான புரிதல்
அமைச்சர் பவுடர் நுணுக்கியது
-தவறான புரிதல்
மாணவர் அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்பதாக அமைச்சர் சொன்னது?
தவறான புரிதல்.
எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ளும் இந்த மக்களை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் படும் பாடிருக்கே..பாவத்த.
பள்ளிகளில் மாணவர்களுக்கு அவர்களுடைய ஜாதி விவரங்களைக் கொண்ட ID card எனப்படும் அடையாள அட்டை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் மற்ற தோழர்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள வன்னியரசு உள்ளிட்டோர் என்ன சொல்லப் போகிறார்கள்?
(ஜாதி சான்றிதழ் வழங்கும் பொழுது இது வழங்கினால் என்ன தவறு என யாரும் வந்து பூட்டை ஆட்டாதீர்கள்! இட ஒதுக்கீடு பெறவும் சமநிலையை பெறவும் தற்காலிக கருவியாக இருப்பது சாதி சான்றிதழ். சக மாணவனின் சாதி சான்றிதழை யாரும் போய் தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள் ஆனால் தினம்தோறும் எடுத்து வரும் அடையாள அட்டையில் சாதி குறிப்பிடப்பட்டால் அது எவ்வளவு பெரிய பிளவு சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத நபர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க மாட்டேன்)
இந்தாண்டு தவெகவின் கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெறுமா?
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், முதன்மை இடங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் பலர் இது குறித்து கேட்கிறார்கள். தவெக நிர்வாகிகளிடமும் இதுகுறித்த தகவல் இல்லை, இதுவரை தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளை போல இம்முறையும் விழா நடக்கும், முதல்வர் விஜயை நேரில் சந்திக்கலாம என்று மாணவர்கள் பெரும் எதிர்பார்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர். @TVKVijayHQ
விஜய், குழந்தைங்களை மையப்படுத்தி ஓட்டு கேட்டது, மொரட்டு back fire ஆகி இருக்கு.
பக்கத்துல 6வது படிக்கிற பையன், என் மேல சத்தியமா விஜய்க்கு ஒட்டு போடணும்னு அவங்க அம்மாகிட்ட அடம் பிடிக்க
அடி வெளுத்துடாங்க. கூடவே விஜய்க்கு அரச்சனை வேற 🤣.
இன்னிக்கி வீட்டுல இருக்க எல்லா குட்டி குஞ்சன்ஸ்க்கும் மண்டகபடி தான் போல .. 🤣
#NoVoteForVijay
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்த அவர்கள் அனைவரும் எழுந்து நின்று விதவிதமான சைகைகள் செய்ய அதை அப்படியே விஜய் அவர்கள் திருப்பி செய்து வருகிறார்
ஒவ்வொரு வேட்பாளர்களும் தனித்தனியாக ரீல்ஸாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்!
Big breaking
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்
இதை பயன்படுத்தி வாஷிங் மெஷின் டிவி பிரிட்ஜ் மிக்ஸி மைக்ரோவேவ் அவன் மற்றும் மின்னடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளவும். ஏற்கனவே இருக்கிறது என்றால் பழைய பொருள்களுக்கு மாற்றாகவும் பெற்றுக்கொள்ள இந்த 8000 ரூபாயை பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக அதிரடி தேர்தல் வாக்குறுதி
2021-ல் குடும்பத்தலைவிகளுக்கு ஊதியம் என்ற சிந்தனையை விதைத்தது மக்கள் நீதி மய்யம், அதை உரிமைத்தொகை ஆக்கி செயல்படுத்தியது திமுக, அதை வெவ்வேறு பெயர்களில் ஆதரித்து தங்கள் கட்சியின் 2026 வாக்குறுதி பட்டியலிலும் இடம்பெறச்செய்துள்ளன அதிமுக & தவெக. ஒரு நல்ல சிந்தனை எங்கிருந்து வேண்டுமானலும் வரலாம்,எதிரணியில் இருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கான சான்று இது. மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மனமுண்டு என்பார்கள்.அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல வாக்குறுதிகள், யார் ஆட்சி அமைத்தாலும் செயல்படுத்த வேண்டிய சிந்தனைகள். ஒரு கட்சி மக்களை ,வாக்காளர்களை எந்தளவிற்கு மதிக்கிறது,சீரியஸாக எடுத்துக்கொள்கிறது என்பதை தேர்தல் வாக்குறுதிகளில் புரிந்துகொள்ளலாம், நாம் தமிழரின் தேர்தல் அறிக்கை உறுதியாக மக்களை மதித்து எழுத்தப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதே நேரம் சில வாக்குறுதிகளில் கேள்வியும், மாற்றுக்கருத்துக்களும் இருப்பதை மறுக்க முடியாது!
விருதுநகர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டு மகப்பேறு இறப்புகள் நடக்காத ஆண்டாக இருந்தது.
Zero Mortality rate என்பதை அப்போது achieve செய்தார்கள்.
அதற்காக அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த முனைவர் @jeyaseelan_vp அவர்கள் மருத்துவர்கள் அனைவரையும் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் கொண்ட வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து இருந்தார். எல்லா குழுக்களிலும் அவர் இருந்து ஃபாலோ அப் செய்து கொண்டே இருந்தார்.
மொபைல் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் High risk cases கேட்டகிரியில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்கள்.
பல பிரசவங்களில், சிக்கலாக பிரசவம் இருக்கும் பட்சத்தில் முதலில் சிறிய மருத்துவமனையில் பார்த்துவிட்டு, அதன் பின்னர் அதற்கடுத்த உயர் மருத்துவமனைக்கு மாற்றும்போது ஏற்படும் கால தாமதமே மகப்பேறு கால இறப்பிற்கு பல இடங்களில் காரணமாக இருந்தது தெரியவந்தது. அதைத் தவிர்ப்பதற்காக,
மாவட்ட ஆட்சியரின் அறைக்கு அருகிலேயே சிறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. அதில் மாவட்டத்தில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் போன்ற சார்பு சேவைகள், கர்ப்பிணி பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு பிரசவத்தையும் கண்காணித்தார்கள். இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேர செயல்பாட்டில் இருந்தது.
இதன் மூலம் சிக்கலான பிரசவம் எனில் உடனடியாக எல்லோரும் இணைந்து நடவடிக்கை எடுக்க முடிந்தது. இதனாலேயே அந்த ஆண்டில் எந்த மகப்பேறு இறப்பும் நடைபெறாமல் காக்க முடிந்தது.
அந்த ஆண்டில் பெரிய மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு வாரத்தில் முன்னதாகவே அந்த வாரத்தில் குழந்தை பிறப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அத்தனை பேரையும் அழைத்து விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள்.
விருதுநகர் மாவட்டம் நிறைய கிராமங்கள் கொண்ட மாவட்டம். பெரும் புயல் மழை மழைக்காலங்களில் சாலை துண்டிக்கப்பட்டு கூட எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, அத்தனை பேரையும் முன்னதாகவே அழைத்து வந்து கண்காணித்தார்கள்.
இப்படி தொடர்ச்சியான முயற்சிகளும் அதற்கான பாலோ அப்களும் இருந்ததால் பிரசவத்தின் போது எந்த ஒரு இறப்பும் ஏற்படாமல் மக்களை காத்தார்கள்.
கடையில் பணி புரிபவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மிகக் குறைவு.
அப்படி மிகக்குறைந்த சம்பளத்திற்கு கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு motivation வராது.
கடைக்காரர்களும் தங்கள் லாபம் ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு, தூய்மை பணியாளர் வைத்துக் கொள்வதில்லை.
எல்லா வேலையையும், குறைந்த சம்பளத்திற்கு இருக்கும் சேல்ஸ்மேன்களே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அப்படியான ஒரு சூழல் இருக்கும் பொழுது, பணியாளர்கள் எனக்கென்ன என்றுதான் இருப்பார்கள்.
உரிமையாளருக்கு லாபம் வேண்டுமெனில் அவர்தான் கஸ்டமர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சிஸ்டம் கொண்டு வர வேண்டும்.
ஒரு மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களிடம் இருக்கும் ப்ரொபஷனலிசத்தை 6000- 7000 சம்பளம் வாங்குபவர்கள் இடம் எதிர்பார்க்கக் கூடாது. நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கும் சேல்ஸ்மேன்களுக்கு சட்டங்கள் போட்டும் கூட இன்றும் யாரும் உட்கார ஸ்டூல் கொடுப்பதில்லை.
இந்தியாவில் எல்லோருமே ப்ரொபஷனல் ஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் சரியான விகிதத்தில் சம்பளம் கொடுக்கப்படுகிறதா என்பதைப் பற்றி யாரும் பேசத் துணிவதில்லை.
மதுரையில் 10 ஆயிரம் 15 ஆயிரத்திற்கு வேலை பார்ப்பவர்களே மொத்த மக்கள் தொகையில் முப்பது சதவீதத்திற்கு மேல் இருப்பார்கள். இந்த காலத்தில் சாதாரணமாக ஒரு திரைப்படத்திற்கு குடும்பம் சென்றாலே ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது.
இப்படியாப்பட்ட சூழ்நிலையில் எப்படி அவர்கள் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்?
உரிமையாளர்கள் எல்லா லாபத்தையும் தாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதன் சிக்கல் இது.