அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் ��ிருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#Onam
@AIADMKOfficial
அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளில், அவரது போதனைப்படி
அன்பு பெருகவும், அமைதி தவழவும்,
சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போ��் எனக் கூறி, உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'மீலாதுன் நபி' வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial
#miladunnabiصلى
பழனி தண்��ாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததை கண்டித்தும், அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காத பொய்க்கால் குதிரை அரசான தவெக அரசை கண்டித்தும், மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கினங்க பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய போது ...
#palani #palanimurugantemple
தவெக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். 3 வருட கட்சிக்கே இவ்வளவு திமிர் இருந்தால் நாங்கள் 54 வருட ஆலமரம்.
நாங்கள் தீர்ந்து போய்விடுவோமா? திமுகவின் அடக்குமுறையை பார்த்தவர்கள், எதிர்த்து வந்தவர்கள் நாங்கள்.
கடைசி தொண்டன் இருக்கும்வரை அஇஅதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
-கழக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி @ValarmathiADMK அவர்கள்.
மாண���புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு திருவள்ள���ர் கிழக்கு மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
வாழத் தெரியாதவர்கள் வாழும் வரைக்கும்…
ஆளத் தெரியாதவர்கள் ஆள்வார்கள்.💯
நன்றாக யோசித்துப் பாருங்கள்…
இந்தப் பழமொழி யாருக்கு பொருந்துகிறது என்று புரியும்🫵🏻
#Young_ADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
தமிழகத்தில் பொய்க்கால் குதிரை அரசு, குதிரை வேகத்தில் நடத்தி வரும் கு��ிரை பேரம் தொடர்பாகவும்; ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி அமைச்சரவைக் கூட்டத்தில் தவெக ஆதரவாளர்கள் கலந்துகொண்டது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மேதகு தமிழக பொறுப்பு ஆளுநரிடம், கழகச் சட்டமன்றக் குழு கொறடா திரு.அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களும், கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்களும் அஇஅதிமுக சார்பில் புகார் மனு அளித்தனர்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை கிழக்கு மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்கள் எந்த மாய வலையிலும் சிக்கமாட்டார்கள்!!!
சென்னை வானகரத்தில் நடைபெற்ற மாற்று கட்சியினர் இணையும் விழாவில் முன்னாள் அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்களை வாழ்த்தியும், வந்தவர்களை வரவேற்றும் பேசினார் திரு.ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், புரட்சித்தலைவரே உதயசூரியன் சின்னத்தில் தான் முதலில் தேர்தலில் நின்றார் என்றும், எனக்கு தலைவர் கலைஞர் தான் என்று சட்டமன்றத்திலேயே அவர் சொன்னதாகவும் சொன்னார்.
முதலில், திரு.ஸ்டாலின் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். புரட்சித்தலைவர் பயணித்த திமுக, அண்ணாவின் திமுக. அவர் திமுக வில் இருந்ததால் தான் திரு.மு.கருணாநிதி முதல்வரானார் என்பது வரலாறு. அதற்கு நன்றி கூறி அவரே தன் கைப்பட ஒரு கடிதம் எ��ுதியதும் வரலாறு.
அண்ணாவின் மறைவுக்கு பின் தலைவர் ஏன் அதிமுக - வை தொடங்கினார் என்பதும், 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவிற்கும் திரு.மு.கருணாநிதி அவர்களுக்கும் தோல்வியை பரிசளித்தார் என்பதை நாடும் அறியும் திரு.ஸ்டாலினும் அறிவார்.
இரண்டாவது எதிரியே ஆனாலும் மதிக்கும் பண்பு கொண்ட புரட்சித்தலைவர், சட்டமன்றத்தில் பேசியது மாண்பின் அடிப்படையிலயே தவிர வேறொன்றும் இல்லை. அதே சட்டமன்றத்தில் புரட்சித்தலைவர் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்பட்டார் என்பது வரலாறு.
சமீப காலமாக, திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் அதிமுக தலைவர்களை புகழ்ந்து பேசுவதும், தொண்டர்களின் மீது அக்கறை காட்டுவதும் தொடர்ந்து நடக்கிறது.
ஆனால், இந்த ஆசை வார்த்தைகளும், குதிரை பேரங்களும் இருபெரும் தெய்வங்களின் உண்மையான தொண்டர்களிடம் எடுபடாது.