மக்களுக்கு வேண்டுமானால் சாதரணமாக இருக்கலாம்.. ஆனால் அரசியல் தலைவர்கள் அமைதி காக்கலாமா??
இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகியை, செக்கிழுத்த செம்மலை, கப்பலோட்டிய தமிழனை இப்படி அவமானப்படுத்தி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை உருவாக்கலாமா??
கலைஞர் அவர்களையோ, முரசொலி மாறன் அவர்களையோ இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இந்த மாதிரி ஸ்கிரிப்ட் எழுதுங்கள் பார்க்கலாம்.. தமிழர்கள் என்றால் அவ்வளவு கேவலமா???
எப்பேர் பட்ட மாமனிதன் , அவரு கால் தூசிக்கு வருவீர்களா ? இன்னைக்கி உக்கார்ந்துக்கிட்டு இப்படி சுதந்திரமா நக்கலடிக்க முடியுதுன்னா அன்னைக்கு அவர்கள் பட்ட அவமானங்களும் கஷ்டங்களும் காரணம் , கடும் கண்டனங்கள்
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம்பிள்ளை அவர்களை இழிவு படுத்திய SUN NETWORK மன்னிப்பு கேட்கவேண்டும்.
இல்லையென்றால் தமிழர்கள் அனைவரும் Sun network ஐ புறக்கணிப்போம்