நேற்று Behindwoods சேனலில் வந்த செய்தியை குறித்து விரிவாக ஒரு பதிவு எழுதினேன்!
“தவெகவில் இணைந்த திமுக முக்கிய நிர்வாகி” என்ற தலைப்பில் வந்த செய்தி தான் அது! தவெக மாவட்ட செயலாளர் கூறியதாக Behindwoods வெளியிட்ட அந்த செய்தியில் திமுக முக்கிய பிரமுகராக சொல்ப்பட்டிருப்பது “திமுக முன்னாள் கவுன்சிலரின் மகன்/மருமகள்” என! அந்த செய்தியின் அடிப்படையில் அது விளம்பர வெளிச்சத்திற்காக திமுகவை இழுத்து சொல்லப்பட்ட செய்தி என! அந்த நபர் முக்கிய நிர்வாகியாக இருக்க வாய்ப்பில்லை என!
இன்று அந்த செய்தியே ஒரு பொய்யாக கட்டமைக்கப்பட்ட செய்தி என ஆடியோவுடன் வெளிவந்திருக்கிறது! அந்த முன்னாள் கவுன்சிலரும் திமுக அல்ல, அதிமுக என்று!
தவெகவின் அந்த பொய்யான செய்தியில், நாம் எப்போதும் கூறும் ஒரு உண்மைய நிரூபிக்கப்பட்டிருகிறது! அது என்னவெனில்
திமுகவை இழுக்காமல் இங்கு அரசியல் செய்ய முடியாது என்பதும், அதிமுக ஒரு செத்த பாம்பாகி விட்டது எனபதுமே!
அன்புள்ள தவெக தம்பிகளுக்கு!
கட்சியை வளர்க்க களத்திற்கு சென்று மக்கறை சந்திக்கவும், இப்படி பொய் செய்தியை பரப்புவதால் ஒரு பயனும் இல்லை என்பதை உணரவும்!
நடிகை மதிவந்தி ராணுவ வீரர் குறித்த படத்தில் “அவர் தங்களது பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனக் காட்டவில்லை” எனக் கொதித்து இருக்கிறார். அவர் கோவம் நியாயமானதே! வரலாற்றை மாற்றுவது தவறுதான். அவரது நியாயமான கோவத்தை நான் ஆதரிக்கிறேன்.
அதே நேரத்தில் இந்த இடத்தில் உங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வி கேக்க விரும்புகிறேன். கார்கில் போரில் இறந்த தமிழக வீரர்களின் பெயர்களைக் கூறுங்கள்?
உங்கள் அத்தனை பேருக்கும் மேஜர்.சரவணன் என்ற பெயர் நினைவில் வந்து இருக்கும்!!
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமிய வீரர்களும் அதே பாக்கிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் வீர மரணம் அடைந்தார்களே!!! உங்கள் யாருக்காவது அந்த இருவரின் பெயரோ அல்லது இருவரில் ஒரே ஒருவரின் பெயரோ நினைவில் உள்ளதா? இல்லையே! ஏன்!!??
கார்கில் போர் காலத்தில் இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லை. இந்தியாவில் தமிழகத்தில் பெரும்பாலும் பிராமண ஊடகங்களின் ஆதிக்கம்தான்!! அவர்கள் நினைப்பது மட்டும்தான் செய்தியாக பொது புத்தியில் பதிய வைக்கப்படும்!! அந்த இருவரின் பெயரும் கவனமாக மீடியா வெளிச்சத்தில் இருந்து தவிர்க்கப்பட்டது.
பாக்கிஸ்தானுக்கு எதிராக கார்கிலில் ஒன்றுக்கு இரண்டு உயிர்களை நாட்டுக்கு குடுத்தும் தமிழ்நாட்டில் உங்களைப் போன்ற சங்கிகளால் இஸ்லாமிய சமூகம் தேசப்பற்று இல்லாதவர்கள் போலும், குற்றப் பரம்பரையாகவும் இன்னமும் சித்தரிக்கப்படுகிறோமே!!
வலிகள் என்பது அத்தனை பேருக்கும் ஒன்றுதான்.. உங்களுக்கு மட்டுமல்ல.
- எம் எம் அப்துல்லா எம்.பி.,
"தமிழும், திராவிடமும் பிடிக்கவில்லை என்றால், உடனடியாக எங்கள் மண்ணை விட்டு வெளியேறிவிடுங்கள்"
-தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக் குறித்து இயக்குநர் அமீர் காட்டம்
#SunNews | #SunNews | #தமிழ்த்தாய்வாழ்த்து | #RNRavi | #Ameer
மீரட் - பானிபட் இடையே ரயில்வே பாதை அமைத்தால் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு உத்திர பிரதேச மக்கள் எளிதாக ரயிலில் செல்வார்கள்
- இந்து கோயிலுக்கு ரயில் வசதி கேட்பது இஸ்லாமிய பெண் எம்.பி.இக்ரா ஹாசன்..
இது தான் இந்தியா.இந்த இந்தியா தான் பாஜகவின் கண்களை உறுத்துகிறது.
சீமானின் தெலுங்கு வாரிசு அரசியல்
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து எம்எல்ஏ ஆவதற்கு முன் தமிழாசிரியராக வேலைபார்த்தார். அப்போது அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தனர். அவரது மனைவி பெயர் நிர்மலா. தீவிர கிறித்துவரான அவர் காளிமுத்துவின் சாதியான தேவர் சாதியைச் சேர்ந்தவர். அவரது குழந்தைகளுக்கு காளிமுத்துவின் திராவிடத் தமிழும் மனைவியின் கிறித்துவப் பெயர்களும் சேர்ந்து வைக்கப்பட்டன. நிர்மலா-காளிமுத்து தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் மருத்துவர் புனிதா ஆனந்த், டேவிட் அண்ணாதுரை, செந்தமிழ் சாம்ராஜ், தென்றல் வேதமணி, ரோசலின் கிரேஸ்.
இதில் டேவிட் அண்ணாதுரை என்பவர் தான் மதுரையில் டிடிவி தினகரன் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
காளிமுத்து தமிழாசிரியராக இருந்த போது மதுரையில் உள்ள அம்பாசிடர் ஓட்டலில் மாலை நேரத்தில் கட்சிப் பணிகளை கவனிப்பது வழக்கம். அப்போது அவருக்கு இரண்டாவது காதல் உதயமாகிறது. அந்தப் பெண்ணின் பெயர் மனோகரி. அவர் தெலுங்கு பேசும் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்தவர். அவரது சாதியினர் தமிழகத்தில் குறைவு என்பதால் தெலுங்கு பேசும் நாயுடு சாதியினரோடு திருமண உறவு வைத்து ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டனர். அப்படி இல்லை, கம்மாள நாயுடுவின் ஒரு பிரிவுதான் தெலுங்கு விஸ்வகர்மா என்றும் கூறப்படுகிறது.
இப்போதைய மாட்ரிமோனி திருமண தகவல் மையங்களில் கம்மாள நாயுடு - தெலுங்கு விஸ்வகர்மா என்று தான் பதியப்படுகிறது.
அந்த கம்மாள தெலுங்கு விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த மனோகரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் காளிமுத்து. இரண்டாவது மனைவியின் மூலமாக நான்கு குழந்தைகள். தெலுங்கு தாயாக இருந்தாலும் அனைவருக்கும் தூய இந்து தமிழ்ப்பெயர்கள் வைக்கிறார்கள்.
1. மணிகண்ட பாண்டியன் 2. அமுதா பிரசன்னா 3. அருள்மொழித்தேவன் 4. கயல்விழி.
இதில் கடைசியாக வரும் கயல்விழி என்பவர் தான் சீமானின் மனைவி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்.
முதல் மனைவியின் குடும்பத்தாருக்கும் இரண்டாம் மனைவியின் குடும்பத்தாருக்கும் இடையில் பெரிய அக்னி நட்சத்திர படமே ஓடியிருக்கிறது. (தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில்) இதை நிரூபிக்க ஒரு சம்பவம் சொன்னால் அனைவருக்கும் புரியும்.
இரண்டாவது மனைவியின் மகளான அமுதா பிரசன்னா (கயல்விழியின் சகோதரி) என்பவருக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்ய காளிமுத்து முடிவெடுக்கிறார். அப்போது அதிமுக ஆட்சியை இழந்த நேரம். காளிமுத்துவும் பணப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளார். எனவே உறவினர் ஒருவரிடம் 25 இலட்சம் திருமணத்திற்காக கடனாக வாங்குகிறார். அதன் பிறகு சில காலத்திலேயே இறந்துவிடுகிறார். யாரும் பணத்தை திருப்பித் தராததால் கடன் கொடுத்த உறவினர் வழக்குப் போடுகிறார். முதல்மனைவியின் குழந்தைகளும் இரண்டாவது மனைவியின் குழந்தைகளும் சேர்ந்து அந்த கடனை அடைக்க வேண்டும் என. உடனடியாக டேவிட் அண்ணாதுரை உள்ளிட்ட முதல் மனைவியின் குழந்தைகள் தங்கள் பங்காக இருபது லட்சம் ரூபாயை கட்டி விடுகின்றனர். மீதியை அவர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று. இப்ப தான் கதையில் ஒரு ட்விஸ்ட். "நாங்க சட்டப்பூர்வ வாரிசே இல்லை. இரண்டாம் மனைவி குழந்தைகள் தான். அவர் வாங்கின கடனுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாவோம்னு" பதில் அனுப்புறாங்க கயல்விழி உள்ளிட்ட இரண்டாம் மனைவியின் குழந்தைகள். அதாவது ஐந்து லட்சம் ரூபாய்க்காக இந்த பதில்.
அப்படி பதில் அனுப்பியவர்களில் ஒருவரான அருள்மொழித்தேவன் என்பவர் தான் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். ஊரையே தெலுங்கு தெலுங்கு என முத்திரை குத்திய நாம் தமிழர் கட்சியினர், தங்கள் தெலுங்கு அண்ணியின் தம்பி, சீமான் மைத்துனர், நாம் தமிழரின் இளைய சுதீஷ் அருள்மொழித்தேவனுக்காக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த அரிய காட்சியை கண்டும் வெட்கமில்லாமல்
நாங்கள் நாம் தமிழர் என்று சொல்லி திரிகிறான்கள்.
இதில் மைத்துனர் என்றும் பாராமல் டேவிட் அண்ணாதுரையை எதிர்த்து சீமான் வேட்பாளர் நிறுத்துகிறாராம். நிறுத்தலனா வீட்ல சோறு கிடைக்காது. அண்ணியாருக்கு திமுக அதிமுகவைவிட பெரிய எதிரி மூத்த தாரத்து பங்காளிகள் தானாம். மதுரையில் உள்ள காளிமுத்துவின் பெட்ரோல் பங்க் யாருக்கு என்பதில் பெரிய பஞ்சாயத்தே நடந்ததாம்.
இது தான் சீமான் வாரிசு அரசியலை எதிர்க்கும் இலட்சணம். சீமான் தான் மைத்துனர் அருள்மொழிதேவனுக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்தது. தெலுங்கு ஓட்டு அதிகம் உள்ள விருதுநகரில் வேட்பாளராக களமிறக்கியது.
சீமான் வேட்பாளாராக போட்டியிடும் இடங்களில் டம்மி வேட்பாளராக போட்டியிட யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படமாட்டது. அங்கு அவன் பொண்டாட்டி கயல்விழி மட்டுமே இரண்டாவது வேட்பாளராக போட்டியிடுவார். காளிமுத்து பெண்ணிற்கு கட்சிக்குள்ளேயே வரும் எடப்பாடிகளைப் பற்றி தெரியாதா? மூனு பிளாக் வந்து பொழச்சவன் சீமான்.