முத்தமிழ் அறிஞர் தலைவர்
#டாக்டர்_கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு
திருப்பத்தூர் மாவட்டம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மாதனூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் கழக இரு வண்ணக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தோம்.
கழகத் தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அண்ணன் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதல் படி
இன்று ஆலாங்காயம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட. ஊராட்சிகளில் வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தோம்
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
கழகத் தலைவர் எங்கள் முதல்வர் அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க இன்று திருப்பத்தூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
கழகத் தலைவர் என்னாலும் எங்கள் முதல்வர் மாண்புமிகு அண்ணன்
M. K. Stalin அவர்களின் ஆணைக்கினங்க
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்று
வாக்காள பெருமக்களுக்கு
நன்றி தெரிவித்தோம்.
கழகத் தலைவர் அண்ணன் @mkstalin.அவர்களின் ஆணைக்கிணங்க
நடந்து முடிந்த தேர்தலில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்று ஆம்பூர் நகரம் பெரிய மசூதியில், தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறை இன்று நாம் உரையாற்றிய நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக இளைஞரணி செயலாளர் #Udhayanidhi_Stalin அவர்களை தலைமைச் செயலகத்தில்
#அ_செ_வில்வநாதன் MLA
ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற சான்றிதழ் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
வாழ்க!! கழகத் தலைவர் @mkstalin.
வெல்க!! திமுக கழகம்.
ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற மூன்று எழுத்து நாயகர் அண்ணன் #அ_செ_வில்வநாதன் அவர்கள் சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.