கருமம்! அதெப்புடி ஒரு மனுசனால ஒவ்வொரு சின்ன சின்ன அசைவும், வார்த்தையும், முக பாவனையும் ணு 100% செயற்கையா மட்டுமே பண்ணிக்கிட்டு உயிர் வாழ முடியும்?
21 நிமிஷமும் அருவருப்பின் உச்சம்.
Joseph Vijay is the Embodiment of Fakeness.
28-38 வயது தமிழ்நாட்டுப்பெண்கள் பொதுவா தைரியமானவங்களா இருப்பாங்க. போல்டா பேசுவாங்க. Confidentஆ இருப்பாங்க. குடும்பத்துக்கு ஒண்ணுன்னா சிங்கமா புலியா கரடியா மாறி சண்ட போட்டு அவங்களுக்கு வேணும்கிறத வாங்கிப்பாங்க. ஆனா, பொது அறிவுன்னு வரும்போதோ உலக விஷயங்கள தெரிஞ்சிக்குறதுலயோ பின் தங்கியே இருக்காங்க, ஒரு சிலரத் தவிர. வேலைக்குப்போகும் பெண்கள் மத்தியிலயும் இதே நிலவரம் தான். அவங்க பள்ளி ஆசிரியையா இருந்தாலும்கூட அவங்களுக்குள்ள குடும்பப்பிரச்சன வீட்டு விவகாரம்னுதான் பேசிப்பாங்க. பராசக்தி படத்துல வர்ற பண்டரி பாய் கேரக்டர்லாம் சாதாரணமான வாழ்க்கையில பார்க்குறது அரிது. அதுல, 90’s kids, daddy’s little princessஉன்னு வளர்ந்த பெண்கள் மத்தியில கல்யாணத்துக்கு எந்த செலிப்ரிட்டி மேக் அப் பர்சன புக் பண்ணலாம், தன்ன கல்யாணம் பண்ணிக்க போற ஆள எப்படி தனக்கு ஏத்த மாதிரி மாத்தலாம், ரெண்டு பேரும் சேர்ந்து என்ன மாதிரி ரீல்ஸ் போடலாம், இந்த மாதிரியான விஷயங்களைத்தான் முன்னிலை படுத்தறாங்க. இதுல பலருக்கு அவங்க அமேசான்லயும் மீஷோலயும் ஆர்டர் போடுறதுக்கு ஒரு வருமானம் பத்தாம கடன் வாங்கி கடன் வாங்கி பெரும் கடன் தொல்லைல வேற இருப்பாங்க. இந்த மாதிரியான சூழல்ல திராவிடம், அண்ணா, பெரியார், அம்பேத்கர், தொகுதி மறுவரையறை, பண மதிப்பிழப்பு இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. மாசா மாசம் 1000 ரூ வருதா… நல்லது. பொங்கலுக்கு 3000 வருதா… புருஷன் 20000 கொண்டுவராரா… இதெல்லாம் வெச்சு தினம் தினம் நாட்கள தள்ளிட்டு இருக்காங்க. ஹெல்மெட் போட்டுக்காம ஸ்கூல்ல
பசங்கள ஸ்கூட்டில டிராப் பண்றதும், ரெண்டு காலயும் ரோட்டுல தேய்ச்சுக்கிட்டே வண்டி ஓட்டுறதும், left indicatorஐ போட்டுட்டு rightல திரும்புறதும்னு, இவங்கள்ல பல பேர் லைசன்ஸே காசு குடுத்துத்தான் வாங்கியிருப்பாங்க.
இவங்க விஜய்க்கு வாக்கு அளிக்கலைன்னாதான் ஆச்சர்யம். தான் வளர்ந்து வந்த பருவத்துல பார்த்து ரசித்த, பர்ஸனல் கிரஷ்ஷா இருந்த, ஆதர்ஸ நடிகர். இன்னிக்கு எதிரிகளால சூழப்பட்டிருக்காரு. பாவமா இருக்கு பார்க்க. வலியோட இருக்காரு. எப்படியாவது அவர ஜெயிக்க வைக்கணும். அவரு வந்தா எல்லா பிரச்சனையும் தீர்த்துடுவாரு. அப்படின்னு யாரு சொன்னா? அவரே சொன்னாரே. அதுக்கும் மேல பார்க்க நல்லா இருக்காரு. அவங்க வாழ்க்கையில இல்லாத alpha male personalityஆ தெரியுறாரு. இதை லாஜிக்னு சொல்றத விட மேஜிக்னு சொல்றதே சரியா இருக்கும்.
இந்த பெண்களோட கணவர்கள் என்ன ஆனாங்கன்னு பார்த்தா, அவங்களும் ஏதாவது ஒரு நடிகரோட ரசிக மனப்பான்மைல இருப்பாங்க. இல்ல, இவங்களுக்கு கம்ப்ளீட் சரண்டர் மோட்ல இருப்பாங்க. இல்ல, என்னத்தையோ பண்ணித்தொலை, என்ன போட்டு டார்ச்சர் பண்ணாம இருந்தா சரின்னு இருப்பாங்க.
இந்தப்பெண்கள் கொத்து கொத்தா போயி தவெகவுக்கு வாக்களிச்சுட்டு வந்து, வீடியோக்கள்ல யாராவது யாருக்கு வாக்களிச்சீங்கன்னு கேட்டா, தனக்கே உரித்தான ஒருவனைப்பற்றி பேசுவது போல ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்போட விஜய்க்கு தான் போட்டேன்னு சொல்லுறாங்க. அவங்க தொகுதி வேட்பாளர் பெயர்கூட பலருக்குத்தெரியாது.
இதை நான் ஏன் சொல்றேன்னா… யாரையும் இழிவு படுத்த இல்ல.. இந்தப்பெண்களோட பெரிய அன்ப நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கேன்.. இந்தப்பெண்களில் பலர் எனக்குத்தோழிகளா இருக்காங்க… ஆனா இதை நான் ஏன் சொல்றேன்னா… தமிழ்நாடு அறிவார்ந்த சமூகம்னுலாம் 70-80களோட முடிஞ்சு போச்சு. பொது வெளியில இன்னிக்கு பெண்கள் அதிகமா வர்றாங்க ஆனா அவங்க என்னவா வர்றாங்க (How they show up)உங்குறது மாறியிருக்கு.
To be continued.
குழந்தைங்களை கடைக்கு கூட்டி போனா கடலை மிட்டாய் வேண்டாம் கிண்டர்ஜாய் தான் வேணும்னு கேட்கும். கரும்புச்சாறு குடிக்கலாமானு கேட்டா சாயத்தண்ணில ஐஸ் போட்டு வைச்சிருக்க பாக்கெட் ரஸ்ணா தான் வேணும்னு சொல்லும்.வாங்கி குடுத்து ஆசையா சாப்பிடுறதை பாக்க சந்தோசமா தான் இருக்கும் ஆனா நடுராத்திரி ரெண்டு மணிக்கு வயிறு வலிக்குதுனு துடிக்கிறப்ப தூக்கிட்டு ஓடுற பெற்றோருக்கு தான் வேதனையும் மன உளைச்சலும் கிடைக்கும்.
உங்க பையன் 350CC பைக் கேட்டு அடம்பிடிக்குறான்னா அவன் ஆசைய நிறைவேற்றனும்னு நினைச்சீங்கனா அவன் உயிருக்கு ஆபத்தை விலை குடுத்து வாங்க போறீங்கனு அர்த்தம். குழந்தைகளுக்கும் டீன் ஏஜ் பசங்களுக்கும் தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. இன்னைக்கு விஜய்க்கு ஓட்டு போடுங்கனு சொல்றவன் அடுத்த தேர்தல்ல பிரதீப் ரங்கநாதன்க்கு ஓட்டு போட சொல்லி வற்புறுத்துவான்.விஜய் பண்றது அரசியலே கிடையாது,எமோசனலா டிரிகர் பண்ணி அவனுக்கு சாதகமா எல்லாத்தையும் செய்ய வைக்குறான். நாளைக்கே அவன் SAC பெரியப்பாவ செருப்பால அடிச்சாலும் உங்க குழந்தை உங்களை செருப்பால அடிச்சு அதை ஸ்டேட்டஸ் வைக்க தான் துடிக்கும்.
குழந்தை ஆசைபடுதுனு ஒரு தவறான விஷயத்தை ஆதரிக்க இல்ல மோசமான பொருளை வாங்கி தர துடிக்கிற பெற்றோர் எல்லாரும் அந்த குழந்தைய விட ரொம்ப கம்மியான அறிவு வளர்ச்சி உள்ளவங்களா தான் இருப்பாங்க.
@TANGEDCO_Offcl I have raised a complaint reg Power issue in my home. Mr.Gajendran AE visited my home & sorted out the power issue. I want to Thank for the immediate response in this issue.
@TANGEDCO_Offcl back to back power cut in last two hours more than 10 times power gone.., we are facing regular power issues in Ptc colony thiruvanmiyur... We are struggling with two kids.. kindly give permanent solution... Consumer no 092170111631
@TANGEDCO_Offcl no power in last one hour, we are facing regular power failure in Ptc colony thiruvanmiyur... We are struggling with two kids, no call response from local eb.... Consumer no 092170111631