வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வருவாய் ஆவணங்களை வழங்க வேண்டும்! - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசின் ‘உமீத்’ (UMEED) இணையதள ஆவணச் சரிபார்ப்பைக் காரணம��� காட்டி, உத்தரப் பிரதேசத்தில் 31,000-க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துக்களின் பதிவுகள் மிக அவசரமாக ரத்து செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் மற்றும் அவர்களின் மத ரீதியான உரிமைகளைப் பறிக்கும் உள்நோக்கத்தோடுதான் பாஜக அரசால் இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தின் வழிபாட்டிலும் பயன்பாட்டிலும் இருந்து வரும் மசூதிகள், தர்காக்கள், கல்வி நிலையங்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள் போன்ற பாரம்பரிய பயன்ப��ட்டு வழி வக்ஃப் சொத்துக்களுக்கு (Waqf by user), முறையான டிஜிட்டல் வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லை என்ற ஒற்றைக் காரணத்திற்காக வக்ஃப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அரசு நிலங்களாக மாற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி வரும் இத்தகைய சிறுபான்மை விரோத, வக்ஃப் சொத்து பறிப்பு நடவடிக்கைகள் போன்றதொரு இக்கட்டான நிலை தமிழகத்தில் உள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு எக்க��லத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
ஒன்றிய பாசிச பாஜக அரசின் வக்ஃப் சட்ட ��ிருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (JPC) பரிசீலனையில் இருந்தபோதே, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் அந்த மசோதாவிற்கு எதிராகத் தற்போதைய தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது மாநில மாநாட்டிலும், கொள்கை அறிவிப்புகளிலும் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, வக்ஃப் சட்ட திருத்த���்தைக் கொள்கை ரீதியாக எதிர்க்கும் தார்மீகக் கடமை ஆளும் கட்சிக்கு உண்டு.
ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும், குறிப்பாக வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத பாரம்பரிய பயன்பாட்டு வழி அடக்கஸ்தலங்கள், தர்காக்கள் மற்றும் மசூதிகளைக் கண்டறிந்து, அவற்றிற்குரிய பட்டா, வரைபடம் மற்றும் வருவாய் ஆவணங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்க வருவாய்த்துறை மூலம் போர்க்கால அடிப்பட��யில் அரசு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.
மேலும், தமிழக வக்ஃப் வாரியத்தின் பதிவுகளையும், மாநில வருவாய்த்துறையின் நிலப் பதிவேடுகளையும் முன்கூட்டியே ஒப்பிட்டுப் பார்த்து, அதில் உள்ள தொழில்நுட்ப மற்றும் ஆவண முரண்பாடுகளை அரசு நிர்வாகமே முன்நின்று சரிசெய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் ஒன்றிய அரசின் எவ்விதத் தவறான டிஜிட்டல் ஆவணக் கெடுபிடிகளும் தமிழக வக்ஃப் நிலங்களைப் பாதிக்காத வண்ணம், அவற்றுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். வக்ஃப் சொத்துக்கள் என்பவை ஏழை, எளிய மக்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக முன்னோர்களால் இறைவழிய���ல் அர்ப்பணிக்கப்பட்ட அறக்கட்டளைச் சொத்துக்கள் ஆகும். அவற்றை பாசிச சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பது சமூக நல்லிணக்கத்தை விரும்பும் மக்கள் அரசின் கடமையாகும்.
எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில், முந்தைய திமுக அரசு மேற்கொண்ட சட்ட ரீதியான வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போன்று, வக்ஃப் சொத்துக்களைப் போர்க்கால ��டிப்படையில் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளைத் தவெக அரசும் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Chief Minister of Tamil Nadu
OMG 😱 Leaders in India hold press conferences, but why doesn’t the great Prime Minister Narendra Modi do them?
Modi is never seen holding press conferences.I searched a lot.
When will the great Prime Minister Modi, friend of Donald Trump of America, hold such press conferences?
Cockroach Janta Party founder Abhijeet Dipke has claimed that he is receiving death threats.
Posting screenshots of WhatsApp messages that appeared to threaten him, Dipke on X said: “Receiving death threats now.”
One of the messages that was sent in Hindi, read: “Listen, you will get paid to close the account. Otherwise, we can get you killed even in America.”
Another message read: “We have your number. It won’t take us time to find your house.”
’வாழ்த்துகள் வன்னி அரசு.. இந்த புதிய பொ��ுப்பில் சிறப்பா பணியாற்றுவீங்கனு உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு’
தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு உள்ளன்போடு வாழ்த்தினார்.
சமூக நீதி களத்தில் வீரியமாக செயல்படுவதற்கு அண்ணன் அவர்களின் வாழ்த்து எனக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தேன்.
@mkstalin
@thirumaofficial
SDPI strongly condemns the BJP’s move to make “Vande Mataram” compulsory in schools and madrassas. Patriotism cannot be forced through coercion or political symbolism. Educational and religious spaces must remain free from divisive interference. #SDPI
SDPI strongly condemns the BJP’s move to make “Vande Mataram” compulsory in schools and madrassas. Patriotism cannot be forced through coercion or political symbolism. Educational and religious spaces must remain free from divisive interference. #SDPI
I know you are desperately trying to hack the account but since you have failed to do so. Let me share the real data.
Why would you call 94% of Indian youth as Pakistanis?
மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில��� பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
எனினும், மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. வரும் காலங்களில் இ��்லாமிய சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
புதிய அமைச்சரவை அனைத்துத் துறைகளிலும் சிறப்பான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்; தமிழகத்தின் மாநில உரிமைகளை எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காமல், சாமானிய மக்களை வஞ்சிக்காத, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்ட�� வளப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
- முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு.
The Future of Indian Democracy
YOUNG DEMOCRATS FLAG LAUNCH
15 MAY 2026 NEW DELHI
A new generation rises for Democracy, Justice, Equality and Freedom.
Young Democrats
National Organising Committee
#SDPI#YOUNGDEMOCRATS
தவெக தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு SDPI கட்சியின் மனமார்ந்த வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமையவுள்ள புதிய அரசு, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டும்.
மேலும், மாநில உரிமை, தமிழ்நாட்டின் சுயாட்சி அதிகாரம் மற்றும் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துவதோடு, தமிழ்நாட்டின் குரல் இந்திய அளவில் ஓங்கி ஒலிப்பதைப் புதிய அ���சு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதோடு கடந்த திமுக அரசு செயல்படுத்தி வந்த மக்கள் நலத் திட்டங்களையும், பணிகளையும் தொடர்வதோடு, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் உண்மையான மக்கள் அரசாகத் திகழ வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு
#TVK #JosephVijay #தாவெக
#SDPI
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கும் அவரது அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! தங்களது தலைமையில் தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலம் ஆகட்டும்!
உயர்ந்த வளர்ச்சியை எட்டட்டும்!!
#TVKVijayHQ#TVKVijay#Actorvijay
At a time of growing challenges, unity is essential to protect the Constitution, social justice, communal harmony, farmers’ rights & democratic values. Participated in a public gathering at Badalpur Dadri, Gautam Buddh Nagar, UP, organized under the joint aegis of Bharat Bachao Samvidhan Bachao Andolan, BKU (S) & social organizations.
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!
தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.
இந்த #LPGPriceHike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.
Act with the people’s pain in mind.
As predicted, the Union BJP Government raised #LPGPrice the moment elections ended.
When global crude prices fell, the benefit was not passed on to the people. Now, using the #WestAsiaWar crisis to raise prices, without regard for public welfare, is unacceptable.
Recognise the impact this #LPGPriceHike will unleash. Reverse it immediately. Protect livelihoods.
Savarkar Filed Mercy Petitions Before British 5 Times, Treated Cow As Useful Animal Not God: Grandnephew Tells Court |@NarsiBenwal#Savarkar#RahulGandhi
https://t.co/bG7ej1WbEl
SDPI emphasizes that madrasas have long expanded educational access in underserved regions. As the case proceeds, institutions must uphold constitutional values, legal limits, and ensure human rights bodies remain focused on dignity, equality, and freedom for all.
ஒரு லட்சம் இதயங்களின் அங்கீகாரம்!
எஸ்டிபிஐ கட்சியின் (SDPI) தமிழ்நாடு மாநில அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம், இன்று ஒரு லட்சம் (100K) பின்தொடர்பாளர்களைக் கடந்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்ப��ை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான வெற்றி என்பது வெறும் எண்கள் சார்ந்தது அல்ல; இது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலுக்கும், சமூக நீதிக்கான எமது சமரசமற்ற போராட்டத்திற்கும் தமிழக மக்கள் வழங்கியுள்ள பெரும் அங்கீகாரமாகும்.
களத்தில் நின்று அயராது பணியாற்றுவதோடு ம��்டுமல்லாமல், எமது கட்சியின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் இணையதள வாயிலாகத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த எமது சமூக ஊடகப் போர்வீரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன். உங்களின் அர்ப்பணிப்பு மிக்க இந்தப் பணியே எமது குரலை மக்கள் மத்தியில் ஆழமாகப் பதியச் செய்துள்ளது.
பாசிச அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலு���், எளிய மக்களின் உரிமைப் போரிலும் எமது தளம் தொடர்ந்து சமரசமின்றி முழங்கும். சமூக வலைதளங்கள் வாயிலாக எமது மக்கள் பணி வரும் காலங்களில் இன்னும் வீரியமாகத் தொடரும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த கட்ட இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் வலிமையுடன் பயணிப்போம்!
வாழ்த்துகளுடன்,
-முகம்மது முபாரக்
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
#100kfollowers #SDPI_TAMILNADU