ரத்த உறவுகளை இழந்து சொல்லொண்ணா துயரில் கருணாபுரம் மக்கள் இருக்க, அவர்களை நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்தவிடாமல் தனியாக அமரவைத்து, வா��ிசு அமைச்சர் @Udhaystalin வந்து போட்டோஷூட் நடத்துவதற்காக காக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஏழை எளிய மக்களின் வலி-வேதனைக���ை பட்டத்து இளவரசராகவே தன்னை பாவித்து வாழும் உதயநிதி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மக்களின் இந்த காத்திருப்பு வேதனையோடு சேர்த்து எழும் ரௌத்திரத்திற்கு உங்கள் அதிகாரக் கொட்டம் அடங்கியே ஆகவேண்டும்!
#Resign_Stalin
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூவரும், முண்டியம்பாக்கம், சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மேலும், 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் உடனடியாக களத்திற்கு விரைய வேண்டும்!
மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்த ஒரே ஆண்டில் மற்றுமோர் கொடுமை நிகழ்ந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது!
#IllicitLiquor #Kallakurichi