மணல் குவாரிகள் மூலம் அரசு ஏற்பட்ட ரூ.4730 கோடி வருவாய் இழப்பை வசூலிப்பாரா? தமிழ்நாடு முதல்வர் விஜய் : அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வமாக அனுப்பிய கடிதத்துக்கு தமிழக வெற்றி கழக அரசு நடவடிக்கை எடுக்குமா?: கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் 28 அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் காரணமாக ₹4,730 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் (ISRO) தேசிய தொலையுணர்வு மையம் மற்றும் ஐஐடி கான்பூர் (IIT Kanpur) ஆகியவற்றின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பிரம்மாண்ட முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது
சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் விற்பனை மூலம் ரூ.4,730 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டப்பட்டிருந்த போதிலும், கணக்கு புத்தகங்களில் வெறும் ரூ.36.45 கோடி மட்டுமே வருவாய் வந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.
போலி பில்களைப் பயன்படுத்தி முறைகேடான மணல் விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி (GST) மற்றும் வருமான வரி பெருமளவில் ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை, முக்கிய ஆவணங்கள் மற்றும் பினாமி பெயர்களைக் கண்டறிந்துள்ளது. மேலும், விரிவான விசாரணைக்காக வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவு மற்றும் தமிழ்நாடு டிஜிபி ஆகியோருக்கு அமலாக்கத்துறை கடிதங்களையும் ஆதாரங்களையும் அளித்துள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 209 ஹி்டாச்சி/ஜேசிபி எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள் மற்றும் ₹130 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த முறைகேடு தொடர்பாகத் திருச்சி, கரூர், தஞ்சாவூர், வேலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களின் அப்போதைய மாவட்ட ஆட்சியர்கள் (Collectors) மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் கடந்த ஆட்சியாளர்கள் மவுனம் காத்து வந்தனர்.. தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு மணல் குவாரிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பி உள்ள விசாரணை அறிக்கையை அடிப்படையாக வைத்து 4000 கோடி வருவாய் இழப்பை வசூலிப்பது மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
டிரெண்டாகும் `FIRE’ லைப்ஸ்டைல்
30 வயதிற்குள்ளாகவே ஓய்வுபெறும் நோக்கில் மெட்டாவில் பணிபுரியும் 24 வயதான அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் சம்பாதித்தாலும் கார், டிவி, சோஃபா என ஆடம்பர பொருட்கள் எதுவும் வாங்காமல் வாழ்கிறார்
மாதம் ரூ.4 லட்சம் மட்டுமே சம்பளம் பெறும் அவர், ஷேர் மார்க்கெட் முதலீடு மூலம் ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கிறார். பொருளாதார தன்னிறைவு பெற்று சீக்கிரமே ஓய்வுபெறும் `FIRE’ (Financial Independence, Retire Early) லைப்ஸ்டைலை பின்பற்றும் அவர், தேவையற்ற செலவுகளை தவிர்த்து முதலீடு மற்றும் சேமிப்பில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்
#Meta #American #FinancialIndependence #RetireEarly #FIRE #thanthitv
வருவாய்த்துறை என்ன செய்கிறது: அமைச்சர் செங்கோட்டையன் உறங்குகிறாரா? : சாத்தனூர் அணை வரைக்கும் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பேரிடர்கள் நடந்தும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ X கணக்கில் ஜனவரிக்குப் பின்னர் ஒரு பதிவு கூட இல்லை... வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறங்குகிறாரா? இல்ல அதிமுகவில் ஆள்பிடிக்கும் வேலையில் பிசியா இருக்காரா என மக்கள் கேள்வி : கடைசி பதிவு ஜனவரி 12 தேதி வரை தான் உள்ளது @KASengottaiyan@CMOTamilnadu
துணிச்சலாக செயல்படும் அமைச்சர் பிரபு: பாராட்டாத அரசியல் கட்சிகள் : பல்லாயிரம் கோடி இழப்பு வசூல் ஆகும் என்பதால் முதல்வர் விஜய் மகிழ்ச்சி: தமிழ்நாடு முதல்வர் விஜய் அமைச்சரவையில் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி கே பிரபு வேகமாக செயல்பட்டு வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு செய்யவும், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அது தொடர்பான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். மேலும் அமைச்சர் பிரபு அவர்களே நேரடியாக குவாரிகளில் ஆய்வு நடத்தினார். சமீபத்தில் கூட தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு விதிமுறை மீது கனிமங்கள் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதைதொடர்ந்து அதிகாலை 2 மணி அளவில் அதிரடி சோதனை நடத்திய அமைச்சர் பிரபு ஒவ்வொரு லாரிகளாக வழிமறித்து சோதனை செய்து, விதிமுறை மீறி லாரிகள் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றதா என்று சோதனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் விதிமுறை மீறி செயல்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட 18 குவாரிகளை மூட உத்தரவிட்டார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு குவாரிகளை மூட உத்தரவிட்டார். இன்று விருதுநகர் மாவட்டத்தில் 23 குவாரிகளை மூட உத்தரவிட்டார். குவாரிகளில் விதிமீறல் இருப்பது தெரிய வந்தால் உடனுக்குடன் மூடுவது மட்டுமின்றி அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை வசூலிக்கவும் அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதால் முழுமையாக ஆய்வு முடிந்த பிறகு எத்தனை குவாரிகளில் விதிமீறல் நடந்திருப்பது என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை தரவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையை இதுவரை எந்த கட்சிகளும் பாராட்டவில்லை. மண்ணுக்கான அரசியல் நாங்கள் செய்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ் தேசிய இயக்கங்கள் எல்லாம் மௌனம் காக்கிறது. இருப்பினும் பாராட்டுக்கு ஏங்காமல் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் கிடைப்பதற்காக நடவடிக்கை எடுத்து வரும் அமைச்சர் பிரபுவுக்கு இயற்கை ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்
தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பித்தவர்கள் இனி அனைத்து கட்டணமும் ஆன்லைனில் செலுத்த உத்தரவு: தமிழ்நாட்டில் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு சார்பில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டிடங்களையும் இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும். கட்டிட அனுமதி தொடர்பான விண்ணப்பத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் சம்மந்தப்பட்ட உரிமையாளர் மட்டுமே நேரில் வர வேண்டும் மற்றபடி ஆர்க்கிடெக்ட் அல்லது ஸ்டெக்சுரல் இன்ஜினியர் அல்லது மூன்றாவது நபர்களை அழைத்து வரக்கூடாது. அனைத்து பணிகளையும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ள வேண்டும். அரசு அறிவுறுத்தலின்படி தாமதமின்றி கட்டுமான பணிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் அரசின் உத்தரவை பின்பற்றாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன் ரெட்டி அனைத்து ஆணையர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
குவாரிகளில் மெகா முறைகேடு மொத்தமாக முடிக்க சிஎம் விஜய் முடிவு...
மணல் குவாரி விவகாரத்தில் மணல் அள்ளுவதற்கு 0.9 மீட்டர் அளவு மட்டுமே அள்ள வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது, அதேபோன்று கல் குவாரி அமைப்பதற்கு 1.5 மீட்டர் அளவு மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.
ஆனால் பல கல்குவாரியில் சுமார் 3 மீட்டர் அளவில் அரசாங்கம் விதிகளுக்கு விதிகளை மீறி கல் குவாரிகள் முறைகேடு செய்ததில் சுமார் 4 ஆயிரம் கோடி வரை அபதாரம் கட்ட வேண்டிய நிலைக்கு கல் குவாரிகள் தள்ளப்பட்டது. இப்படி ஒரு சூழலில் முறைகேடு செய்த கல் குவாரி முதலாளிகளுக்கு துணையாக பெரிய தில்லாங்கடி வேலை நடந்துள்ளது.
அதாவது வரன்முறை சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்து சுமார் 1000 கோடி மட்டுமே அபராதம் கட்டினால் போதும் என இந்த விவகாரத்தில் இருந்து கல் குவாரி முதலாளிகளை காப்பாற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருலாபங்
தற்பொழுது இந்த குவாரி முறைகேடு விவகாரத்தி மிக சீரியசாக முதல்வர் விஜய் எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையிலும், அடுத்தடுத்து இது தொடர்பாக தவெக அரசு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினால் இன்னும் இது தொடர்பாக பல மர்மம் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கல்குவாரி விவரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்து ஏலம் விடப்பட்டாலே, இந்த கனிம வளம் துறையில் மட்டுமே தமிழக அரசுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் . இதன் மூலம் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த முடியும்.
தென் மாவட்டத்தில் அதிமுக கூடாரம் காலி: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அதிமுகவின் முகங்களாக அறியப்பட்ட ஆர் பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கீர்த்திகா முனியசாமி ராஜேந்திர பாலாஜி சண்முகநாதன், கடம்பூர் ராஜு உள்பட இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் படுதோல்வி அடைந்தனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் திண்டுக்கல், தேனி, விருதுநகர், உட்பட பல மாவட்டங்களில் பல தொகுதிகளில் தோல்வியை தழுவியது. அம்பை, நத்தம் போன்ற ஒரிருதொகுதியில் மட்டுமே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். மற்ற மாவட்டங்களில் ஒரு தொகுதியை கூட அதிமுகவால் பிடிக்க முடியவில்லை. மத்திய மண்டலம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இதே நிலைதான். இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு எதிராக வேலுமணி தரப்பில் ஒரு தரப்பினர் போர் கொடி தூக்கினர். அவர்கள் கட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்காமல் பலரது மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். நேற்று அதிமுகவில் மூன்று எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் ராஜினாமா செய்து விட்டு இணைந்தனர். இன்று இசக்கிக்கு சுப்பையா ராஜினாமா செய்தார். தொடர்ந்து 10 எம்எல்ஏக்கள் வரை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய திட்டமிட்டுள்ளனர். அதேபோன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளனர். ஒவ்வொருவராக அதிமுகவிலிருந்து வெளியேறி வருவதால் தென் மாவட்டங்களில் அதிமுக கூடாரம் காலி ஆகி வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருத்தணி மாலைமுரசு செய்தியாளர் வினோத்குமார் மீது பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைக்க ஏற்பாடு செய்துவரும் காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
திருத்தணி அருகேயுள்ள ஏரியில் அரசு அளவை மீறி முறைகேடால மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் மாலை முரசு செய்தியாளர் வினோத்குமார் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது
அங்குவந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி வினோத்குமாரை செய்தி எடுக்க விடாமல் தடுத்ததுடன் அவர் செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார். மேலும் செய்தியாளரை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கமுற்பட்டுள்ளார்.
இதுகுறித்து, திருத்தணி காவல் நிலையத்தில் செய்தியாளர் வினோத்குமார் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகாரை பெற்றுக்கொள்ள மறுத்த காவல் ஆய்வாளர், மண் குவாரி உரிமையாளர் மனைவியிடம் பொய் புகாரை பெற்று செய்தியாளரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
முறைகேடாக மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் வினோத்குமார் மீது பொய் வழக்கு பதிவு செய்ய முயலும் காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
வினோத்குமாரை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் செய்தியாளர் அளித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu@tnpoliceoffl
தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் வெளியிடப்படும் டெண்டர் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் டெண்டர் அறிவித்த நாளிலிருந்து இணையதளத்தில் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யார் யார் டென்டரில் கலந்து கொண்டார்கள் என்பது போன்ற விவரங்களையும், குறைவான ஒப்பந்தபெள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டால் அது தொடர்பான விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் எனவும், நகராட்சி நிர்வாகம் சார்பில் திட்ட அனுமதிக்கு விண்ணப்பித்தால் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
டாக்டர் P.சரவணனின் அரசியல் பயணம்
MDMK → BJP → DMK → BJP → AIADMK→TVK
2014 மதிமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்
2015 மதிமுகவிலிருந்து பா.ஜ.கவிற்கு சென்றார்.
2016 பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்தார். 2019 MLA ஆனார்
2021 திமுகவிலிருந்து மீண்டும் பா.ஜ.க.விற்கு சென்றார். மதுரை வடக்கில் போட்டி(தோல்வி)
2023 பா.ஜ.க.விலிருந்து அதிமுக. 2024 லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டி
2026ல் மதுரை வடக்குபோட்டி(தோல்வி)
2026 அதிமுகவிலிருந்து த.வெ.க.வில் இணைந்தார்
இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சரவணன் சந்திப்பு
#admk #tvk @DrPSaravananMD
Power Star Pawan Kalyan opens up about Thalapathy Vijay's huge political win:
"TVK won so easily, I almost feel a little jealous! Vijay became the Chief Minister in grand style, with massive cutouts and holograms everywhere. I have been in politics for 15 years, but I have never seen a victory like this."
"#TVK won so comfortably that it even makes me feel jealous. Vijay became Chief Minister with cutouts and holograms everywhere.
Even after travelling for 15 years, I did not get to see such a victory."
— #PawanKalyan
முதல்வர் விஜய் ஏதோ எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டாரோ என்று தான் தோன்றுகிறது. உண்மையிலே விஜய் எதிர்ப்பார்த்த வெற்றி என்பது 2031 ல் தான்.ஆனால் இந்த வெற்றி என்பது அவரே எதிர்ப்பாராத வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக விஜய் அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்ற முடியாதவை என்று அவருக்கே நன்றாக தெரியும். இருந்தும் திராவிட கட்சிகளுக்கு செக் வைப்பதற்க்காக தான் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்றெல்லாம் மனம் போன போக்கில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து விட்டார்.ஏனென்றால் திமுக 2021ல் அறித்த வாக்குறுதிகளையே அவர்கள் நிறைவேற்ற முடியாமல் தாளம் போட்டுக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவர்.
இத்தனைக்கும் திமுக 2021 ல் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விஜயின் 2026 தேர்தல் வாக்குறுதிகளை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவு. உதாரணம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திமுக அறிவித்தது அதையே விஜய் அவர்கள் 2500 என்று அறிவித்தார். இப்பொழுது இருக்கும் நிதி நெருக்கடியில் விஜய் அவர்கள் அறிவித்த 2500 சாத்தியப்படுமா என்பதே அனைவரும் யோசிக்கும் விஷயம்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் மாநில கட்சிகள் மட்டுமே ஓரளவுக்கு நிதி நெருக்கடியை சமாளித்து ஆட்சி நடத்த முடியும் மாறாக முரண்டு பிடித்தோ அல்லது எதிர்த்தோ பயணித்தால் பாதிக்கப்படுவது மாநில அரசுதான். குறிப்பாக தமிழக அரசு இன்றைக்கு இருக்கும் நிதி நெருக்கடியில் மத்திய அரசோடு முரண்பட்டு இருந்தால் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியப்படுமா?
இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு விஜய் செய்த முதல் தவறு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது தான். ஏற்கனவே அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவிற்கு இது பெரும் கோபத்தை வரவழைத்து விட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் திமுக அதிமுக இரண்டையும் இணைத்து விஜய்க்கு எதிராக ஆட்சி அமைக்க மிகப்பெரிய ஒரு திட்டத்தை பாஜக அரங்கேற்றியது.அது ஏனோ இறுதியில் ஒரு சில காரணங்களால் முடிவு எட்டப்படாமல் கைவிட்டு போனது.
விஜய் செய்த இரண்டாவது தவறு அதிமுகவை உடைத்து சி.வி சண்முகம் எஸ்பி வேலுமணி மூலமாக எம்எல்ஏக்களை தவெக விற்கு கொண்டுவர முயற்சித்தது. உண்மையிலேயே இந்த விஷயம் முதன்முதலாக அரசியலுக்கு அடி எடுத்து வைக்கும் விஜய்க்கு இது பெருத்த அவமானத்தைஉண்டாக்கும் செயலாகத்தான் பார்க்கப்படுகிறது.
திமுக அதிமுகவிற்கு மாற்று என்று சொல்லப்படுகின்ற விஜய் அவர்களுடைய அரசியல் ஆரம்பத்திலேயே குதிரை பேரதிற்கும்,கட்சிகளை உடைத்து அதிலிருந்து ஆட்களை பிரிப்பதும் என செயல்பட்டதால் திராவிட கட்சிகளுக்கு ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்பது போல் தான் அமைந்துவிட்டது. மக்களும் அதை பரவலாக விமர்சிக்க தொடங்கி விட்டனர்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் திமுகவும், பாஜகவும் ஒன்று சேர்ந்து காங்கிரசை எதிர்க்கும் வகையில் தீவிரமாக இனி செயல்படும். திமுகவை பொருத்தவரை பாஜக எதிரி என்றால் காங்கிரஸ் துரோகி. ஆதனால் துரோகியை ஒழிக்க எதிரியுடன் கைகோர்ப்பதில் தவறு இல்லை என்ற முடிவுக்கு திமுக வந்துவிட்டது.இதன் தொடர்ச்சியாக இனி அடுத்த 6 மாதத்திற்குள் ஆட்சி கலைப்பிற்கு உண்டான அனைத்து வேலைகளையும் திமுகவும், பாஜகவும் திரை மறைவில் சேர்ந்தே நடத்தும்.
அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை..
https://t.co/e5hFQrBhZ7
If u r a resident of any of the police stn limits listed below & willing to join the team for better policing? pls join “whatsapp southzone police- citizen forum” using the link.
#chennai#police#Adyar#TNagar