சேலத்தில் அரங்கேறியுள்ள மற்றொரு அதிர்ச்சியூட்டும் பொள்ளாச்சி சம்பவம்! 50க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ள #TVK நிர்வாகி மணிகண்டன்.
மேடைகளில் பெண்கள் பாதுகாப்பு பற்றி நீளமாக வசனம் பேசும் திரு.@TVKVijayHQ அவர்களின் கட்சியின் உண்மையான லட்சணம் இதுதானா? பெண்களின் வாழ்க்கையோடு விளையாடும் இத்தகைய காமக் கொடூரன்களுக்கு உங்கள் கட்சியில் என்ன வேலை? காவல்துறையே ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக வரும் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இவர்களை போன்றவர்களை பதவியிலிருந்து நீக்குவது மட்டும் தீர்வாகாது. வழக்கை உடனடியாக CBCID விசாரணைக்கு மாற்றி, குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்!
#TVKFails
பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 12 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை விளக்கப் புத்தகத்தை மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்கள் வெளியிட்டார்..!
"இந்திய ஆயுதங்கள் ஐரோப்பாவை தாக்கவில்லை; ஆனால், ஐரோப்பிய ஆயுதங்கள் இந்தியாவை தாக்கிய வரலாறு இருக்கிறது."
ஜெய்சங்கரின் ஒரு வரி பதில் — ஐரோப்பாவின் அறநெறிப் போதனைகளுக்கு சரியான பதிலடி. 🔥
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது சிறுமி - குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது?
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்து தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் எனக் கடிதம் எழுதிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ?
எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதான குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
முதலமைச்சர் திரு.@TVKVijayHQ அவர்களை "கோழை" என்று சீறிய திரு.@VanniTamizhVCK, இன்று அதே "கோழையின்" அமைச்சரவையில் அமைச்சர்!
பதவி நாற்காலி கிடைத்துவிட்டால், "கோழை" கூட "தலைவராக" தெரிவார் போல!
#TVK#Vijay
எல்லைகளைக் கடந்த நம் பிரதமரின் ராஜதந்திரம்!
வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய அத்தியாயத்தை எழுதிய மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் மெகா விசிட்!
குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ஓய்வின்றி உழைத்து, அனைவரையும் அன்பால் இணைக்கும் மையப்புள்ளியாகத் திகழும் தாய்மார்கள் அனைவருக்கும், இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் வாழ்வின் முதல் ஆசிரியர்களாக இருந்து உலகை அறிமுகப்படுத்தி, எண்ணற்ற தியாகங்களால் நம்மை வடிவமைப்பது, நமது தாய்மார்களே. தாயின் அன்பும், தியாகமும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் மனித வாழ்வின் மிகப் பெரிய வரங்களாகும்.
குடும்பங்களையும் சமூகத்தையும் உறுதியாக வடிவமைக்கும் அனைத்து தாய்மார்களின் பேரன்பும், பொறுமையும் என்றென்றும் போற்றுதலுக்குரியது.
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
"அண்ணாமலை அண்ணனுக்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளோம்.."
உயிரி*ந்த எங்கள் தந்தையின் உடலை பஹ்ரைன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவர உதவியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி - மகள் கண்ணீர் பேட்டி
#Ramanathapuram | #BJP | #Annamalai | #Bahrain | #PolimerNews