Sharing #Amarkalam Theme in High quality to me this is pure AJITHISM🔥 my 3rd thala film in theatres. Hardcore fans know the reach of this theme(Many of us became fans in the mid-late 90s & grew up during this period). One of Tamil cinema's most epic theme songs👌 #Valimai
Actress Jividha Sharma என்கிற kavitha - மணிரத்னம் கேட்டே call sheet தராத நடிகை
.
இவரும் தமிழில் ஒரே ஒரு படத்துடன் காணாமல் போன நடிகை..அந்த படம் சூர்யா மற்றும் முரளி நடித்த காதலே நிம்மதி படத்தில் நடித்தவர்
.
jailer படத்தில் varma theme music னு taal se taal mila song பயங்கர viral ஆச்சே அதோட original song ல ஐஸ்வர்யா ராய் கூட டான்ஸ் ஆடுற ஐஸ்வர்யா தங்கச்சியா நடிச்சவங்கதான் இவங்க படம் பெயர் taal
.
எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இவருக்கு வயது இப்போது 45 ஆம்..நம்ம முடியவில்லை அதிகபட்சம் ஒரு 30 to 35 வயது என்று சொல்லலாம் அந்த அளவு young ஆக தெரிகிறார்
சில heroine களுக்கே ஒரு heroine க்கு இரண்டு ஹீரோ என்ற ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கும் அதில் முதல் படத்திலேயே இவருக்கு சூர்யா முரளி என்று இரண்டு ஜோடி..இந்த படத்தில் அறிமுகமான நடிகை சந்கீதவே சைடு ரோல் தான்
.
காதலே நிம்மதி படத்தில் முரளிக்கு நிச்சயம் ஆன பொண்ணு ஒரு கோவிலில் சூர்யா போட்டோ எடுக்க வர அவர் ஒரு குட்டி பெண்ணை பார்த்து சிரித்து பேச இந்த heroine னும் யாரையோ பார்த்து பேசிக்கொண்டு இருக்க அண்ணன் ஆக நடித்த நாசார் panorama view ல தலைய திருப்பி பார்க்கும்போது இவங்க ரெண்டுபேருதான் சிரிச்சு பேசுறாங்க தன் மகளுக்கும் சூர்யாவுக்கும் காதல் என்று தப்பாக நினைத்து அடிக்க பகை climax வரைக்கும் வளர்ந்து கடைசியில் இந்த பொண்ணு சூர்யாவையே திருமணம் செய்துகொள்ளும் நிலைமை வரும்..முரளி நாசரை பார்த்து இப்போ சந்தோமாடா உனக்குன்னு கேக்குற climax 😁
.
படம் box office failure இத்தனைக்கும் தேவா இசையில் விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி பாட்டு பட்டிதொட்டி எல்லாம் famous அடுத்து கந்தன் இருக்குமிடம் கந்தகோட்டம் பாடலும் ஹிட்டுதான்
.
இவர் டில்லியில் பிறந்த பஞ்சாப் பூர்விக குடும்பத்தை சேர்ந்தவர்..ஒரு ஸ்டூடியோவில் எடுத்த போட்டோஷூட் படத்தை சுவரில் பார்த்த தென்னிந்திய சினிமா தொடர்புடைய ஒருவர் அவரது குடும்பத்தைத் தொடர்பு கொண்டதன் மூலம் 1998ல் வெளியான "காதலே நிம்மதி" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவர் காதலே நிம்மதி படத்தில் நடிக்கும்போது 15 வயதுதான்…
.
தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அவருக்குப் பெயர் சூட்ட 'குமுதம்' இதழ் மூலமாக ஒரு பெயர் மாற்றப் போட்டியையே நடத்தினார் தயாரிப்பாளர். அதன்பின்னரே அவருக்கு 'கவிதா' என்று திரைப் பெயர் சூட்டப்பட்டது..ஏன்டா competition லாம் வச்சு கவிதா-னா பேரு வைப்பிங்க 🙄
இந்த படம் முடிந்தவுடனே..அவரது தந்தை படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறினார். மணிரத்னம் அவரை ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பியபோதும், தந்தை அந்த வாய்ப்பையும் மரியாதையுடன் நிராகரித்தார். 10ஆம் வகுப்பு முடிந்த பிறகே மும்பை Taal - 1999 திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்தார்.
.
'Yeh Dil Aashiqanaa' திரைப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டாகி (Silver Jubilee) அவருக்குத் தேசிய அளவில் புகழைத் தந்தது. இதனால் அவர் வடஇந்திய படங்களிலும், பஞ்சாபி திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.
.
யே தில் ஆஷிகானா' படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு பல முன்னணி இயக்குநர்கள் வாய்ப்பு தருவதாகக் கூறினாலும், அதற்குப் பதிலாக தவறான சமரசங்களுக்கு (Compromise) அழைத்ததாகக் கூறியுள்ளார்.
.
திறமைக்கு மட்டுமே முன்னுரிமை தருவேன், தவறான சமரசங்களுக்கு உடன்பட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்ததால், அவருக்கு வரவேண்டிய பல பெரிய பட வாய்ப்புகள் கைநழுவிப் போயின.
.
ஹிந்தி சினிமா வாய்ப்புகள் குறைந்த பிறகு, பஞ்சாபி திரையுலகில் முன்னணி நடிகையாக மாறி பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
.
புருஷன் கொடும படுத்துவதால் டிவர்ஸ் செய்துவிட்டாராம்..ரெண்டு பிள்ளைகள் இருக்கு அவங்களும் சினிமால நடிகர் மற்றும் assistant டைரக்டர் ஆம் …நடிப்பை விட்டு 2016 முதல் பல்வேறு நிறுவனங்களில் பிசினஸ் டெவலப்மென்ட், க்ரியேட்டிவ் டைரக்டர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார், மேலும் OTT தளமான Atrangii-யிலும் பணியாற்றியுள்ளார்
.
சில ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் மொத்தம் 10 படங்களே நடித்துள்ளார் பலான விஷயங்களுக்கு ஒத்துக்காதவங்க எல்லாம் கம்மியாதான் படம் நடிபாங்களோ. 🙄
பகிர்வு...
#WATCH | தெலங்கானா ஹைதராபாத் கார்மிக்நகரில் 17 வயது சிறுவன் ஓட்டிவந்த கார், கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் 60 வயது முதியவர் பலி; உடன் இருந்த சகோதரர் படுகாயம்.
#SunNews | #Telangana | #Hyderabad
ஒட்டுமொத்த தற்குறி influencer கும்பலுக்கும் ஒரே ஸ்கிரிப்ட் தான் .. " இயற்கையே அண்ணன் பக்கம் தான் " ..
நம்ம உரிமையை உரிய நேரத்துல கேட்டு வாங்கியிருக்கனும்னுங்கற அடிப்படை யாருக்கும் போய் சேராம பாத்துக்கறாங்க .. இந்த தண்ணி எப்ப வந்திருக்கனும்னு சொல்ல மாட்டாங்க .. வரது உபரி நீர்னு சொல்ல மாட்டாங்க .. எல்லா வருஷமும் உபரி நீர் திறந்து விடப்படும்னு சொல்ல மாட்டாங்க ..
ஏன்னா இந்த கல்ட் கூட்டத்துக்கு என்னோட அண்ணன் மேல தப்பு மட்டும் சொல்லிட கூடாது ..
1978 ல் தமிழ்நாடு🤍
எல்லாரையும் கவனியுங்கள் ஒருவருக்கு கூட உடல் பருமன் இல்லை😶
All the places are very neat & clean, with no plastic waste.
நீங்க எதெல்லாம் கவனிச்சீங்க இதுல??
Mankatha climax la AK saagama thirumba varrathu than twist, adhellam na easy ah kandu pudichi iruppen nu confident ah puluthuran.. mental bunda JK dei 😭😭 https://t.co/68sunS0A6c
Simple ah சொல்றேன் பிரான்ஸ் .. இவரு வாங்கின 30 லட்சத்துக்கு 70 பைசா வட்டி வச்சிப்போம் .. Emi 28000 .. அதுல 21000 வட்டி , மீதி 7000 தான் அசல் கழியும் .. கந்து வட்டி கணக்கெல்லாம் சார்பா போடுவாங்க .. ஆனா இந்த அடிப்படை கணக்க ஏன் யோசிக்க மாற்றாங்க 😷 இப்ப kfs லாம் வந்த பிறகும் படிச்சவங்களே புரிஞ்சிக்க மாட்டாங்க சிலர் .. 🥲
GBU special show housefull seats and sat on floor and enjoying , but so called carrer in ucham new movie not even mosquitos in screens 😂
#34yearsofAjithism
காவிரி நதியைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பினால், இந்தப் பதிவைப் பொறுமையாக படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இதுதான் காவிரி நதியின் பயணம்!
The Journey of #CauveryRiver
காவிரி என்றாலே, கர்நாடகாவில் இருக்கும் ஏதாவது ஓர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அது நேராக தமிழ்நாட்டின் மேட்டூர் #Mettur அணைக்கு வந்துவிடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் காவிரியின் உண்மையான பயணம் அவ்வளவு எளிமையானதல்ல.
காவிரி ஒரே நீர்ப்பிடிப்பை மட்டும் சார்ந்த நதி அல்ல. அது பல துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், துணையாறுகள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இணைந்த மிகப்பெரிய ஆற்றுப்படுகை.
ஒவ்வொரு துணை நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்யும் மழையின் அளவு வேறுபடும். அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து, அணையின் கொள்ளளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் வேறுபடும்.
காவிரியின் பயணம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரியில் தொடங்குகிறது.
ஹாரங்கி #Harangi, ஹேமாவதி #Hemavathi மற்றும் லட்சுமண தீர்த்தா ஆகியவை தனித்தனி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உருவாகின்றன. இவற்றின் நீர் வெவ்வேறு இடங்களில் காவிரியுடன் இணைந்து, இறுதியாக கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் #KRS அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.
ஆனால் கபினியின் பயணம் வேறு. #Kabini
கபினி கேரளாவின் வயநாடு பகுதியில் உருவாகி, கர்நாடகாவிலுள்ள கபினி அணையில் சேமிக்கப்படுகிறது. பின்னர் T.நரசிபுரா அருகே காவிரியுடன் இணைகிறது.
அதாவது, கபினி அணையிலிருந்து வெளியேறும் நீர் முதலில் KRS அணைக்குச் செல்வதில்லை. KRS அணையிலிருந்து வெளியேறும் காவிரியும், கபினி அணையிலிருந்து வரும் நீரும் T.நரசிபுரா பகுதியில் தான் ஒன்றாக இணைகின்றன.
இதற்குப் பிறகு சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி மற்றும் வழியிலுள்ள பிற சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் நீரும் காவிரியில் சேர்கிறது.
இவ்வாறு பல்வேறு ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சேர்ந்த மொத்த காவிரி நீர், கர்நாடகா–தமிழ்நாடு எல்லையிலுள்ள பிலிகுண்டுலுவில் #Biligundlu அளவிடப்படுகிறது.
பிலிகுண்டுலு ஓர் அணை அல்ல. அது மத்திய நீர்வள ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையம். (CWC Water Gauge)
கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை மட்டும் கூட்டிப் பார்த்து, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் கிடைத்தது என்று கூற முடியாது. வழியிலுள்ள துணையாறுகளின் நீர்வரத்து, மழை, பயண நேரம் மற்றும் ஆற்றின் உண்மையான ஓட்டம் அனைத்தும் இதில் அடங்கும்.
அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த உண்மையான நீரின் அளவு பிலிகுண்டுலுவில் பதிவாகும் நீரோட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பிலிகுண்டுலுவைக் கடந்த காவிரி, தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஒகேனக்கல் #Hogenakkal வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூரில் சேமிக்கப்படும் நீர், தேவையின் அடிப்படையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கீழே திறக்கப்படுகிறது.
01.08.2026 நிலவரப்படி முக்கிய அணைகளின் நீர்மட்டம் மற்றும் மொத்த கொள்ளளவில் உள்ள நீர் இருப்பு:
✅Harangi: 127.55/129 அடி – 94%
✅Hemavathi : 100.98/117 அடி – 64%
✅KRS: 91.80/124.80 அடி – 34%
✅Kabini: 56.28/65 அடி – 74%
✅Mettur: 73.82/120 அடி – 39%
✅Bhavani Sagar: 55.32/105 அடி – 18%
✅Amaravati: 28.54/90 அடி – 9%
“சதவீதம்” என்பது அந்த அணையின் மொத்த கொள்ளளவில் தற்போது எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஒவ்வொரு அணையின் உயரமும் கொள்ளளவும் வேறுபடும். எனவே, அணைகளின் நீர்மட்டத்தை மட்டும் நேரடியாக ஒப்பிடக் கூடாது.
மேட்டூர் அணைக்குக் கீழே பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன.
எனவே, இந்த ஆறுகளின் நீர் மேட்டூர் #Mettur அணையை நிரப்பாது. ஆனால் மேட்டூருக்குக் கீழே காவிரியின் ஓட்டத்திற்கும், டெல்டா பகுதிகளின் தேவைக்கும் அவை கூடுதல் பங்களிப்பை வழங்குகின்றன.
அதன்பிறகு முக்கொம்பு மேலணைப் பகுதியில் காவிரி–கொள்ளிடம் நீர்ப் பிரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி டெல்டாவின் பல்வேறு கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
எனவே, காவிரி டெல்டாவிற்குக் கிடைக்கும் நீர் என்பது ஏதாவது ஓர் அணையின் இருப்பை மட்டும் சார்ந்ததல்ல.
அது பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரோட்டம், மேட்டூர் அணையின் இருப்பு மற்றும் வெளியேற்றம், தமிழ்நாட்டின் பவானி–நொய்யல்–அமராவதி துணையாறுகள், உள்ளூர் மழை மற்றும் நீர் மேலாண்மை ஆகிய அனைத்தையும் சார்ந்துள்ளது.
சாதாரண நீராண்டில், ஜூன் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை மொத்தம் 177.25 TMC நீர் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டும். இது ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலான மொத்த அளவு.
சுருக்கமாக காவிரியின் பயணம்:
பல மழைப்பகுதிகள்
→ தனித்தனி துணை நீர்ப்பிடிப்புகள்
→ துணையாறுகள் மற்றும் அணைகள்
→ KRS–கபினி நீர் இணைப்பு
→ பிலிகுண்டுலு அளவீடு
→ ஒகேனக்கல்
→ மேட்டூர்
→ தமிழகத்தின் துணையாறுகள்
→ முக்கொம்பு
→ கல்லணை
→ காவிரி டெல்டா.
ஒரே காவிரி ஆற்றுப்படுகை; ஆனால் அதற்குள் பல துணை நீர்ப்பிடிப்புகள்!
இந்த வரைபடத்தின் நோக்கம், அந்த நீண்ட மற்றும் சிக்கலான காவிரிப் பயணத்தை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளச் செய்வதே.
ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் நீர்த்தேக்கக் கண்காணிப்புத் தளம், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், கருத்துப் பகுதியில் கேளுங்கள். என்னால் முடிந்தவரை அதுகுறித்த தகவல்களைத் தேடி, உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
@praddy06@tamilnadu_wrd@CWCOfficial_GoI
#Cauvery #Tamilnadu #Karnataka #Monsoon #Kerala