உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்
- தந்தை பெரியார்
#periyar#TVK#TVKVijay#JanaNayagan
ஒரு பக்கம் பெரியாரின் பெண்ணுரிமைப் பேசிக்கொண்டே, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இன்னொரு பக்கம் திருட்டுத்தனமாக இந்துத்துவாவோடு கைக்கோர்க்கும் திமுக மந்திரிகள்.
அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான், அமைச்சர் மா.சு. முன்நின்று நடத்தும் இந்தக் கோலப் போட்டி.
பார்ப்பன பண்பாட்டு கூறுகளான பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் கோலப் போட்டிகளை வீதி வீதியாகச் சென்று RSS மட்டும்தான் நடத்துமா என்ன..? திமுகவும் நடத்தும்.
இதையும்,திராவிட மாடல் என்பார்கள், நாமும் நம்பித்தானே ஆக வேண்டும். வேறு வழி..!? உங்கள் சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரிஸ்டு கள் புரிந்துக்கொள்ளும் வரை உங்கள் காட்டில் மழைதான் C.M சார்....
#TVKForTN #TVKVijay #DMKFailsTN #DMK #DMKFails #DMKDestroyedTN #dmkyouthwing
‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு’- விவாதிப்போம்! தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைய நிலையில் ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி, தனித்து 40 சதவீத வாக்குகளை பெறும் நிலையில் இல்லை. அக்கட்சித் தலைமையிலும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களே தலைவர்களாக உள்ளார்கள். கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளை வசப்படுத்தியே அதிகார பாதையில் அவர்கள் இதுவரை பயணித்துள்ளனர். இப்படி கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தங்கள் ஆட்சி அதிகாரத்திற்காக கபளீகரம் செய்யும் தந்திர அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது. ஒரே குடும்பம், ஒரே கட்சி என்கிற அதிகார மமதையில் தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளை அடிமை சாசனம் எழுதி தரச் சொல்லும் திமுக தலைமைக்கு ஒன்றை நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது. இதே திமுக தலைமைதான் 2024 தேர்தல் வெற்றிக்குப் பின் "221 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருக்கிறது, கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது" என்றெல்லாம் பெருமை பேசியது. அவர்களின் கணக்குப் படி பார்த்தாலும் திமுக போட்டியிட்ட 22 (கொ.ம.தே.க உள்பட) தொகுதிகளில் சராசரியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகள் 132 தான். ஏனைய 102 இடங்களில் கூட்டணிக் கட்சிகள்தான் போட்டியிட்டன. காங்கிரசுக்கு 9 பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 54 சட்டமன்ற தொகுதிகள், விசிகவுக்கு இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 12 சட்டமன்ற தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 12 சட்டமன்ற தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 12 சட்டமன்ற தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு பாராளுமன்ற தொகுதி வீதம் ஆறு சட்டமன்ற தொகுதிகள், மதிமுகவிற்கு ஒரு பாராளுமன்ற தொகுதி வீதம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் என்கிற விகிதத்தில் அப்போது பிரித்துகொடுத்த திமுக இப்போது சட்டமன்றத் தேர்தலில் மட்டும் இந்த பகிர்வை மறுப்பது ஏன்? ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும் இந்த கணக்கு திமுகவிற்கு ஏன் பொய்க்கணக்கு ஆகிவிடுகிறது? தேவைக்கேற்ப கூட்டணிக் கட்சிகளை பயன்படுத்திக்கொள்வது, பின்னர் தூக்கிப் போட்டுவிடுவது என்பது பண்ணையார் மனநிலை இல்லையா? இனி இங்கே அதிகாரப் பகிர்வு இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது. காரணம், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கம் முன்னெப்போதும் இல்லாதவகையில் இன்று அனைத்து கட்சித் தொண்டர்களின் குரலாகவும், மக்களின் குரலாகவும் மாறி இருக்கிறது. அந்தக் குரலை பிரதிபலிக்கிற சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள். ஒடுக்கப்பட்ட, பின் தங்கிய சமூகங்களின் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளது. ‘அதிகார பகிர்வு’ என்பதையே அனைத்து கட்சிகளும் தங்களின் உரிமையாக முழங்கும் காலமும் கனிந்துள்ளது. கூட்டணிக்கட்சிகளின் வாக்கு வங்கிகளை வைத்து ஆட்சிக்கு வந்து, அதிகாரத்திற்கு தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்கிற மாயையை இன்றைய ஆளும்கட்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த நியாயமான முழக்கத்தை எழுப்புபவர்களை வழக்கம்போல ஆர். எஸ். எஸ் என்றும் பாஜக என்றும் முத்திரை குத்தி திமுக தப்பித்து விட முடியாது. கடந்த 2024 தேர்தலில் போட்டியிட்ட 22 தொகுதிகளில் ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட முன்னிறுத்தாத திமுக கட்சி, சிறுபான்மையினரின் காவலன், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பாதுகாப்பு என்கிற முகமூடிகளை எல்லாம் இனி பயன்படுத்த முடியாது. ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும்’ பங்கு என்கிற சுயமரியாதை முழக்கமே 2026- தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தின் முடிவுகளை தீர்மானிப்பதாய் இருக்கும்.
#TVKVijay #JanaNayagan
தமிழ் நிலத்தின் பேரரசி, இந்தியத் திருநாட்டின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரர் வீரமங்கை வேலு நாச்சியார். தாய் மண்ணைக் காக்கத் தன்னிகரற்ற போரை நடத்தியவர். சமத்துவ ஆட்சியை வழங்கிய சரித்திர புகழ் கொண்டவர். சமூக நல்லிணக்கத்தைப் போற்றிய பண்பாளர். பல மொழிகள் பேசும் திறன் உட்பட பல்வேறு நுட்பமான விஷயங்களில் பேராளுமையாகத் திகழ்ந்தவர். நமது கொள்கைத் தலைவர் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்கள் பிறந்த நாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம்.
#AdhavArjuna #tvk #vijaythalapathy #velunachiyar #tnelection2026
'எல்லோருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை' என்ற சுதந்திர சமூகத்தை அடைவோம், 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற சமத்துவ சமூகத்தைப் படைப்போம், 'எல்லாரும் நம் உறவுகள்' என்ற சகோதரத்துவ வாழ்வை உறுதிப்படுத்துவோம் என்று கூறி, அனைவருக்கும் பேரன்பும் பெருமகிழ்வும் கொண்ட இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். #CMVijay2026
@TVKVijayHQ
சுதந்திரப் போராட்டத்தில் துணிச்சலான இளைஞராகப் பங்கேற்றவர். அடித்தள மக்களுக்கான போராட்டத்தில் அடிபணியா போராளியாகக் களம் கண்டவர். தொழிலாளர்கள், விவசாயிகள், விளிம்புநிலை மக்கள் என எளிய மக்களுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். அரசியல் அறத்தின் அடையாளம், நூற்றாண்டு பொதுவுடைமை இயக்கத்தின் முகவரி, தமிழ் நிலத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர், ஐயா. நல்லக்கண்ணு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#Adhavarjun #tvk #vijai #arasiyal #puthiyathalaimurai #suntv #news7 #kalaingartv #tnelection
@TVKVijayHQ@TVK_WORLD
மனிதகுலத்தின் அன்பையும், சமத்துவத்தையும் போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, குமரி மாவட்டம் அருமனையில் ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா புகழ்வாய்ந்தது. அந்தவகையில், இந்தாண்டு நடைபெற்ற 28-வது அருமனை கிறிஸ்துமஸ் விழா - சமூக நல்லிணக்க மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எனக்கு, அருமனை மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பும், பேரன்பும் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சகோதரத்துவமும், சமூக நல்லிணக்கமும் போற்றும் இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
#Adhavarjun #tvk #vijai #arasiyal #puthiyathalaimurai #suntv #news7 #kalaingartv #tnelection #JanaNayagan
@TVKVijayHQ
'அயலாரையும் உன்னைப்போல் நேசி. எளிய மக்கள் மீது கருணை கொள்பவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள்' என்று மனிதர்கள் இடையேயான அன்பையும், வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய உன்னத பண்பையும் போதித்தவர் இயேசு கிறிஸ்து. சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். பாமர மக்களின் நல்வாழ்விற்காக பாடுபட்டவர். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவ பாதையில் பயணித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் பெருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், சகோதரத்துவமும் சமூக நல்லிணக்கமும் போற்றும் எனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#Adhavarjun #tvk #vijai #arasiyal #puthiyathalaimurai #suntv #news7 #kalaingartv #tnelection
@TVKVijayHQ@actorvijay
'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்ற உலகப் பொது அறத்தை வலியுறுத்தியவர். 'சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை' என்ற கொள்கை பிரசாரத்தை வாழ்நாள் முழுக்க மேற்கொண்டவர். 'பெண்கள் விடுதலையே சமூகத்தின் விடுதலை, பெண் சுதந்திரம் என்பது மானுட உரிமையே தவிர, ஆண்கள் கொடுக்கும் சலுகை அல்ல' என்று சிந்தித்த தலைவர். பிறப்பால் கற்பிக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எப்போதும் பகைவர் தந்தை பெரியார். அனைத்துவித ஆதிக்கத்தையும் பெயர்தெடுக்கும் கடப்பாரை, மதவாத அரசியலுக்கு எதிரான நிரந்தர கொள்கை அரண், சமூகநீதி அரசியலின் அணையாச் சுடர், நமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று, அவர் பெரும்புகழைப் போற்றுவோம்.
#Periyar #Adhavarjun #tvk #vijai #arasiyal #puthiyathalaimura #tnelection
@TVKVijayHQ@TVK_WORLD
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு, அதிகாரத்தின் வலிமையை அசைத்துப் பார்த்திருக்கிறது. மக்களின் உரிமைகளை, அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை எல்லாம் பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தி வரும் மாண்புமிகுக்களுக்கு எதிராக, 'என் மக்கள் மானத்தோடு, மரியாதையோடு, கௌரவத்தோடு வாழ வேண்டும். என் மக்கள் யாருக்கும் கீழே கிடையாது' என்று சாட்டை சுழற்றியிருக்கிறார் நம் மக்கள் தலைவர். கொள்கை விளம்பரத்திற்கு ஒருபக்கம், பேசும் மேடைகளில் மறுபக்கம் என எல்லா விதத்திலும் தந்தை பெரியாரை இழிவுபடுத்திவரும் ஆதிக்க கூட்டத்தை, மக்களும் பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகமும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். 'தீயசக்தி' திமுக-வின் ஆணவ அரசியலுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகிவிட்டனர். உண்மையான மக்களாட்சியையும், மக்களில் ஒருவரான நம் கழகத் தலைவரையும் தேர்ந்தெடுக்க உறுதியெடுத்துவிட்டனர். கழகத் தலைவர் அவர்கள் கூறியபடி, 'நாம் எப்பொழுதுமே மக்கள் பக்கம்தான். அதேமாதிரி, மக்களும் இனி எப்போதும் நம் பக்கம்தான்!'
#Adhavarjun #tvk #vijai #arasiyal #puthiyathalaimurai #suntv #news7 #kalaingartv #tnelection #JanaNayagan
@TVK_WORLD@TVKVijayHQ
'பெண்கள் நலனைப் போற்றும் அரசு, பெண்களுக்கான அரசு' என தொடர்ந்து விளம்பரம் செய்துவரும் திமுக அரசு, உண்மையிலேயே பெண்களுக்கு என்ன செய்திருக்கிறது? இன்று உரிமைக்காகப் போராடிவரும் பெண் செவிலியர்களை மோசமாக ஒடுக்கி வருகிறது திமுக அரசு. இதுதான் பெண்கள் நலனை நீங்கள் காக்கும் விதமா? 'தொகுப்பூதிய பணியாளர்களைப் பணி நிரந்தம் செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' உட்பட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுகிறார்கள் செவிலியர்கள். தேர்தல் வாக்குறுதியில் அவர்களை நம்பவைத்து ஏமாற்றியது திமுக. இன்று, ஜனநாயக அற வழியில் அவர்கள் போராடும்போது, இரவோடு இரவாக அவர்கள் போராட்டத்தைக் கலைத்தது, பெண்கள் என்றும் பார்க்காமல் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வது என சர்வாதிகாரத்தின் முழு அடையாளமாய் மாறியிருக்கிறது மக்கள் விரோத திமுக ஆட்சி. ''நாங்கள் எல்லாம் உங்கள் பிள்ளைங்க இல்லையா, உங்க அக்கா தங்கச்சி இல்லையா'' என்று கைதான ஒரு செவிலியர் சகோதரியின் அழுகுரலைக் கேட்கும்போது நெஞ்சம் கனக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நேரத்துக்கு ஏற்றாற்போல் மாற்றி மாற்றிப் பேசுகிறார். இத்தகைய பொறுப்பற்ற திமுக அரசுக்கு எனது வன்மையான கண்டனம். செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அவர்களோடு துணை நிற்போம். செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் (ஜாக்ட்டோ-ஜியோ) என அனைவரும் இன்று தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். அந்தளவிற்கு இந்த திறனற்ற திமுக ஆட்சி, அவலங்களின் சாட்சியாக மாறியிருக்கிறது. அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் அரசு ஊழியர்களைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராட்ட முடிவை நோக்கித் தள்ளினால் மாநில நிர்வாகம் எப்படித் திறம்பட நடக்கும்? மக்களுக்குப் போய் சேரவேண்டிய நலத்திட்டங்கள் எப்படிப் போய் சேரும்? இதைப்பற்றி எல்லாம் விளம்பரங்களிலும், புதுப்புது டிவி நிகழ்ச்சிகளிலும் மட்டுமே நிர்வாகம் செய்துகொண்டிருக்கும் திமுக அரசுக்கு அக்கறையிருக்கிறதா? அரசு ஊழியர்களின் எதிர்ப்பையும், பொதுமக்களின் கோபத்தையும் ஒருங்கே சம்பாதித்துள்ள இந்த திறனற்ற திமுக அரசுக்கு மக்கள் அனைவரும் இணைந்து தக்க பாடம் புகட்டுவார்கள்.
#Adhavarjun #tvk #vijai #arasiyal #puthiyathalaimurai #suntv #news7 #kalaingartv #tnelection
@TVKPartyHQ