சென்னை புறநகர் மாவட்டம்| Advocate | State AMMA Peravai Deputy Secretary |Kovilambakkam Panchayat Vice President | St Thomas Mount Union Councillor (2006-2011) |
தமிழ்நாடு அரசின் சார்பில், மேடவாக்கம் வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளை
நடத்தும் கோவிலம்பாக்கம் அரசு #மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான (Kho-Kho) போட்டியை இன்று தொடங்கி வைத்த மகிழ்ச்சியான தருணம்…
செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சுண்ணாம்புக்கொளத்தூர் பகுதியில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை புறநகர் பகுதியில் சுண்ணாம்புக்குளத்தூர் அருள்மிகு குபேர கணபதி மற்றும் ஸ்ரீ ராதா–ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் புணரூத்தாரன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.#kovilambakkam#sunnambukolathur#edapadipalanisamy#templefestival
News Update || Immature அமைச்சர் - இபிஎஸ்
ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது
Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர், இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ADMK | EPS
#HyundaiMotor #edappadipalanisamy
ரீல்ஸ் வெளியிட்டால்
முதலீடு வந்துவிடும் என்ற
மூட்டாள்தனமா சுத்தாதீங்க... @EPSTamilNadu Rockz 💥
HYUNDAI-கப்பல் கட்டும் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்...
இன்று கரூரில் மேடை…
இல்லை இல்லை… 41 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட இம்சை அரசன் வண்டியில் ஏறிய இன்றைய முதலமைச்சர், “கூட்டுக் களவாணிகள்” என்ற தரங்கெட்ட சொல்லை பயன்படுத்தியுள்ளார்.
யார் கூட்டுக் களவாணிகள்?
திமுக-வை எதிர்த்து 234 தொகுதிகளிலும் களம் கண்டு, இன்று வரை தனித்த அடையாளம் கொண்ட எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாங்களா?
அல்லது, திமுக-வின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்த திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இழுத்து, கூட்டுக் களவாணித்தனம் செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீங்களா?
“அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்?
ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பிம்ப முதல்வர் தான் நீங்கள்!
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் எத்தனை மக்களை சந்தித்தீர்கள்? மக்களுக்கான அரசியல் என்று என்ன பேசினீர்கள்?
குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல கூட அல்ல- மிட்டாய்க்கு அடம் பிடிப்பது போலவே அடம் பிடியுங்கள் என்று கூறி தவறான வழியில் வாக்கு கேட்ட நீங்கள் எல்லாம் பேசலாமா?
கரூர் துயரம் நடந்த போது “ஓடி ஒளிந்ததை” ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? விழுப்புரத்தில் முன்பொரு முறை பார்த்த உங்கள் ஓட்டத்தை திருச்சி விமான நிலையத்தில் தமிழகமே பார்த்ததே?
கரூர் துயரம் நடந்த மூன்றே மாதங்களில் மலேசியா ஆடியோ லாஞ்ச் மேடையில் “Blastu Blastu” என்று போட்டீர்களே… அது என்ன “ஜனநாயகக் குத்தாட்டமா?” மக்கள் துயரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் குத்தாட்டம் போட்ட நீங்கள் எங்களைப் பற்றி பேசுவதா?
@AIADMKOfficial மக்கள் நலத் திட்டங்கள் வழங்குவதில் ISI முத்திரை கொடுக்கும் அளவிற்கு மக்களுக்கு அள்ளிக் கொடுத்த பொன்விழா கண்ட இயக்கம்.
டயருக்கு அடியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கெல்லாம் எங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை!
“ஊரிலேயே நான் மட்டும் தான் ஒரே உத்தமன்” என்பது போல பிரசங்கம் செய்யும் இன்றைய முதலமைச்சர், அவ்வளவு பெரிய உத்தமராக இருந்தால், தனிப் பெரும்பான்மை இல்லாத, திமுக-வின் தயவில் அமையும் ஆட்சி எனக்கு தேவையில்லை என்று உதறிவிட்டு மறு தேர்தலை சந்திக்க வேண்டியது தானே? அதற்கு வக்கில்லாதவருக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு?
அதுவும் இன்றைய உரையில் ஒரு முதலமைச்சர் பேசக்கூடாத மொழியில் அவர் பேசுகிறார் . வெட்கக்கேடு!
இது தான் மக்களுக்கான அரசியலா?
இதனால் மக்களுக்கு எதாவது நன்மை இருக்கிறதா?
நீங்கள் கரூரில் “ஓடு ஓடு ஓடு” என்று பாடிக்கொண்டிருந்த வேளையில், ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முக்கிய முதலீடு தமிழ்நாட்டை விட்டு போனதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதைப் பற்றி எதாவது பேசுவீர்களா?
நாள்தோறும் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என மக்கள் அவதிப் படுவதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவீர்களா?
அதெல்லாம் இல்லை.
@CMOTamilNadu அவர்களே- எதிரிகளே இல்லை என்று 6 மாதத்திற்கு முன்னால் சொன்ன கட்சி இன்று தோல்வியை சந்தித்து எதிர்கட்சி வரிசையில் இருக்கிறது.
நான் எப்போதும் சொல்வது போல, காலச்சக்கரம் சுழலும்- இன்று கீழே இருப்பது நாளை மேலே வரும்!
(Or in Your Words, “வாழ்க்கை ஒரு வட்டம்!”)
பதவி வரும்போது பணிவு வரவேண்டும்!
ஆட்சி இருக்கும் ஆணவத்தில் தரம் தாழாதீர்கள்!
மக்கள் பகுத்தறிந்து பார்த்தால் இந்த ஆட்சி இமைப் பொழுதில் பல்லிளித்து விடும்!
We are waiting..!!
(பி.கு. : #KarurTragedy வழக்கில் நீங்கள் சொல்வது மட்டுமே வேதவாக்கு அல்ல. CBI விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அதன் உண்மைகள் எல்லாம் வெளிவந்த பிறகு எது யார் தவறு என்பதெல்லாம் மக்களுக்கு புரிய வரும். அதுவரை, Wait and See!)
கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களை இன்று சென்னை ராயப்பேட்டை இல்லத்தில், சென்னை புறநகர் மாவட்டக் கழக பகுதிச்செயலாளர்கள் மற்றும் ஒன்றியச்செயலாளர்களுடன் இணைந்து சந்தித்த மகிழ்ச்சியான தருணம்.
முதல்வர் எம்ஜிஆர் ஒரு கல்லூரி விழாவுக்கு சென்றார். அவர் அங்கு பேசியது சில வார்த்தைகள்தான்.
"மாணவர்களே,
நான் இன்று இந்திராகாந்தி முதல் அமெரிக்க அதிபர் வரை பேசும் செல்வாக்கு உடையவன்.என்னை அனுதினமும் சந்திக்க காத்துக் கிடக்கும் கோடீஸ்வரர்கள் ஏராளம்; உதவி பெற வரிசையில் நிற்போர் ஏராளம்;தினமும் என் வீட்டில் பசியாருவோரும் ஏராளம்.
அப்படிப்பட்ட என்னால் வாங்க முடியாதது கல்வி.
எனக்கும் படிக்கும் ஆசை இருந்தது. ஆனால் அதைவிட பலமடங்கு வறுமை வீட்டில் இருந்தது. எனவே நடிக்க வந்துவிட்டேன்.
எனக்கு மட்டுமல்ல,உலகில்
எத்தனையோ பேருக்கு கிடைக்காத பாக்கியம் கல்வி.அது உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அரசியல் எப்பொழுதும் செய்யலாம்;உரிமைகளை எப்பொழுதும் கோரலாம்;ஆனால்
படிப்பு உரிய காலத்தில் இல்லாவிட்டால் படிக்க முடியாது.
என் செல்வங்களே,
எனக்கு கிடைக்காத கல்வி உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அதை நல்ல முறையில் படித்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனுள்ள மனிதர்களாக வாழுங்கள்.
அதனால்தான் இன்றளவும்
காமராஜரை என் வழிகாட்டியாக கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு என சோறு போட்டு படிக்க வைக்கும்
முயற்சியினை நான் எடுக்கின்றேன்.எனக்கும் இப்படி சோறு போட அன்று ஒரு அரசு இருந்திருந்தால், நான்காம் வகுப்பை தாண்டாதவன்
எனும் அவமானத்தோடு நான்
உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டேன்!"
எம்ஜிஆர் பேச பேச அரங்கத்தில் அமைதி.மாணவர்கள் முகத்தில் சலனமின்றி உறைந்தனர்.
விழாவுக்கு வந்திருந்த பெற்றவர்கள் கண்களில் கண்ணீர் வழிய கையெடுத்து அவரை வணங்கி கொண்டிருந்தனர்.
எனவேதான் அவர் மக்கள் திலகம்!
@AIADMKOfficial@EPSTamilNadu
@Saattaidurai தங்களுடைய சேனலின் பேக்கிரவுண்டில் எங்களுடைய கழக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்களின் படம் இடம்பெறாதது வருத்தத்தை அளிக்கிறது.தங்களுடைய சாட்டை யூடியூப் சேனலின் பேக்கிரவுண்டில் எடப்பாடியார் அவர்களின் படத்தையும் இடம்பெற தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
@Saattaidurai சகோதரர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வணக்கம்.
தங்களுடைய யூடியூப் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல்வேறு அரசியல் நிகழ்வுகளை துணிச்சலாக எடுத்துரைக்கும் தங்களுடைய முயற்சிக்கு என் பாராட்டுகள்.
அதே நேரத்தில், ஒரு சிறிய அன்பான வேண்டுகோள்.
ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி அமைச்சரவைக் கூட்டத்தில் தவெக ஆதரவாளர்கள் கலந்துகொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டு, மேதகு ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள்
@mafoikprajan@EPSTamilNadu வாழ்த்துக்கள் அண்ணா! நிச்சயமாக கழகம் மீண்டு வரும்; மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்கும். தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக மீண்டும் திகழும். நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!
கழகமே எங்கள் கோயில் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் , புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் எங்கள் குலதெய்வங்கள், புரட்சித்தமிழர் எங்களை வழி நடத்தும் ஆசான் . என்றேன்றும் அதிமுககாரன்…….
#kovilambakkam#aiadmkitwing#edapadipalanisamy